Notifications
Clear all

1960 - Mannathi Mannan - Engalin Rani


K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 125
Topic starter  

பாடல் : எங்களின் ராணி

படம் : மன்னாதி மன்னன்

பாடலாசிரியர் : ஏ.மருதகாசி

இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பாடியவர்கள் : ஜிக்கி, ஜமுனாராணி, குழுவினர்

வருடம் : 1960

 

அனைவருக்கும் வணக்கம். 

இன்று நான் எடுத்துக்கொண்டுள்ள பாடல் "மன்னாதி மன்னன்" படத்தில் இடம்பெற்ற "எங்களின் ராணி" என்ற பாடல்.  அந்த காலத்தில் வந்த பாடல்களிலிருந்து இது மிகவும் மாறுபட்டிருப்பதாக, குறிப்பாக ராஜா-ராணி படங்களில் இடம் பெற்று வந்த பாடல்களிருந்து, தோன்றியது.  அதனால் இந்த பாடலை ஆராயலாம் என்று எண்ணினேன்.

எம்.நடேசன் தயாரித்து, இயக்கி, MGR , பத்மினி, ராகினி, அஞ்சலிதேவி, பி.எஸ்.வீரப்பா, எம்.ஜி.சக்ரபாணி, குலதெய்வம் ராஜகோபால், ஜி.சகுந்தலா மற்றும் பலர் நடித்து 1960 -இல் வெளிவந்த படம் "மன்னாதி மன்னன்".  கதை - வசனம் : கண்ணதாசன், இசை : விஸ்வநாதன்-ராமமூர்த்தி.  இதற்க்கு முன்பு வெளிவந்த ராஜா-ராணி படங்களான கணவனே கண்கண்ட தெய்வம், மணாளனே மங்கையின் பாக்கியம், வஞ்சிக்கோட்டை  வாலிபன், பார்த்திபன் கனவு, வீரபாண்டிய கட்டபொம்மன், வணங்காமுடி, மந்திரிகுமாரி, சர்வாதிகாரி, ராஜகுமாரி, தூக்கு தூக்கி, உத்தம புத்திரன், to name a few, போன்ற படங்களில் இடம் பெற்ற இசை, பாடல்களிலிருந்து இந்த படத்தின் இசை மற்றும் பாடல்கள் மிகவும் மாறுபட்டே இருந்தது – be it the tunes, the instruments used and the arrangement of the orchestration.  இம்மாதிரி படங்களில் அன்று வரை பார்த்திராத / அல்லது கேட்டிராத ஒரு பரிமாணத்தை காட்டியது இந்த படத்தின் இசை.  Classical, Folk, Romantic, Western, Happy, Pathos, Fast, Slow, comedy இப்படி ஒன்றுவிடாமல் எல்லா genre பாட்டுகளும் அள்ளிவீசிய படம்.

இது போன்ற படங்களில், இது போன்ற என்ன மற்ற படங்களிலும் தான், அன்று வரை பயன்படுத்தப்பட்டது விரலில் எண்ணிவிடும் இசை கருவிகளே - வீணை, கிளாரினெட், மாண்டலின், வயலின், மிருதங்கம் அல்லது தபலா, Ghatam, புல்லாங்குழல் இவ்வளவே (forget about the earlier period where only harmonium and tabla/mruthangam were used). அத்திப்பூத்தாற்போல் அவ்வப்போது ஜலதரங்கம், Harp, Khol, Bongos இவைகளும் பயன்படுத்தப்பட்டன - காரணம் அந்த படங்களில் பாலிவுட் இசை அமைப்பாளர்கள் சம்பந்தப்பட்டிருந்ததினால்.  ஆனால் இந்த படத்தில் தான் எத்தனை வகையான இசைக்கருவிகள் பயன்படுத்தியுள்ளார்கள் மன்னர்கள் - வீணை, ஜலதரங்கம், சிதார், வயலின், புல்லாங்குழல், மாண்டலின், ஹார்ப், கிட்டார், bass guitar, swarmandal, Oboe, xylophone, மிருதங்கம், khol, தபலா, தபலா தரங், பாங்கோஸ், தாரை, தப்பட்டை, ஜால்றா, சலங்கை, cabasa, beaded maracas, guiro,  எக்காளம் (bugle), Gong like instrument to produce the big “bang” effect, tambourine, துந்துனா, அப்பப்பா இன்னும் என்னென்ன பெயர் தெரியாத இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளனர்.  படத்தின் பிரம்மாண்டத்தை இசையிலும் கொண்டுவந்துள்ளனர்.

இன்று நான் எடுத்துக்கொண்டிருக்கும் பாடல், அன்று மக்களின் கவனத்தை ஈர்த்ததா என்று தெரியவில்லை (ஒரு வேலை இலங்கை வானொலியில் "கோஷ்டிகானம்" என்ற பெயரில் பிரபலமாக இருந்திருக்கக்கூடும்).  இந்த படத்தின் ஏனைய சில பாடல்கள் வெற்றி பெற்றது போல் அபார வெற்றி பெற்றதா என்றும் தெரியவில்லை.  நானும் இதற்கு முன்பு இந்த பாடலை கேட்டதாக ஞாபகம் இல்லை.  இந்த பாடல் என் கவனத்தை  ஈர்த்ததன் காரணம், இத்தகைய சூழ்நிலைக்கு அது வரை கையாளப்படாத ஒரு பாணியை கையாளப்பட்டது தான்.  அன்று வரை traditional அல்லது classical பாணி தான் இது போன்ற சூழ்நிலைக்கு பயன்படுத்தப்பட்ட பாணி.  ஆனால் இங்கு மன்னர்கள் கையாண்டதோ "மேர்க்கத்தி" பாணி.  To make it more clear, they have opted for the “flamenco”/ “gypsy” style, which was quite new for that period.  I feel this is the first time “flamenco” is experimented in TFM. Flemenco has three different style – slow, semi-fast and fast.  Mannargal has opted for the “semi-fast” mode.  Though it is Flemenco, he has just picked up that style, the tempo and has made it sound like “desi”.  அங்கு தான் அவர் தனித்து நிற்கிறார்.  அப்படி மேர்க்கத்தி பாணி முழுவதுமாக தலைகாட்டாமல் மெட்டமைக்க இன்னொரு காரணம் கூட சொல்லலாம்.  கதை நடப்பது சேரன், சோழன் காலத்தில்.  அப்போது ஆங்கிலேயர் நம் நாட்டுக்கு கால் எடுத்து வைக்காத காலம்.  அவர்கள் வந்த பிறகு அமைந்த கதை என்றால், அவர்களின் ஆதிக்கத்தால் அப்படி மெட்டமைக்கப்பட்டது என்று சொல்லலாம், ஆனால் இங்கு அதற்க்கு வழியில்லை. அதனால் தான் பாணியை மட்டும் எடுத்து அதற்க்கு முற்றிலும் மாறுபட்ட treatment கொடுத்துள்ளார்.  With Flamenco he has fused the essence of Persian style too as also added bit of Indian flavour.

For Flamenco type music very few instruments are used.  Guitar is the main instruments.  The dancers use “Castanets” – which they hold in their hands.  Percussion instruments like drums or Bongos are used, but it is optional for the traditional / typical Flamenco style.  Most the rhythm is played on the guitar itself by the guitarist himself. (another important factor in Flamenco is the claps and foot stomping by the dancers).  Here Mannar has used Guitar, Flute, Violin, Oboe, Harp, Bongos, Cabasa / Beaded Maracas. 

இது வந்து படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவரான அஞ்சலி தேவி அறிமுகமாகும் பாடல்.  பாடல் வரிகளே அவர் எப்படிப்பட்ட குணம் படைத்தவர் என்பதை சொல்லிவிடுகிறது - அழகியர்களில் அழகி, அறிவானவர், திறமையானவர், அவருக்கு நிகர் அவரே, யாருக்கும் அஞ்சாதவர், சுயகவுரவம் படைத்தவர், ஒருவருக்கும் வளைந்து கொடுக்காதவர், தன் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், திருமணம் செய்து கொண்டு கணவனின் ராஜ்யத்துக்கு போகாமல் (அதாவது புகுந்த வீடு செல்லாமல்), அவர் தன்னுடைய ராஜ்ஜியத்திலேயே வீட்டு மாப்பிள்ளையாக இருக்க வேண்டும், இப்படி போகிறது பட்டியல்.  In a nutshell she is unique and stylish.  So the song should be obviously unique by all means.  The song begins with flute, backed up with violins, guitar chords, jingling sounds of the Salangai  / Mani (as horse cart appears on the scene) and fades with the violin piece and chord is placed to start the singers to capture the pitch. This portion is arranged in Flamenco fashion. For that portion no percussion is used. Then the song starts in chorus with the semi-fast tempo.  This tempo is maintained till the end.  That’s the beauty of this composition.  The whole pallavi is sung by the chorus with just a humming by the lead singer Jikki after the pallavi is sung once, which is also one of the unique points about this song.  Was there any such experiment before this one?  The whole song is sung in a stylized manner.  The first bgm follows overlapping the ending of the pallavi with solo piece in guitar in Flamenco fashion, backing up with chords in guitar and subtle beat on the Bongos and embellishing with Cabasa / Beaded Maracas. Pallavi is beautifully embellished by small pieces in flute. This Cabasa / Beaded Maracas is played throughout the song – only avoided when the guitar plays chords three times in Flamenco fashion.  The bgm is finished with three notes in violin, played in a peculiar manner – viz, in Arpeggio style.  And then enters the lead singer Jamunarani singing the first two lines of the charanam, in her unique and stylized pronunciation.  The second is line is repeated by the chorus as an interlude, which is again an innovation.  Then enters the second lead singer Jikki singing the next two lines of the charanam, in her unique and stylized pronunciation.  As an embellishment, the second line of this is repeated by the chorus.  The next two lines are sung by Jamunarani and another two lines are sung by Jikki.  Then the lead singers and the chorus jointly sing the next two lines to finish the charanam, which is embellished with three chords strumming in guitar, exactly like in Flamenco style, thereby giving pitch to start the pallavi by the chorus.  This is taken over by a small piece in lead guitar and finishes with fast chord strumming in guitar – 3 times, again in Flamenco style.  This is a quite small bgm.  The second charanam starts immediately.  Unlike the first charanam, the second charanam starts with the chorus singing two lines.  Then Jikki joins with them crooning the next two lines.  The next two lines are sung by Jamunarani alone. The last two lines of this charanam is sung again by the chorus.  This is followed by a quick three times chord strumming in guitar + a beat on the bongos and picked up by the chorus singing the pallavi in full. Uptil this one point to be noted is that there is no lipsync for Anjalidevi – Both the lead singers were singing for the “பணிப்பெண்கள்". Once the chorus finish the pallavi, Jikki enters again with a short humming, this time singing for Anjalidevi. After the short humming follows the strumming in harp (perhaps it could be guitar too) and then enters the Oboe, which is continued alternatively until taken over by the humming of chorus, which is followed by humming Jikki then passing it over to chorus.  This is taken over by three notes in violin (in Arpeggio style) thereby paving way to crooner. She sings the 3rd charanam completely with appropriate embellishment by the chorus.  Here again their innovation is visible.  This charanam is finished by chorus with interludes in flute and a prominent change by way of a chord and the song ends without repeating the pallavi but by way of humming by chorus.

இங்கு ஒரு விஷயம் கவனத்தை ஈர்க்கிறது - அதாவது இரண்டு பாடகிகளில் ஒருவர் பணிப்பெண்ணுக்கும், கதாநாயகிக்கும் பாடுகிறார்.  அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள், மூன்றாவது ஒரு பாடகியை நாயகிக்காக பயன்படுத்தியிருக்கலாமே என்று எண்ண வைக்கும்.  உண்மைதான்.  அதற்க்கான காரணம் இதுவாகத்தான் இருக்கக்கூடும் - பாடல் அமைக்கப்பட்டது ஒருவிதமான ஸ்டைல் format -இல்.  ஜிக்கி, ஜமுனாராணி இருவரின் குரலிலும் இந்த பாடலுக்கே தேவையான அந்த ஸ்டைல் in-built ஆக அமைந்துள்ளது.  இது போன்ற பாணி அன்று இருந்த மற்ற பாடகிகளில் இருக்கவில்லை.  அப்படியிருக்க இந்த பாணிக்கு பொருந்தாத ஒரு பாடகியை பாட வைத்தால் பாடல் படுத்து விடும்.  அதனால் தான் இருவரில் ஒருவரையே நாயகிக்காகவும் பாடவைத்துள்ளனர்.

Breezy, stylish and foot tapping that’s what I would call this number.  Like I said in the beginning, it’s unique in many ways.  Pallavi is sung only by chorus singers.  Till the end lead singers never sings the pallavi.  Prominence is equally / or little more given to chorus.  The chorus dominates major parts of the song.  Song begins and ends with chorus.  It’s structured in the form of “Passing the Baby” fashion :–   Chorus to Jamunarani – Jamunarani to Chorus – Chorus to Jikki – Jikki to Chorus – Chorus to Jamunarani – Jamunarani to Jikki – Jikki to Chorus – Chorus to Jamunarani & Jikki together – and so on.

The whole song is excellently backed up with powerful Guitar Chords.

This particular pattern resurfaced in a new avatar in 1972 through MSV himself in the song – “கங்கையிலே ஓடமில்லையோ" from the movie “Raja”, with few improvements.  In this song, the pallavi is sung by the chorus and through a humming by PS straightaway the charanam starts and pallavi is repeated by PS. After the first charanam through the bgm the second charanam changes into dramatic and turns fast and ends at a high note by the chorus repeating the last two lines. 

Mannathi Mannan is rich and different in the re-recording front too.  Veenai dominates in the background subtly when MGR and Padmini appear together.  Whereas Sitar and Flute dominates subtly when MGR and Anjali Devi appear together.  And Oboe / Clarinet / Flute dominates when Kuladeivam Rajagopal and G.Sakunthala appear together.  In fact, the concept of theme music for the whole movie and each character  was first introduced by Mannar(kal).  In the climax too the effects have been given differently, especially the “beats (அடி)” between MGR and Veerappa.  The sound is more authentic for that period, where usually “dishyoom” is to be added verbally.

மீண்டுமொரு வித்தியாசமான பாடலுடன் உங்களை சந்திக்கும் வரை, உங்களிடமிருந்து நன்றி மற்றும் வணக்கம் கூறி விடைபெற்றுக்கொள்வது,

உங்கள் அன்பன்,

ரமணன் கே.டி.

 

https://youtu.be/mo8b7sf3Fb4


Quote
Share: