ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் 138


K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 218
Topic starter  

                                                      அவர் ஒரு துல்லியமான இயக்குநர்

அவரை நான் எனது ப;ள்ளிப்பருவத்திலிருந்தே  கூர்ந்து கவனித்து வந்தேன். பிறர் போடங்களில் இல்லாத ஏதோ ஒன்று அவர் இயக்கத்தில் பளி ச்சிடுசுவதாக எனக்கு தோன்றியது./ அது என்ன என்று சொல்லத்தெரியாத 12-13 வயதில் அவர் என்னை ஈர்க்க த்துவங்கிவிட்டதென்னவோ உண்மை. ஒரு ஆரம்ப ஈர்ப்பின் காரணமாக நான் அடிமைப்பட்டு விட்டேன் என்று முடிவு கட்டவோ அல்லது குருட்டுத்தனமான துதி பாடல் என்றோ என்னை வகைப்படுத்திட இயலாது .ஏனெனில் அவரது அனைத்து நுணுக்கங்களையும் பலமுறை திரும்பத்திரும்ப எடைபோட்ட பின்னரே ஸ்ரீதரை நன்கு அலச முற்பட்டேன். ஆங்கிலத்தில் "TREATMENT " என்று கதையை நகர்த்தும் உத்தியை குறிப்பிடுவார்கள் அந்த வித்தையை ஸ்ரீதர் மிகச்சிறப்பாக பயன்படுத்தினார் எனில் மிகை அன்று .

சில பளிச்சிடும் முத்திரைகள்

'அக்கா  போய்ட்டுவரேன்'

இதனை அறியாத சிறுவனோ சிறுமியோ தமிழ்நாட்டில் 1960 களில் இருந்ததில்லை என்று அடித்துச்சொல்லலாம் . தான், வீட்டை  கிளம்பப்போவதை அக்காவிடம் சொல்வது போல் 'அவனுக்கும்' ஒரு பெண் சொல்லும் உத்தியாக அமைக்கப்பட்ட 'காதல் வெளிப்பாடு ' கல்யாண பரிசு படத்தில்.தமிழ் சினிமாவில் நாசூக்காக உணர்த்தப்பட்டு காதல் அரும்புவதை மென்மையாக சித்தரித்த இயக்குனர் - அதுவும் தனது முதல் இயக்கத்தில் .

‘காதலர்களை சுடலாம் , காதலை சுட முடியாது’ . நெஞ்சம் மறப்பதில்லை

வெறியுடன் காதலர்களை கொல்ல முற்படும் தகப்பனை பார்த்து மகன் விடுத்த அறைகூவலாக அமைந்த வசனம், காதலின் ஸ்திரத்தன்மையை உணர்த்துவதாக  காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

'நம்ம வீட்டுல எவனாவது ஒருத்தன் தண்டச்சோறு திங்கணும் னு எழுதியிருக்கு ' 'சுமை தாங்கி '   இந்த ஒற்றை வரியும்,காட்சி அமைப்பின் விறுவிறுப்பும் கதையையும் அதன் சுவையையும் திசை மாற்றி படத்தின் விறுவிறுப்புக்கு வித்திட்டது.

நீ அவனோட பேசக்கூடாது . ஏன் ?  அவன் கெட்டவன்  -- ஜெமினி கணேசன்

ஓ -- அவன் நல்லவனா இருந்தா அவனோட பேச விடுவீங்களா -- பாரதி அவளுக்கென்று ஓர் மனம்

இந்த காட்சியில்   கேமரா ஒரு சிறப்பான கோணத்தில் பாரதியின் முக  பாவங்களை சிறைப்பிடித்திருக்கும்  சிறப்பு இயக்குனரின் திறமைக்கு சான்று..

சுமைதாங்கி கிளைமாக்ஸ் காட்சியின் தனிச்சிறப்பே "  பாபு" என்ற ஒற்றை            

விசும்பலுடன் அமைதியே உருவாக காட்சியை நகர்த்தி இருப்பது தான் .

கா , நே இல் அவ்வப்போது முடிச்சுகளை உருவாக்கி அவற்றை நகைச்சு வை யாகவே நகர்த்தி படத்தை தொய்வில்லாமல் இயக்கி இருப்பது அவரின் திறமைக்கு சான்று.

24,000 ரூபாய் காரை 33,000 க்கு வாங்கியதாக புளுகி நிலைமையை சமாளித்த முத்துராமன் , பின்னர் போன் பேசும் போது "அப்பா நம்ம காருக்கு நல்ல விலை வந்தது,   குடுத்துட்டேன்" என்று காட்சிகளை சரியாக பிணைத்திருப்பது அவரை ஒரு துல்லியமான இயக்குனராக மேலும் அடையாளப்படுத்தியுள்ளது.இது போல பல நுணுக்கங்களை ஸ்ரீதரிடம்  நான் கண்டு வியந்திருக்கிறேன்.

மேலும் வளரும்    அன்பன்  ராமன்       மதுரை.


Quote
Share: