Notifications
Clear all

1964 VAAZHKAI VAAZHVATHARKE AATHORAM MANALEDUTHU


M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
Topic starter  

மெல்லிசைமன்னர் பெரிதும் மதிக்கும் தயாரிப்பு நிறுவனமான கமால் BROS தயாரித்த ப் படம்
ஜெமினிகணேசன் சரோஜா தேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தப் படம்
கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் கதைக்கு முரசொலி மாறன் வசனம் எழுத கிருஷ்ணன் பஞ்சு இயக்கியப்படம்
இரட்டையரின் இயக்கத்திற்கு இரட்டையர் இசை .கவியரசு பாடல்கள் புனைந்தார்

best Regards
vk


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
Topic starter  

1 Avan Porukkup Ponaan P. Suseela
2 Naan Paadiya Paadal P.B.Sreenivas, P.Suseela
3 Azhagu Rasippatharke – Vaazhkkai Vaazhvatharke P. Suseela, chorus
4 Aadakkaanbathu Kaaviri Vellam P. Suseela, K. Jamuna Rani
5 Aathoram Manaleduthu Latha, Ramamani
6 Aathoram Manaleduthu – Pathos P.B.Sreenivas, P.Suseela
7 Nenjathil Iruppathu Enna Enna P.B.Sreenivas, P.Suseela
8 Pache Kuthaliyo – Azhagana Malayalam L.R.Eswari

இந்தப்படத்தில் இடம் பெற்ற இரட்டைக் குரலான சிறுமியர்கள் லதா ரமாமணி பாடிய ஆத்தோரம் மணலெடுத்து என்ற பாடல் மிகவும் பிரபலமானப் பாடல் .
அந்தப் பாடலைப் பாடிய அந்நாளைய சிறுமிகளில் ஒருவரான இந்நாள் திருமதி ரமாமணி அவர்களை தொடர்பு கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது .அவர்களின் நேர்க்காணல் இதோ

https://youtu.be/4wy-RTMiscM

best Regards
vk


kothai liked
ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
 

Congrats VK for tracing out one of the singers. I don't think there was any news published about the singers during the film's release and later. Many might have thought, including me, that Ms Ramamani must have been a one song wonder (as Latha appears to have sung few numbers later for MSV viz, "Yendiyamma Ithukku Peru Naagareegama" from Manippayal and "Kanna Nee Vaazhga" from Manithathil Manickam). It's really a great news that she has also sung two more songs. When Mr Annadurai Kannadasan mentioned the singer of "Yesunadhar Varuvaar" as M.S.Rajeshwari I immediately recognized that he was wrong and the singers were L.R.Anjali and Ramamani and I was not wrong.

Thanks for the wonderful share.


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
 

பாடல் : ஆத்தோரம் மணலெடுத்து (Happy)
படம் : வாழ்க்கை வாழ்வதற்க்கே
பாடியவர்கள் : லதா, ரமாமணி
பாடலாசிரியர் : கண்ணதாசன்
இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி
வருடம் : 1964

அனைவருக்கும் வணக்கம்.

இன்று சமூகத்தில் வாழ்க்கை முறை எவ்வளவோ மாறி விட்டது - குறிப்பாக 90-களின் ஆரம்பத்திலிருந்து. அது வரை நாம் கடைபிடித்துக்கொண்டிருந்த வாழ்க்கையின் நெறி முறைகள், பண்பு, பண்பாடு, கலாச்சாரம் என எல்லாவற்றையும் விட்டெறிந்து எப்படியெல்லாமோ வாழ ஆரம்பித்துவிட்டார்கள். மேலைநாட்டவர்கள் நம்மை கண்டு வியப்பதே நமது கட்டுக்கோப்பான வாழ்க்கை, பண்பு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் இவற்றை எல்லாம் தான். ஆனால் இன்று நமது கலாச்சாரம் / பாரம்பரியம் ஆட்டம் கண்டுவிட்ட நிலையில் உள்ளது. இதற்க்கு காரணம் நம்மவர்கள் மேலைநாட்டவர்கள் கலாச்சாரத்தை (அப்படி ஒன்று உண்டென்றால்) / வாழ்க்கை முறையை பின்பற்ற ஆரம்பித்தது தான்.

இன்று கூட்டுக்குடும்பம் என்றால் என்ன என்று கேட்க்குமளவிற்கு ஆகிவிட்டது. அட விடுங்க, குடும்பம் என்ற ஒன்றே இல்லாமல் போய்விடும் நிலையில் அல்லவோ நாம் உள்ளோம். ஆமாங்க, ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு அவர்கள் குழந்தை பெற்றேடுக்கும் போது தானே ஓர் குடும்பம் உருவாகிறது. ஆனால், இப்போதைய நிலை என்ன - ஒன்று திருமணம் நிச்சயம் ஆன மறுநாளே அல்லது திருமணம் ஆன மறுநாளே இருவரும் ஏதாவதொரு காரணத்தை சொல்லி பிரிந்து விடுகிறார்கள். பலரோ திருமணம் செய்து கொள்ளாமலே "living together" என்ற பெயரில் சில காலம் சேர்ந்திருந்து பிறகு பிரிந்துவிடுகிறார்கள், பின்னர் மீண்டும் தாத்காலிகமாக ஓர் துணையை தேடுகிறார்கள். இன்று பலபேருக்கு பிள்ளைகளே பிறப்பதில்லை. பெரும்பாலானோர் பிள்ளைபெற்றுக்கொள்ளவே விரும்புவதில்லை. அட, அதையும் விடுங்க, திருமணமே வேண்டாம் தனிமரமாகவே வாழ்ந்துவிட்டு போகிறேன் என்ற எண்ணம் கொண்ட பெண்களும் அன்றோ இன்று அதிகரித்துக்கொண்டு வருகிறார்கள். அதனால் தான் கூறினேன் குடும்பமே உருவாவதில்லை என்று. And there is no room for sentiments too.

80-துகளின் கடைசி வரை இருந்துவந்த நிலைமை இதுவல்ல - அதாவது நமது தலைமுறை வரை - இன்னும் விரிவாக சொல்லவேண்டும் என்றால் இப்போது ஐம்பது-அறுபது வயதை தாண்டியவர்கள் - ஓரளவிற்கு கட்டுக்கோப்பான வாழ்க்கை தான் நடத்தி வந்தார்கள் - நம் முன்னோர்கள் வழிவகுத்த வாழ்க்கை நெறி முறைகளை கடைபிடித்து. பண்பு, பண்பாடு, கலாச்சாரம், ஆச்சாரம் / அனுஷ்டானங்கள் எல்லாம் ஓரளவுக்காவது கடைபிடிக்கப்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக பெண்கள் மிகவும் கட்டுக்கோப்பான வாழ்க்கை நடத்திவந்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். தனக்கென்று ஒரு குடும்பம் அமைத்து, கணவன், பிள்ளைகள், கணவன் வீட்டார்கள் என்று எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு பண்புடன் வாழ்ந்து, பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் ஓரளவுக்கு காப்பாற்றிவந்தார்கள். கணவன் எப்படியிருந்தாலும், அவனது வீட்டார்கள் எப்படியிருந்தாலும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு, அனுசரித்துக்கொண்டு புகுந்தவீட்டை விட்டு வெளியேறாமல் இருந்த காலம் அது - அதற்க்கு பல காரணங்கள் உண்டு, அது வேறு விஷயம்.

அந்த காலகட்டத்து பெண்களின் வாழ்க்கை பயணத்தை சித்தரிக்கும் பாடல்கள் தான் இந்த வாரத்தில் இடம்பெறப்போகும் பாடல்கள் - பால்ய காலத்திலிருந்து முதுமை வரை.

அன்றைக்கெல்லாம் பெற்றோர்கள் - குறிப்பாக அன்னை - அல்லது தாத்தா-பாட்டி - அல்லது குடும்பத்தின் மற்ற பெரியவர்கள் குழந்தைகளுக்கு பண்பு, பண்பாடு, கலாச்சாரம், ஆச்சாரம்-அனுஷ்டானங்கள் இவற்றை சொல்லிக்கொடுத்து வளர்த்தார்கள். இப்படி தான் வாழவேண்டும் சிறுவயதிலேயே அடித்தளம் போட்டு வளர்த்தார்கள். வளர்ந்த பின் அவர்களும் அதை ஓரளவுக்கு கடைபிடித்து வாழ்ந்தார்கள் என்று தான் சொல்லவேண்டும். விளையாடும் போது விளையாட விட்டு, படிக்கும் நேரத்தில் படிக்க வைத்து, மற்ற நேரங்களில் நல்ல எண்ணங்கள், சிந்தனைகள், தத்துவங்கள் இவற்றோடு இறை வழிபாட்டின் முக்கியத்துவத்தையும் சொல்லி வளர்த்தார்கள். வாழ்க்கைக்கு உதவக்கூடிய பல விஷயங்களை விளையாட்டு வழியாக போதித்தார்கள் -

பல்லாங்குழி : சேமிப்பது எப்படி, calculative ஆக எப்படி செயல்படுவது, பங்கிட்டு வாழ்தல் என பலவற்றை மிகவும் சாதுர்யமாக எடுத்துரைத்தது.

பாண்டி விளையாட்டு : சிந்தித்து செயல்படுதல், இருண்டு போகும் வாழ்க்கையை மனோதிடத்தால் வழிநடத்துதல், வாழ்க்கை சுமையை எப்படி balance செய்து நடத்துதல், இக்கட்டான சூழ்நிலையில் யோசித்து செயல்படும் திறன் இவற்றை எடுத்துரைத்தது.

மண்வீடு கட்டுதல் / அம்மா அப்பா விளையாட்டு : வீடு கட்டி அதை எப்படி காப்பாற்றுவது, குடும்பத்தை எப்படி நடத்தவேண்டும் என்று கற்று தந்தது.

இது போன்ற பல விளையாட்டுகள் சிறு வயதிலேயே இப்படி பல விஷயங்களை குழந்தைகள் மனதிலே ஆழமாக பதியவைத்தன. இப்படி மனதில் பதிந்து விட்டதை, வளர்ந்த பிறகு அவர்களையும் அறியாமல் தேவை ஏற்படும் போது / சந்தர்பம் வரும் போது செயல்படுத்தினர்.

இப்போது இந்த பாடலுக்கு வருவோம். கள்ளம் கபடமறியாத பால்ய பருவத்து இரு குழந்தைகள் பாடும் பாடல். இங்கு அவள் தன் முறைப்பையனுடன் ஆத்தோரம் மணல் வீடு கட்டி எப்படியெல்லாம் வாழப்போகிறோம் என்று கனவு காண்கிறாள். சிறு வயதிலேயே இவள் உனக்கு தான், இவன் உனக்கு தான் என்று வளர்க்கப்படும் நாயகன் நாயகி. இது போதாதென்று அவள் கையில் அவன் பெயரையும், அவன் கையில் அவள் பெயரையும் பச்சை குத்துகிறார்கள் இது பின்னாளில் ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டுகொள்ள உதவுகிறது). அவர்களும் அதை மனதில் வைத்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவர் அன்பும் பாசமும் வைத்து வளர்க்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவி செய்து கொள்கிறார்கள். அவன் அழுதாள் அவள் மனம் துடிக்கிறது. அவள் அழுதாள் அவன் மனமும் துடிக்கிறது. பள்ளிக்கூடம் போவது, விளையாடுவது என்று எப்போதும் சேர்ந்தே இருக்கிறார்கள். ஆனால் விதி தன் சதியை செய்கிறது. சிறு வயதிலேயே நாயகன் முதலில் தன் தாயை பிரிந்து வாழ நேரிடுகிறது. பிறகு அடைக்கலம் கொடுத்த மாமன் குடும்பத்தையும் பிரிய நேரிடுகிறது. அவன் அவள் நினைவிலேயே வாழ்கிறான். அவளும் அவ்வண்ணமே. பிரிந்தவர்கள் ஒன்று சேர்கிறார்களா என்பது மீதி கதை.

இந்த பாடல் சிறுபிள்ளைகளாக இருக்கும் போது அவர்கள் பிரிந்து போவதற்கு சற்று முன்பு இடம் பெறுகிறது. இது ஹாப்பி version. இந்த பாடலுக்கு பிறகு ஓர் pathos version-னும் உள்ளது. அந்த காலத்தில் பார்த்தீர்களானால் மாமியார்க்காரி என்றால் மிகவும் கொடுமைக்காரி என்பது போல் தான் கருதப்பட்டது - மருமகளை எதோ வேற்று மனுஷி போலவும், அடிமை போலவும் தான் நடத்தி வந்தார்கள் - மாமியார்-மருமகள் ஒற்றுமையாக வாழ்ந்த கதைகள் மிகவும் அபூர்வம் என்றே சொல்லலாம். அது போல், பெண்ணின் தகப்பனாரையும் பணம் / பொருள் கறக்கும் ஒரு கருவியாக தான் பார்த்தார்கள். மாப்பிள்ளை முன் அவர் எதோ அடிமை போல் கைகட்டி நிற்கத்தான் வேண்டும். அவர் வயதுக்குரிய மரியாதை அவருக்கு கிடைத்ததா என்றால் இல்லை என்று தான் பதில் வரும். மாப்பிள்ளை எத்தனை காலமானாலும் "மாப்பிள்ளை முறுக்கு"டன் தான் இருப்பார். சகஜமாக பழகவே மாட்டார். இதை கவிஞர் நாசூக்காக சாடுகிறார் - இது தவறு என்று சொல்லியல்ல - உலகுக்கே எடுத்துக்காட்டாக நாங்கள் இப்படி வாழ்வோம் என்று கூறி –

பல்லவியில் வீட்டை எப்படி பார்த்து பார்த்து கண்டவேண்டும் என்றும், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான காய்கறி வகைகளை வீட்டிலேயே பயிரிட்டு எப்படி self sufficient / self content ஆக இருக்கவேண்டும் சொல்கிறார். முதல் பல்லவியில் வாஸ்துப்படி ஓர் வீடு எப்படி இருக்கவேண்டும் என்று கூறுகிறார் - "வெய்யிலிலே குளிர்ந்திருக்கும், வேலியிலே கொடியிருக்கும், கையகலம் கதவிருக்கும், காத்துவர வழியிருக்கும்" - அதாவது அந்தக்காலத்தில் வீட்டை சுற்றி மூங்கிலால் ஆன வேலி கட்டப்பட்டிருக்கும். அதிலே பலவிதமான கொடிகள் படர்ந்து கிடைக்கும். இவற்றின் பலன் என்ன? இவற்றிலிருந்து வீட்டிற்கு தேவையான பூக்கள், காய்கள் கிடைக்க வழி வகுக்கின்றன. பல நேரங்களில் தேவைக்கேற்ற மூலிகைகளாகவும் பயன்படுகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாக, கோடைக்காலத்தில் வெப்பத்தை தணிக்கவும் உதவுகிறது. அதுவென்ன கையகலம் கதவு என சிலர் நினைக்கக்கூடும். அவர்கள் பாடும் போது கட்டிக்கொண்டிருப்பது என்ன - மண்வீடு தானே. பார்க்கப்போனால் "ஜாண்" அளவு என்று தான் சொல்லியிருக்கவேண்டும். இருந்தும் "கையளவு" என்று குறிப்பிடுகிறாள் அவள். ஏனென்றால் அந்த மண் வீட்டை பொறுத்த வரையில் அது மிக மிக பெரிதே. அந்த காலத்தில் பலவற்றை அளக்க "முழம்" தான் அளவு கோலாக பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்துக்கு "முழம்" என்றால் பெரிய அளவு. பலர் பேசும் போது கவனித்திருக்கக்கூடும் - "எங்க வீட்டுல பாவைக்காய் / பூசணிக்காய் காய்ச்சிருக்கு - இவ்வளவு நீளம்" என்று "முழ"த்தை காண்பிப்பார்கள். அதனால் மண்வீட்டிற்க்கே கதவு முழமளவு இருக்குமென்றால் உண்மையான வீட்டிற்கு கதவு எவ்வளவு பெரிதாக இருக்கும்? அந்தக்காலத்து வீட்டிற்கு வாயிற்கதவிர்க்கு நேரே வீட்டின் பின்புறத்துக்கு, அதாவது கொல்லைப்புறத்துக்கு, செல்வதற்கான கதவும் அமையப்பெற்றிருக்கும் - இது எதற்கு என்றால் air circulation சுமுகமாக இருப்பதற்காக! அதைத்தானே அவள் சொல்கிறாள் - “காற்று வர வழியிருக்கும்". மேலும் போகிற போக்கில் மனைவி / மருமகள் என்பவள் எப்படியிருக்கவேண்டும் என்றும் கோடிட்டு காட்டுகிறார் - "வழி மீது விழியிருக்கும், வந்தவர்க்கெல்லாம் இடம் இருக்கும்". வெளியே போயிருக்கும் கணவனின் வருகைக்காக வழி மீது விழி வைத்து அவள் காத்திருக்கவேண்டும். கணவனின் உற்றார், உறவினர்கள் என்று எத்தனை பேர் வந்தாலும் அவர்களை முகம் சுளிக்காமல் கவனிக்கவேண்டும் என்பதை எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டு போகிறார்.

முதல் சரணத்தில் மாப்பிள்ளை மாமனார்க்குரிய மரியாதை கொடுத்து இது போல் அன்பு காட்டவேண்டும் என்று சிறுவன் வாயிலாக சொல்கிறார் (அந்த பெண்ணின் தகப்பனார் அவனுக்கு தாய்மாமன். அவளை மணந்து கொண்டால் அப்போதும் "மாமா" (மாமனார்) முறை") – “மணிக்கதவை திறந்து வைப்போம், மாமனுக்கு விருந்து வைப்போம், கனிக்கனியாய் எடுத்துவைப்போம், கைநிறைய தேன் கொடுப்போம், நிலவு வரும் நேரத்திலே, நிம்மதியாக தூங்கவைப்போம்". அதாவது, மேலே கூறியது போல், பெண்ணின் தகப்பன் மாப்பிள்ளையிடம் என்றும் பய பக்தியுடன் தான் இருக்கவேண்டும், மாப்பிள்ளை வீட்டில் அவர் என்றும் சகஜமாக இருக்கவே முடியாது, ஒரு வாய் தண்ணீர்கூட அவரால் சாப்பிட முடியாது, தன் பெண் எப்படி வாழிகிறாளோ, என்னவெல்லாம் இன்னல் படுகிறாளோ என்ற கவலை தான் அவருக்கு. எப்போதும் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பது போல். அதனால் அவருக்கு நிம்மதியான தூக்கம் எது? இந்த நிலைமையிலிருந்து அவர் விடுபடவேண்டுமென்றால் - மாப்பிள்ளை வீட்டில் எந்த பயமுமின்றி/தயக்கவுமின்றி எப்போது வேண்டுமானாலும் சென்றுவரக்கூடிய நிலைமை ஏற்படவேண்டும் - மாப்பிள்ளை வீட்டின் கதவு அவருக்காக எப்போதும் திறந்தே இருக்கவேண்டும். வயிறார சாப்பிட இயலவேண்டும். அது மட்டுமா, போதும் போதும் என்று சொல்லுமளவுக்கு காய்கனிகள் பரிமாறப்படவேண்டும், தேன் பருகவேண்டும். இந்த நிலைமை ஏற்பட்டு விட்டாலே அவரால் நிம்மதியாக தூங்க இயலும்! இதையும் எவ்வளவு நாசூக்காக ஆனால் ஆணி அறைந்தாற்போல் சொல்கிறார்.

அது போல் மூன்றாவது சரணத்தில், மாமியார்க்காரி மருமகளை கீழ்த்தனமாக நடத்தாமல் வீட்டுக்கு வந்த மஹாலக்ஷ்மியை கொண்டாவது போல் தலைமேல் வைத்து எப்படி சீராட்ட வேண்டும் என்று சிறுமி வாயிலாக சொல்கிறார் – “பத்துவிரல் மோதிரமாம், பவளமணி மாலைகளாம், முத்துவடம் பூச்சரமாம், மூக்குத்தியாம் தோடு களாம், அத்தை அவள் சீதனமாம், அத்தனையும் வீடு வரும்" – (இங்கு இந்த பெண்ணிற்கு அந்த பையனின் அம்மா அவளது தந்தையின் சகோதரி என்பதால் "அத்தை". மேலும், அவனை மணந்து கொண்டாலும் அப்போதும் அவர் அவளுக்கு "அத்தை" தானே) - சாதாரணமாக சீதனம் என்பது பெண்வீட்டிலிருந்து கொடுக்கப்படுவது. இங்கு இவளோ, வகை வகையான நகைகளை குறிப்பிட்டு அவை அத்தனையும் தன் அத்தை (மாமியார்) இவளுக்கு சீதனமாக கொடுப்பது போல் சொல்கிறாள். அதாவது நகைகளை போல் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வாள் என்பது போல்.

மூன்றாவது சரணத்தில் அனுசரணம் போல் வரும் பகுதி (அல்லது நான்காவது சரணம்) - இது அந்த பைய்யனின் அன்னையின் உண்மை நிலையை குறிப்பிடுகிறது - அதாவது தன் அண்ணியின் சுடுசொற்கள் தாங்கமுடியாமல் மகனை அண்ணனிடம் ஒப்படைத்து விட்டு எங்கோ போய்விடுகிறாள். இவர்கள் திருமணத்தின் போது குடும்பத்திற்குள் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி, உறவுகள் மலர்ந்து அவள் மகிழ்வோடு திரும்பி வருவாள், அவள் கால்களில் விழுந்து ஆசி பெறுவோம் என்று சொல்கிறார்.

இதை படித்த பிறகு பலருக்குள் ஓர் கேள்வி எழும், இச்சிறுவர்கள் திருமணம் செய்து கொள்வதை கடைசியில் தானே சொல்கிறார்கள், அப்படியிருக்கும் போது மருமகள், மாப்பிள்ளை, மாமியார் போன்றோர்கள் இப்படி தான் இருக்கவேண்டும் என்பது போல் விளக்கம் அளித்துள்ளாரே, அது ஒத்துப்போகும்படியாக இல்லையே என்று. உண்மைதான், இப்படியும் இருக்கலாமே என்ற எண்ணத்தில் தான் பகிர்ந்து கொல்லப்பட்டது.

கதைப்படி பார்த்தால் விளக்கம் வேறுவிதமாக இருக்கும். அதாவது, அந்த பையனுக்கு சொந்தமாக வீடு கிடையாது. அவனது தந்தை அவனையும் அவன் தாயாரையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட, அவர்கள் மாமன் வீட்டில் தஞ்சமடைகிறார்கள். மாமன் அவர்கள் மீது பாசம் காட்டுகிறான் என்றாலும், மாமி அவர்களை அடியோடு வெறுக்கிறாள். மாமனின் மகளும் இவர்கள் மீது பாசமாக இருக்கிறாள். மாமியின் சுடுசொற்கள் தாங்கமுடியாமல் ஓர் நாள் அவனது அன்னை அவனை மாமனிடம் ஒப்படைத்து வேலை தேடி வீட்டை விட்டு போகிறாள். மாமனும் மகளும் அந்த பையன் மீது அன்பு காட்டினாலும், மாமியின் வெறுப்பு தொடர்கிறது. ஓர் நாள் நிலை தடுமாறி மாமனும் அவனை அடித்து விட அவன் வீட்டை விட்டு வெளியேறுகிறான். மாமன் அடிப்பதற்கு முன் வரும் பாடல் தான் இன்றைய நிகழ்ச்சியில் இடம் பெறும் பாடல். அவன் வீட்டை விட்டு வெளியேறுவதுவரையிலான நிகழ்வுகளை வைத்து தான் பாடல் பின்னப்பட்டுள்ளது. அதாவது : பைய்யனுக்கென்று ஓர் வீடு கிடையாது. அன்பே உருவான மாமன். அவன் மேல் உயிரையே வைத்திருக்கும் அவனது முறைப்பெண். அன்னக்காவடி என்பதால் அவர்களை அறவே வெறுக்கும் மாமி. திரும்பி வரும் போது கைநிறைய பணத்துடன் வருகிறேன் என்று சொல்லிப்போன அன்னை. இதை தான் பாடலாக வழங்கியுள்ளார்.

அவனும், முறைப்பெண்ணும் முயற்சி எடுத்து அழகான, வசதியான வீட்டை காட்டுவேன் என்கிறார்கள்.

அந்த பெண் கூறுகிறாள் - நான் என் அன்னையைப்போல் அல்ல, யாரையும் வீட்டை விட்டு வெளியேற்றமாட்டேன், என் வீட்டில் எல்லோருக்கும் இடம் உண்டு.

அவன் கூறுகிறான் - அவன் மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கும் மாமனில் மனம் நோகாமல் பார்த்துக்கொள்வேன், அவருக்கு வேண்டிய மரியாதை கொடுத்து மனம் குளிரும் வரை உபசரிப்பேன்.

அவள் கூறுகிறாள் - இப்போது அதையும், முறைப்பையனும் செல்வந்தர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் தன் அன்னைக்கும் அவர்கள் மீதிருந்த வெறுப்பு விலகி அவர்களை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் - ஆகவே வித விதமான நகைகளின் பேரை குறிப்பிட்டு அத்தனையும் தன் தாய் சீதனமாக அளித்துள்ளார்கள் என்கிறாள்.

அவன் கூறுகிறான் - அண்ணி அவளை ஏற்றுக்கொண்டுவிட்டதால் அவன் தாயாரும் மனம் குளிர்ந்து நிற்கிறாள், அவளிடம் ஆசி பெறுவோம் என்கிறான்.

(இவை அனைத்தும் என் சிறிய அறிவுக்கு எட்டிய கருத்துக்களே. ஒரு வேளை பலரும் இதற்க்கு மாற்றுக்கருத்துக்களுடன் வரக்கூடும் - அப்படி வரும் நல்ல கருத்துக்களை ஏற்றுக்கொள்வதில் ஆட்சேபனை ஏதும் இல்லை).

சிறு குழந்தைகள் பாடும் பாடல் என்பதால் அதிகம் ஆர்பாட்டம் இல்லாத இசை. அவர்களது விளையாட்டு தனத்தை, குதூகலத்தை பிரதிபலிக்கிறது இசை. மன்னருடைய முத்திரை, ஜாலங்கள் பாடல் நெடுக உணரலாம். இருந்தாலும், ஆச்சர்யம் கலர்ந்த ஓர் கேள்வி எழுகிறது. சாதாரணமாக மன்னர் கதை தளம், கதாபாத்திரங்கள், யார் யார் பாடுகிறார்கள், பாடல் இடம் பெறும் சந்தர்பம் மற்றும் லொகேஷன், என்ன சுற்றுச்சூழல் என்று பலவற்றை கேட்டறிந்து தான் பாடலை உருவமைப்பார் என்பது பாடலை கேட்க்கும் போதே உணர முடியும். பாடலுக்குரிய விடியோவை பார்க்கவில்லை என்றாலும் அவரது இசையே உணர்த்திவிடும் காட்சி எங்கே படமாக்கப்பட்டிருக்கும், அங்கு என்னவெல்லாம் பொருட்கள் சுற்றிவர இருக்கும், என்பதை. பாடல் காட்சியில் தண்ணீர் தோன்றும் என்றால் அதை கோடிட்டு காட்ட அவர் Xylophone அல்லது Santoor அல்லது Vibraphone பயன்படுத்தியிருப்பார். இந்த பாடலில் நதி பாடல் நெடுக காட்சியளிக்கிறது - கனவு காட்சியில் "தாஜ்மஹால்" மட்டுமே படம் பிடித்து காட்டப்பட்டுள்ளது என்றாலும் தாஜ்மஹால் அமையப்பெற்றிருப்பதும் யமுனை ஆற்றின் அருகில் தானே - மேலும் பாடலின் வரியிலேயே "ஆறு" இடம் பெற்றுள்ளது. இருந்த போதிலும் மன்னர் இங்கே குறிப்பிட்ட எந்த கருவிகளையும் பயன்படுத்தவில்லை. அதை தான் ஆச்சர்யம் கலர்ந்த கேள்வி என்று குறிப்பிட்டேன்.

இந்த பாடலின் speciality என்னவென்றால் – பல்லவியின் வேறு tune தான் அனுபல்லவி (இதை அனுபல்லவி என்று சொல்வதா அல்லது முதல் சரணம் என்று சொல்வதா என்று தெரியவில்லை), சரணம் மற்றும் அனுசரணம் (இதையும் அனுசரணம் என்று சொல்வதா அல்லது நான்காவது சரணம் என்று சொல்வதா என்று தெரியவில்லை). அதாவது பல்லவியின் டியூனில் அனுபல்லவியை பாடலாம், பல்லவியின் டியூனுக்கு சரணத்தை பாடலாம் - அது போல அனுபல்லவியின் டியூனுக்கு பல்லவியை பாடலாம், சரணத்தின் டியூனிலும் பல்லவியை பாடலாம்!

Prelude : It can be divided into three sections – First Section : Accordion pieces-ஸுக்கு follow on போல Violin pieces வாசிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு piece முடியும் போதும் கிட்டார் chords-ஸோடு Bells-ஸும் வாசிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி slow ஆக வாசிக்கப்பட்டுள்ளது - தாளக்கருவிகள் ஏதும் வாசிக்கப்படவில்லை என்பதை கவனிக்கவும். Second Section : This section is played fast. இங்கு Mandolin pieces-ஸுக்கு follow on போல Accordion pieces வாசிக்கப்பட்டுள்ளது. இங்கு தாளத்துக்கு Double Bass, கிட்டார் chords, Claves மற்றும் Beaded Maracas வாசிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதி அவர்கள் கையை பிடித்துக்கொண்டு மெதுவாக துள்ளிக்கொண்டு சுற்றுவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. Third Section : This portion is faster than the Second Section. Flute dominates this section. Flute is played in swirling manner – conveying that the kids are swirling. இங்கும் தாளத்துக்கு Double Bass, கிட்டார் chords, Claves மற்றும் Beaded Maracas வாசிக்கப்பட்டுள்ளது. At the end of this section Accordion is played in four small pieces – which conveys that the kids are jumping – and is finished with a roll.

Pallavi : Pallavi is sung by both the singers together. It is sung in whole first and is repeated again. When the Pallavi starts MSV introduces Tabla and Dholak for rhythm, accompanied by Double Bass, Claves and Beaded Maracas. When it is sung first time MSV embellish it by small fillers in Accordion. And when it is repeated he enhances it by playing the Accordion alongwith the singers and allows it to pop up at regular intervals as fillers. He infuses Bells too at regular intervals.

As I mentioned above, I am confused as to how to term the “வெய்யிலிலே குளிந்திருக்கும் .....” portion – whether to term it as first Charanam or Anupallavi. Whatever it may be – this portion is sung only by one singer – lip-synched by the girl. She sings the first four lines continuously in a different tune (as I said it can be sung to the tune of Pallavi too) – which has interludes in Accordion after 1st & 2nd lines and then after the fourth line. Then sings the next two lines exactly in the tune of Pallavi. Following that a small piece in Lead Guitar is played as a connecting platform to begin the Pallavi. Then both the singers join together and sing the Pallavi in whole.

1st BGM : It begins with a piece in Harp – conveying that they the kids are being transported to a dreamy world. Its backed up by Guitar Chords and Double Bass. Which is followed by String Session – this one is very small. The String session is immediately overtaken by Clarinet which is lengthy – which conveys the character/s is/are moving in slow motion. String session follows the Clarinet piece as a counter melody alongwith Harp. This too is backed up by Double Bass and Guitar Chords. This BGM ends with a piece in Flute. Flute has been played in a zig-zag manner – conveying that the character/s is/are moving in a zig-zag fashion. Here the rhythm changes. It has been backed up by Claves, Guitar Chords, Double Bass, Bells, etc.

1st Charanam : It starts with one singer – sung by the boy on the screen. First four lines are sung in the tune of Anupallavi (or First Charanam). It has interludes in Accordion after 1st & 2nd lines and then after the fourth line. Then the next two lines are sung – which is similar to the tune of Pallavi. Here the Accordion follows the singer. Once the singer finishes the last line a small piece in Lead Guitar is played as a jointer to the pallavi which is sung in full by both the singers.

2nd BGM : This can be divided into two portions – first portion dominates Harmonica and the second portion dominates Flute. Harmonica portion is backed up by Double Bass and Guitar Chords at regular intervals. Flute portion is backed up by Double Bass, Guitar Chords and Bells.

2nd Charanam : Here MSV has made some improvements. It starts with one singer – lipsynched by the girl on screen – she sings the first four lines in line with the Anupallavi (or the 1st Charanam) and the next two lines in different tune which is equal to the Pallavi – this portion has interludes exactly like first charanam. Then the boy character sings the next six lines – exactly like the portion sung by the girl. Then the pallavi is sung in whole by both the singers – here it is backed up by heavy string session and the effects of rain, lightning and thunder – அவர்களுக்கு நிகழவிருக்கும் துயரத்தை சுட்டிக்காட்டுவது போல்.

அந்த காலத்தில் வயது பேதமின்றி எல்லோராலும் பாடப்பட்ட ஒரு பாடல். மிகவும் வெற்றிபெற்ற பாடலும் கூட. The singers’ voices perfectly matches the on screen children.

மீண்டும் ஓர் அரிய / அற்புதமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

https://www.youtube.com/watch?v=5ZhwFwR4yOM


ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
Topic starter  

Dear Ramanan
I have been trying to reach them , ever since i knew that she was related to my wife in a way .Finally my father in law helped to reach her .
She was all praise for mellisai Mannar and kaviyarassu for all support and guidance as she was very young at that time .
Thank you

best Regards
vk


ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
 

That was really a great initiative VK. The interview was really nice and informative too.


ReplyQuote
Share: