துணைவி முத்து மாணிக...
 
Notifications
Clear all

துணைவி முத்து மாணிக்க கண்கள் கவியரசு கண்ணதாசன் மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 129
Topic starter  

பாடல் - முத்து மாணிக்க கண்கள்
படம் - துணைவி (1982)
இசை - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
வரிகள் - கவியரசு கண்ணதாசன்
குரல் - மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி
ஒலிப்பதிவு - வி.சிவராம்

மெல்லிசை மன்னர் என்றாலே மெலோடி என்றே பொருள். அது கிளப் டான்ஸ் பாடலாக இருந்தால் கூட அதிலும் மெலடி, உணர்வு எல்லாம் நிறைந்திருக்கும். முதல் படத்திலிருந்து கடைசி படம் வரைக்கும் மெலோடியை விடவேயில்லை. 1982ல் வெளியான துணைவி படத்தில் இடம் பெற்று இன்று தொடரை அலங்கரிக்கும் முத்து மாணிக்க கண்கள் என்ற இந்த பாடலும் அதற்கு சான்று கூறும்.

மன்னருடன் நீண்ட காலம் பயணம் செய்த திரை விற்பன்னர்களில் வலம்புரி சோமநாதனும் ஒருவர். அவருடைய லலிதா திரைப்படம் இன்றும் மன்னர் புகழை பறை சாற்றிக்கொண்டிருக்கிறது. அதற்கு சற்றும் சளைக்காத படமே துணைவி. பாடல்கள் அனைத்துமே வித்தியாசமாக இருக்கும். 1976க்குப் பின் புதிய பரிமாணத்தில் உருவான மன்னர் பாடல்கள் வகையில் இன்றைய தேர்வுப் பாடலும் அடங்கும். 1960களில் அவர் அளித்த இசை வகையும் 80களில் அவர் அளித்த இசை வகையும் தான் எத்தனை வேறு படுகிறது. அவரா இவர் என்று வியக்கும் அளவிற்கு எல்லா தலைமுறையினரையும் ஈர்க்கும் வித்தையை அவர் அறிந்து வைத்திருந்தார். அந்த வரிசையில் இன்றைய பாடலும் ஒன்று. குறிப்பாக இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பான பாடல்.

கதை காட்சி சூழல் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் பாடலைக் கேட்டுக்கொண்டே இருந்தாலே போதும்.

பாடல் காட்சியில் நடித்திருப்பவர்கள் சுதாகர் மற்றும் தகரா மலையாளப்படப் புகழ் சுரேகா. பாடல் காட்சிக்கான இணைப்பு தரப்படுகிறது. சற்று நெருக்கமான காட்சிகள் Glamor உண்டு. Viewer’s discretion is better.

https://www.youtube.com/watch?v=hjILk-ca-a0


Quote
Share: