ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 140


K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 218
Topic starter  

அன்பர்களே

                          இயக்குனர் ஸ்ரீதர் குறித்து நா ன் அறிந்த வற்றை  எனது நினைவாற்றல் மற்றும் எழுதும் உத்திகள் கொண்டு, இயன்றவரை சுவை குன்றாமல் பகிர்ந்துள்ளேன். இதில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் ஒரு சில நீங்கலாக மற்ற அனைத்தும் எனது பள்ளி, கல்லூரி பின்னர் பணியில் இருந்தபோது நான் அறிந்திருந்தவை. கையில் குறிப்பேதும் என்னிடம் இல்லை. எனவே தவறேதும் இருப்பதாக தோன்றினால் அது எனது தனிப்பட்ட தவறே அன்றி வேறு எவரும் பொறுப்பாளி அல்லர்.

                        எனினும் நான்  பல தருணங்களிலும் வெளிப்படுத்தி உள்ளது போல, ஸ்ரீதரை என் வாழ்வில் ஒரு தடவையாவது சந்தித்து சில விளக்கங்களை கேட்டு பெறவேண்டும் என்று 2008 ம் ஆண்டு வரை கூட ஏங்கியது உண்டு, ஆனால் விதியின் விளையாட்டு வேறு வகையானதன்றோ? அவரை சந்திக்கும் முன்னரே அவர் மறைந்து விட்டார். சொல்லப்போனால் அவர் மறைந்த அன்று நான் மும்பையில் இருந்தேன்,மறுநாள் Times of  INDIA பத்திரிகை ஸ்ரீதரின் மறைவை அறிவித்திருந்தது.. இந்தியா GLITZ நிறுவனத்தின் வீடியோ தொகுப்புகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.அவ்வமயம் எம் எஸ் வி பொங்கிப்பொங்கி அழுதது இப்போதும் என் மனத்திரையில் வந்து போகிறது.. ஆமாம் இரு ஜாம்பவான்களும்  இப்போது நம்மிடையே இல்லை. அவர்தம் ஆக்கங்கள் அவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருப்பது சற்று ஆறுதல் தருகிறது. ஆயினும் தமிழ்த்திரை யின் ஆளுமைகள் மறைந்து கொண்டே இருப்பதையும் நாம் சந்தித்து வருகிறோம்.   ஒரு சிறு ஆறுதல் யாதெனில் , புதிய தலைமுறையினருக்கு அன்றைய  தமிழ் சினிமாவின் சிறப்புகளை சிறிதேனும் தர முடிந்ததே என்பது தான். அவ்வகையில் வாய்ப்பளித்த திரு விஜயகிருஷ்ணன் மற்றும் பிற தள  அன்பர்களுக்கும்  அனைத்து வாசகர்களுக்கும் உளமார நன்றி பாராட்டி தொடரை நிறைவு செய்கிறேன்.  

நன்றி யுடன்      அன்பன்   ராமன்   மதுரை ,

 

 

 


Quote
Share: