அன்னை/ புத்தியுள்ள ...
 
Notifications
Clear all

அன்னை/ புத்தியுள்ள மனிதன் எல்லாம்/ 1962

kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 17

இன்று சாதாரணமாகப் பேசும் போதே
' இதில் ஒரு லாஜிக் இருக்கு " என்று சொல்லும் வழக்கு அதிகம் உள்ளது.
அந்த லாஜிக்கை...
அதாவது தர்க்கம் ஏற்படுத்தும் சங்கதிகளை வரிக்கு வரி வைத்து. எழுதியுள்ளார் கவியரசர் இப்பாடலில்.

' புத்தியுள்ள மனிதன் எல்லாம்
வெற்றி காண்பதில்லை;
வெற்றி பெற்ற மனிதன் எல்லாம்
புத்திசாலி இல்லை. .'

ஆரம்பமே அட்டகாசமாக சந்திரபாபு குரலில் ,அமரிக்கையாக இன்றும். .அவை உணர்த்தும் பொருள் கண்டு ரசிக்கலாம்.
உண்மைதானே. ..
இன்றும் உலகில் அதிகம் சாதனை படைத்தவர் , தன் புத்தி மட்டிலுமே வைத்துக் கொண்டிருப்பவர் அல்லவே.
பணம். .மன உறுதி. .ஒற்றுமை என்பனவற்றோடு இயைந்து வாழும் தன்மை அல்லவா.

' பணம் படைத்த மனிதருக்கு
மனம் இருப்பதில்லை
மனம் படைத்த மனிதருக்கு
பணம் இருப்பது இல்லை
பணம் படைத்த வீட்டினிலே
வந்ததெல்லாம் சொந்தம்
மனம் இல்லாத மனிதருக்கு
சொந்தம் எல்லாம் துன்பம். .'

காலம் காலமாய் வாழும் மக்களால் உணரப்பட்டு வருவதே இது.
சுருக்கமாக பணம் இருந்தால் சொந்தம் எல்லாம் கூடி வரும்.
அது இல்லாத போது உள்ள சொந்தமும் ஏளனமாக பார்க்கும்.

' பருவம் வந்த அனைவருமே
காதல் கொள்வதில்லை
காதல் கொண்ட அனைவருமே
மணம் முடிப்பதில்லை
மணம் முடித்த அனைவருமே
சேர்ந்து வாழ்வதில்லை
சேர்ந்து வாழும் அனைவருமே
சேர்ந்து போவதில்லை..'

சங்கிலி கோர்த்தார் போல் மணவாழ்க்கைத் தத்துவங்கள். .எளிதாகப் புரிகிறதே..இதில் மன உறுதி தானே ஆராயப்பட்டுள்ளது.

' கனவு காணும் மனிதருக்கு
நினைப்பதெல்லாம் கனவு
அவன் காணும் கனவினிலே வருவதெல்லாம் உறவு
அவன் கனவில் அவள் வருவாள்
அவனைப் பார்த்து சிரிப்பாள்
அவள் கனவில் யார் வருவார்
யாரைப் பார்த்து அழைப்பாள்..'

இங்கே நையாண்டி. .சற்று இடக்காக.

வெறும் கனவில். .காதல் அர்த்தம் காண்போருக்கான சாடல். .நகைச்சுவையாக. .
பாடலிசை மெல்லிசை மன்னர்கள். ..சொல்லவும் வேண்டுமோ ?

இசையமைப்பில் சிறு சிறு தாளக்கட்டுகளில் ஆரம்பத்தில் பவனிவரும் பாடல் . பின்வரும் சரணங்களுக்கு அவை சற்று உற்சாக வேகம் கூட்டி வரும்போது சந்திரபாபு அவர்கள் குரலில் ஒரு சிறு பிசிறும் ஏற்படாது . பாடல் முழுதும் ஒரு மென்மையான நகையுணர்வையே பிரதிபலிக்கும் .

அன்னை. .திரையில். 1962

கோதைதனபாலன்
https://www.youtube.com/watch?v=8ImA2bPgICM

Quote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  
Posted by: @kothai

TO THE ADMIN ..
சுதர்சனம் அவர்கள் இசையில் வந்தது . தவறுதலாக இங்கே பதிவாகிவிட்டது . சிரமத்திற்கு வருந்துகிறேன் .   KOTHAI

This post was modified 10 months ago by kothai

ReplyQuote
Share: