ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 137


K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 218
Topic starter  

                                                       ஸ்ரீதர் ஏன் பாராட்டுக்குரியவர் - எனது புரிதல்

அன்பர்களே                      

துணைத்தலைப்பிலேயே   எனது புரிதல்  என்று   அடையாளப்படுத்தியுள்ளேன் ; எனவே இதில் எதிர் வாதங்கள் வைப்போருக்கு வாய்ப்பில்லை என தெளிவு படுத்துகிறேன். மேலும்  வேறெந்த இயக்குனருடனும்  ஸ்ரீதரை நான் ஒப்பிட்டு ப்பேசவில்லை எனவும் தெரிவிக்கிறேன் . ஆயினும் ஒப்பீடுகள் வாசகர் மனதில் வந்து போனால் அடியேன் பொறுப்பல்ல.

அநேகமாக கருப்பு வெள்ளை காலத்தில் ஸ்ரீதர் ஏற்படுத்திய தாக்கம் ஒரு தனி வகையானது. ஏனெனில் நட்சத்திர அந்தஸ்து அவரை ஈர்த்ததில்லை \ எனினும் சில யாரிப்பாளர் அல்லது தொழில் வகை தேவைகளுக்கு ஏற்ப உயர் ந்த நட்சத்திர கலைஞர்களை உபயோகித்தும் உண்டு.

அவரது பரீட்சார்த்த முயற்சிகள் எதிலும் பெரும்  நட்சத்திரங்களை அமர்த்தியதில்லை. உதாரணமாக     நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ,  அலைகள், கலைக்கோயில் ,  கொடிமலர், காதலிக்க நேரமில்லை, வெண்ணிற ஆடை ,  அவளுக்கென்று ஓர் மனம் . பின்னவை ,மூன்றும் வண்ணத்தில்.

  ஐரோப்பா வோ, அயனாவரமோ , காட்சிக்கு தேவை எனில் தயங்காமல் செயல் படுவார். பாத்திரத்தின் தன்மைக்கேற்ப புது முகங்களை தேர்வு செய்வதில் தனி கவனம் செலுத்துவார். அப்படித்தான் ஸ்ரீகாந்த் மனோதத்துவ மருத்துவராக வெண்ணிற ஆடையில் அறிமுகம் ஆனார்.அதே போல மிடுக்கான போலீஸ் காரர் வேடத்திற்கு எஸ் வி சஹஸ்ரநாமமும் , நோயாளி வேடத்தில் முத்துராமனும், அட்டெண்டர் வேடத்தில் நாகேஷ் என அவரவர் பொறுத்தப்படி தேர்வு ஆகினர் .

அவரின் ஆக்கங்கள் பல தரப்பட்டவை . ஏழ்மையிலும் ,செல்வச்செழிப்பிலும் , இளமை முறுக்கிலும் ,மன முதிர்ச் சியிலும், காதலின்  தாக்கம் , வேலையின்மை , அனைத்து கதை வகைகள், பூர்வ ஜென்ம நினைவுகள் மனோதத்துவ ரீதியான அமைப்புகள் என்று அவர் பல தரப்பட்ட சுவையான படங்களை தந்தவர்.

இதிலென்ன வியப்பு என்று கேட்க தோன்றும். நாம் கருத்தில் கொள்ள வேண்டியது பின்வரும் பார்வையைத்தான்.

இத்துணை கதை வகைகளை எழுதி இயக்கி  இருப்பினும் எந்த படத்திலும் அவர் எந்த ஜாதீய அடையாளங்களையும் , பழக்க வழக்கங்களையும் திரைக்கதையில் நுழைத்ததே இல்லை.அது எவ்வளவு ஆரோக்கியமான அணுகுமுறை என்பதை இப்போது நான் சிலாகித்துப்பேச வேண்டியுள்ளது. ஆம் , பின்னாளில் பெரும் இயக்குனர்களாக அறியப்பட்ட பலர் இந்த ஜாதி வலைக்குள் சிக்கி அதனால் விமரிசனத்துக்கு விசனத்துக்கும் உள்ளானதை நாம் அறிவோம். இதில் நான்  சொல்ல வருவது யாதெனில் நல்ல க தை அம்சமும் சம்பவங்களும் அமைக்கத்தெரிந்தால் ஜாதியைத்தொடாமலே மனங்களைத்தொட முடியும் 

அவர்  தந்த நகைச்சுவையில் கூட நாசூக்கும், கௌரவமும் குறைந்ததே இல்லை. உயர் வகை காமெடி என்பது ஸ்ரீதரின் தனி முத்திரை . மேலும் அவர் நல்ல ரசனை மிக்க ரசிகர்களை தோற்றுவித்தார் எனில் மிகை அல்ல.

எனவே தான் நான் அவரை போற்றுதலுக்குரிய இயக்குனராக இன்றளவும் மதிக்கிறேன். எனது சமகால ரசிகப்பெருமக்கள்,  எனது பார்வையில் உள்ள நியாயத்தை ஏற்பர் என்று நம்புகிறேன் .

மேலும் வளரும்

அன்பன் ராமன்  மதுரை.


Quote
Share: