பொன்னை விரும்பும் ப...
 
Notifications
Clear all

பொன்னை விரும்பும் பூமியிலே/ஆலயமணி/ 1962


kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

#கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் ..25

அவர்கள் பாடலை நினைக்க நினைக்க ஒவ்வொன்றிலும் ஒரு தனிச்சுவை உணரமுடிகிறது. தொடர் பதிவில் 25 வது பதிவாக நான் கொண்டது....ஆலயமணி யில்... பொன்னை விரும்பும் பூமியிலே...
எல்லாப் பாடல்களும் தனித்தனி சுவையுடன்..மனம் இனிக்கும்..நினைவும் இனிக்கும்.

இதில் நாயகன் சிவாஜி...அமைதியாக தன் காதலை ஆசையுடன் வளர்த்து.. ஆத்ம நண்பன் உதவியுடன் ..கைப்பிடிக்கிறான். நண்பனின் காதலி என்பதை அறியான்.
கால் ஒடிந்து ..சிகிச்சை பெறும் நிலையில் நாயகி சரோஜாதேவியின்..
கவனிப்பும்...உடன்இருத்தலும்...அவன் மனதில்...புதிதாக பாசம்..நன்றியுணர்வோடு... தலைதூக்குகிறது. உள்ளன்போடு பாடலில் அவளுக்கு சொல்லி மகிழ்கிறான்...கண்ணியமான ஒரு மனவோட்டம்.

பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே

தங்கம் தேடி அதன் பின்னே அலைகின்ற உலகில்....தன்னை அவள் விரும்புவதைப் பெருமையாக எண்ணுகிறான். புதையல் கிடைத்தது போல் வேகமாக செல்வந்தர் ஆக நினைக்கும் உலகில்...நல்ல இதயம் தேடி ..வாழ்க்கை அமைக்க அவள்...அவனது உயிராக நிற்கிறாள்.

ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே

சிறப்பாக அவளை நினைக்க நினைக்க...அவளை உருவகப்படுத்திப் பார்க்கும் கற்பனைகள் ஏராளமாக கரைபுரண்டு வருகின்றன.
ஆயிரம் மலர்கள் கொண்டு தந்தாலும் அதில் இவளே சிறப்பான ஒருத்தியாகத் தெரிவாள். ஆலயமணி யை பார்தால் ...அதில் ஒலிக்கும் மங்கல ஒலி இவளுடையதாகத்தான் இருக்கும். தாய் தகப்பன் இல்லாமல் வளர்ந்தவனுக்கு...இவளே தாய்மைப்பண்பு நலமாய் தெரிகிறாள்....
இப்படிப் பட்டவள்...இவன் மனைவி...தங்கக் கோபுரமாய்..இவன் பார்வையில் மதிப்பாய் தெரிகிறாள்..

இந்த உணர்வுகள் யாவும் அவனுக்கு புதிது.. புதிய உலகம் காட்டுகிறாள்...புதிதாக இவள் மூலமே பாசத்தை அறிகிறான்... வீட்டினுள்ளே புதிய தீபமாய் வந்தவள் இவளே!
அடுத்து ..இயற்கையையே தெய்வமாக நினைக்கிறான்..அவன்..வேட்டையாடும் பழக்கம் உள்ளவன்..அவளைக் காட்டில்தான் முதன் முதலாகக் கண்டான்..

பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
காதல்வயப்பட்டு அலைந்த மனதை யாரிடமெல்லாம் சொல்லியிருக்கிறான் பாருங்கள்... அவை அனைத்துமே அவன் வேண்டுகோளை நிறைவேற்றியதாய்...புரிந்து மனம் மகிழ்கிறான்.
இந்த மனமும்... அவர்குணமும் என்றைக்கும் இவனுடனே இருந்திட விரும்புகிறான்.
இறுதியாக அவன் மனதில் ஆழமாகப் பதிந்தது என்ன ?

ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே

உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
ஆலமரத்தின் விழுது ஒன்றையொன்று விட்டு விடாமல் தொடரும் உறவை உணர்த்தும்...அதுபோல் தான் அவள தந்த உறவு. இன்னும் வாழைக் கன்று தாய் மரத்தினடியில் குளுமையாக இருப்பதுபோல்...இவன் மனதைக் குளி. வைப்பவள்...
அதனால...இவர்கள் உருவம் இரண்டானாலும்...உயிர்கள் இரண்டானாலும்....உள்ளம் ஒன்றே போல் உள்ளது எனப் புளகாங்கிதம் ....அடைகிறான்.

டி.எம்ஸ்..குரலில்...மெல்லிசை மன்னர்கள் இசையில்...அவன் ஆத்மார்த்தமாகச் சொல்வதை யெல்லாம்... இசையில் ...அதே பண்புகளைப் புலப்படுத்துவதாய்...
பொன்னை விரும்பும் ....பூமியிலே.
.பாடல்...கவியரசரின்...உன்னதம்
ஆலயமணி  திரையில் 

கோதைதனபாலன்
https://youtu.be/eQA9NlpIc-0
1962


Quote
Share: