மெல்லிசை மன்னர்கள் ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் / கவலையில்லாத மனிதன்1960


kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 7

சுசீலாம்மாவின் குரல் நயத்திற்கும்  சோகத்திற்கும். .   என்ன அப்படி ஒரு சம்பந்தம் என்பது இன்னும் அதிசயம்தான். அதிலும் பொருள் பொதிந்த வரிகள் சேர்ந்து விட்டாலோ சொல்லவே வேண்டாம். .  காலத்திற்கும் அதன் தாக்கம் நிற்கும்.
இலங்கை வானொலியில். .   புரியாத வயதில் பார்த்த படத்தின். .பாடல் கேட்டு கேட்டு. .   மனதில் வாங்கிக் கொண்ட உணர்வுகள் இன்னும் நினைவில். வாழ்க்கையில் ஒரு பெண்ணிற்கு பெண் பார்க்கும் படலம் சாதாரணது அல்ல. செல்வமகள் தான் விரும்பும் காதலனே , தகப்பனார் மனம் போல் அவர் பார்த்த மாப்பிள்ளையை மணம் முடிக்க கட்டாயம் பண்ணும் போது நல்ல காதல் உள்ளம் அடையும் வேதனை ஒரு பக்கமிருக்க ,  வந்த மாப்பிள்ளை முன்னால் பாட வேண்டிய நிர்பந்தத்தில். ..கவிஞர் அப்பெண்ணின் உள்ளத்தில் எழும் வேதனை உணர்ச்சிகளை விளக்கி கேள்விகள் எழுப்பி வந்தவர்களுக்கு மறைமுகமாக உணர்த்துகிறார்.

' சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்
பார்க்கச் சொன்னார் பார்த்தேன்
எனக்கென்னவோர் உணர்ச்சியில்லை
தோழி
காதல் இன்னமுதே வாழிய நீ வாழி

கடமைக்கென்றே தான் இந்த நிகழ்வு. .சந்தோஷம் என்று தனக்கென்று எந்த வகை உணர்ச்சியும் இல்லை. .என சொல்லி. .தன் காதலை எண்ணி. .கலங்கி...இன்னமுதே வாழிய நீ வாழி
என மனம் மருகுகிறாள்

'இதயம் காட்டும் கண்ணாடி
வதனம் இல்லையா ..?
இருவிழிகள் கடை திறந்தும்
புரியவில்லையா..?

கண்களில் நீர் மல்க பாடுகிறாள். .கேள்விகளை அமைதியாக முன் வைக்கிறாள்.
முகம் கண்டு கண்டு என் இதய உணர்வுகளை நீங்கள் புரிய வேண்டாமா. .? இரண்டு விழிகளிலும்
கண்ணீர் பெருகி நிற்பது கண்டும் அறிய மாட்டீரோ..?
'சிதறி வரும் வார்த்தகைளில் கவனம்
இல்லையா
சிந்தையிலே தெளிவுடையார் யாருமில்லையா. .?

சற்று சூடாகவே வார்த்தைகள் விழுகின்றன.
“சிதறி வரும் வார்த்தைகளில். .. “  இந்த சொற்றொடர் பிரயோகம் அருமை. .மனம் விரும்பி பாடும் பாடல் அல்லவே இது. .  “உங்கள் சிந்தையில் இது உறைத்து. .உங்களுக்கு உணர்த்தப்பட வேண்டாம். .?”
 ஒரு ஏக்கம் இங்கு தொனிக்கும்.

'ஆடையென்று கேட்டவுடன் தந்தவர் தானே
அணிமணிகள் வகை வகையாய்ச் செய்தவர் தானே
அழகு மகள் இளமை கண்டு மகிழ்ந்தவர் தாமே
ஆசை கண்டு சேர்த்து வைக்க மறந்தது ம் ஏனோ. .?

இது தனது அருமைத் தந்தைக்கு உணர்த்துவது.
செல்வச்செழிப்பில்..   ஆடை அணிகலன்கள் வாங்கிக் கொடுத்து மகள் பருவம் கண்டு மனம் பூரித்த தந்தை. .. அந்த மகள் ஆசை கண்டு மணம் முடித்து வைப்போம் என்ற நினைவை மனதில் கொள்ளாததேனோ. .?

பாசத்தில் மயங்கி கேட்கிறாள். ..விடையறியாத கலக்கமா க ...சோகமாக பாடல். .நமக்கு உருக்கமாக. ..

இந்தப் பாடலில் தொனிக்கும் சோகம் ஒரு ரகம் ... மாப்பிள்ளை பிடிக்காமல் , தான் விரும்புபவரே வேறு மாப்பிள்ளை கூட்டி வரும்போது அப்பெண்ணின் மன வெளிப்பாடு ..

கவலை இல்லாத மனிதன். ..திரையில்.

  
…:  https://www.youtube.com/watch?v=NpZSBzVpeos
கோதைதனபாலன்

Year:- 1960; Music:- Viswanathan Ramamurthy


Quote
Share: