கீழ்வானம் சிவக்கும்...
 
Notifications
Clear all

கீழ்வானம் சிவக்கும் பொன்னான உலகம் எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.ஷைலஜா கவிஞர் கண்ணதாசன்


veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 129
Topic starter  

: பாடல் – பொன்னான உலகம்
படம் – கீழ்வானம் சிவக்கும் (1981)
வரிகள் – கவிஞர் கண்ணதாசன்
குரல் – எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி.ஷைலஜா
ஒலிப்பதிவு - ஜே.ஜே.மாணிக்கம்

தன் திரையிசைப் பயணத்தில் எல்லா சவால்களையும் வெற்றியுடன் எதிர்கொண்டு வீரநடை போட்டவர் மெல்லிசை மன்னர். தான் துவங்கிய கால கட்டத்தில் மிகப்பெரிய ஜாம்பவான்களை எதிர்கொண்டு நடை போட்டவர். அதில் போட்டியும் பலமாக இருந்தது. அதற்குப் பிறகு நீண்டகாலம் ராஜநடை போட்டு வந்தவருக்கு 70களின் பிற்பகுதியிலிருந்து வித்தையைத் தவிர மற்ற எல்லா வகையிலும் சவால்கள் நிறைந்திருந்தன. இது போன்ற வர்த்தக ரீதியான போட்டியில் அவருடைய கவனம் எப்போதுமே சென்றதில்லை என்பதால் இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் என்ன, கலைவாணியின் அருள் பரிபூரணமாக அவருக்கு இருந்ததால் தன் திறமையால் அவற்றை எளிதாக எதிர்கொண்டு தொடர்ந்து வீரநடை போட்டார் மன்னர்.

அந்த காலகட்டத்தில் அவருடைய படைப்புகள் முன்னெப்போதையும் விட மிகவும் வீரியம் கொண்டு சமகாலப் படைப்புக்களுக்கு சவால் விடும் வகையில் நவீன இசையிலும் ஆளுமையை நிரூபிக்கும் வண்ணம் அமைந்தன. குறிப்பாக 80களில் அவருடைய படைப்புக்கள் இன்று நினைத்தால் நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. மின்னணு இயந்திரங்களிலும் கூட ஜீவனை வரவழைக்க முடியுமா என்றால் முடியும் என்று மெய்ப்பித்துக்காட்டினார்.

அப்படிப்பட்ட உன்னதங்களைத்தான் இத்தொடர் கண்டு வருகிறது. அந்த வரிசையில், 1981ம் ஆண்டில் வெளியான கீழ்வானம் சிவக்கும் படத்திலிருந்து பொன்னான உலகம் என்ற பாடல் இன்று இடம் பெறுகிறது.

கவியரசர் கண்ணதாசன் அமரரான சில நாட்களிலேயே வெளியான படம் கீழ்வானம் சிவக்கும். கண்ணதாசன்-எம்.எஸ்.வி.-எஸ்.பி.பாலா-எஸ்.பி.ஷைலஜா – இந்த இணையின் கடைசிப்பாடல் இதுவாகத்தான் இருக்க்க்கூடும். அண்ணனும் தங்கையும் இணைந்து பாடிய அற்புதமான டூயட்.

பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தாலே போதும். காட்சி விளக்கம், கதை, சூழ்நிலை, போன்றவை தெரியாவிட்டாலும் ரசிக்கக்கூடிய பாடல்.

மன்னர் இசையில் இப்பாடலில் ஒரு அம்சத்தை குறிப்பிடவேண்டும். பாடல் முழுதும் கூடவே ஒரு Bass Guitar / Double Bass பயணிக்கிறது. மிகவும் ரம்மியமாக ஒலிக்கிறது. ஹெட்ஃபோன் வைத்துக் கேட்டால் இந்த இசையை துல்லியமாக கேட்டு ரசிக்கலாம்.

இன்னொரு அற்புதமான பாடலுடன் மீண்டும் சந்திப்போம்.
https://www.youtube.com/watch?v=oHSwx3caFrA
[


Quote
Share: