மெல்லிசை மன்னர்கள் ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னர்கள் / பெண்பார்க்க மாப்பிள்ளை ../ கவலையில்லாத மனிதன் 1960


kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

கவியரசர் கண்ணதாசன் பாடல்கள். .ரசனைகள். 8

இது முந்தைய பதிவின் ஒரு தொடர்ச்சி எனவும் கொள்ளலாம். கதைப்படி. .பெண்ணிற்கு தன்னைப் பெண் பார்க்க வந்திருப்பவர் தனது பணிப்பெண்ணின் காதலர் என்றும். .ஏமாற்றம் தருபவர் என அறிந்த பிறகு நாயகி எம் என் ராஜம் சரியான இக்கட்டை ஏற்படுத்த ,

பணிப்பெண் ராஜசுலோச்சனா. . எம். ஆர் ராதா விற்கு அவருக்கு முகம் மறைத்தே மாலையிட்டு மணமுடிக்கிறார்.

உண்மை வெளிப்படும் கட்டாயம் அந்த முதலிரவு காட்சி.

எம். ஆர்.ராதா நேர்முகம் காணாமலே பாடச்சொல்லி ஆசையை வெளிப்படுத்த. . தன் முகம் காட்டாமலேயே. ..தனது உள்ளத்திணறலை. .குமுறலை. .மனம் நெகிழ்ந்து பாடுவதாய்….

அதே சமயம் வரிகளில் உள் அர்த்தம் வைத்து பாடும் காட்சி. ..

நமக்கு ஒரு ஆச்சரியமே. ஜமுனா ராணியின் குரலில். .உரிய பாவத்தில் இனிமையான நல்ல இசை அமைப்பில். ..

“பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார். .”
வந்தார் ...வந்தாரே .. பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார் ... ..”
" வந்தார் ... ' 'வந்தாரே .. '

இந்த இரு சொல்லிலும் முரண்பட்ட பாவங்கள் அழகாக ...மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் &ராமமூர்த்தி அவர்கள் இசையமைப்பில் . விளைவுகளை எதிர்பார்த்தே நம்பிக்கையோடு வாழ்க்கையில் அடி எடுத்துவைப்பவளின் மனப் போராட்டங்கள் பிரதிபலிப்பு இப்பாடலில் .

என அந்தப் பெண் பார்க்கும் படலத்தில் தான் மறைந்து பார்த்து அடைந்த துடிப்பினை நேர்த்தியாக சொற்களில் மறைத்து வைத்து கொண்டு செல்கிறார்.

' கண்பட்ட மோகமோ கைபட்ட வேகமோ
புண்பட்ட நெஞ்சில் எண்ணங்கள் மாறுமோ
எண்ணங்கள் மாறியே பந்தங்கள் ஆனதே..”

கடந்த கால உறவை சொல்லி. .நிகழ் காலத்தில் எண்ணங்கள் மாறி விதி யின் முடிவு தனக்கு நிலையான பந்தமானதை உணர்த்து கிறார்.

' வெண்முல்லை சோலையில்
பொன்வண்டு நாடுமோ
பொன்வண்டு நாடினால் பூந்தென்றல் வீசுமோ
பூந்தென்றல் வீசினால் பருவங்கள் மாறுமோ
பருவங்கள் மாறினும் பந்தங்கள் மாறாது. .'

எவ்வளவு நயமாக உணர்வு பரிமாற்றங்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. .அவனை யோசிக்கத்தான் வைக்கிறது .
“மண் பெற்ற மக்களில்
பெண் மக்கள் பாதியே
பெண்மக்கள்( ளே) காதலில்
ஆண்மக்கள் தேடியே
மாலை சூட மணமேடை நாடியே..”

இங்கு ஆண்களின் போக்கை சாடுகிறார்.

காதல் இருவருக்கும் பொதுவாக இருக்கையில் முதலில் ஆணின் அவசரம்..ஆனால் மணமுடிக்க பெண்ணின் முனைப்பு எப்படி யெல்லாம் கஷ்டப்பட வேண்டியுள்ளது. பாடலை கேட்கும் எந்தப் பெண்ணிற்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் பாடல். .

கவலை இல்லாத மனிதன்.

கோதைதனபாலன்
http://youtu.be/G1h3hs722bA

1960


Quote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 3 years ago
Posts: 218
 

சகோதரி ,

                    தங்களின் எழுத்தில் ஒரு எளிமையும் , உணர்ச்சி கொப்பளிக்கும் பாங்கும் ஒருசேர அலங்கரிக்கின்றன. தங்களின் புதிய பதிவுகள் வெளிப்படுத்தும் உணர்வு பாவங்கள் மன்னர் சொற்களுக்கு சுவை ஊட்டும் இசை அமைப்பை சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இது மன்னரின் இசை அமைப்பை வெகுவாக ரசித்தவர்களுக்கே சாத்தியம் .தொடரட்டும் தங்களின் இந்த சிறப்பு. வாழ்த்துகள் .                                அன்பன் ராமன் மதுரை


kothai liked
ReplyQuote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

@k-raman

// இது மன்னரின் இசை அமைப்பை வெகுவாக ரசித்தவர்களுக்கே சாத்தியம் .//

என்னை சற்று யோசிக்க வைத்தது . உண்மை என்னவென்றால் எனக்கு இசையமைப்பாளர் பற்றியே தெரியாது .பாடலை மட்டும் , அந்த வரிகள் உணர்த்தும் பாவங்கள் , குரலில் சரியாக வெளிப்படுகிறதா ...என்றே என் மனம் கவனிக்கும் . வானொலியில் இந்த அளவிற்கே நான் தெளிந்து திரைப் பாடல் ரசிகையானேன் . பின்னர் மெதுவாக குரல் அடையாளம் , அவரவர்க்கு வரக்கூடிய பாவங்கள் ..இவற்றை எண்ணி சிலாகித்தேன் . ஒருவயது .. கல்லூரி பருவம் தாண்டியபிறகே ...கதையின் நிகழ்வுகள் ..பாடல் பிறக்க காரணம் என்பதை புரிந்து கொண்டேன் . இவையே இசைக்கலைஞர்களுக்கு தங்கள் திறமையை மேன்மைப் படுத்திக்கொள்ளும் களம் என்று உணர்ந்தேன் . பிறகுதான் இசையமைப்பாளர் சிந்தனையே வந்தது . அவரே இந்தப் பாடல் எப்படி பாடப்படணும் என்பதைத் தீர்மானிக்கிறார் . ராகம் ஒன்றே என்றாலும் பாடும் பாவத்தில் சற்று வேறு பாடலாகத் தெரிவதை உணர்ந்தேன் . இசைக்கருவிகளின் சேர்க்கை எனக்கு இன்றுவரை புரியாதது . ஆனால் எந்தப் பாடகரையும் , சரிப்படுத்தி ,உச்சரிப்பில் கவனம் செலுத்தி ...இன்ன பாடலுக்கு இவர் என்று தெரிந்தெடுப்பதில் எம்.எஸ்.வி.   அவர்கள் வல்லவர் என்பதை மற்றவர் சொல்ல அதன்படி கவனித்தேன் . இது ஒரு அசாத்திய திறமை . இசைஞானம் எல்லாருக்கும் இருக்கலாம் .. ஆனால் அதில் ஒரு ஆத்மார்த்த வெளிப்பாடு ... பாடல் சம்பந்த மற்ற கலைஞர்கள் , குறிப்பாக பாடகர்கள் , கவிஞர்கள் ,, காட்சி விவரிக்கும் இயக்குனர்கள் இவர்களோடு இவருக்கு இருந்ததை புரிந்து கொண்டேன் . நன்றி ஐயா .
இவர் இசையமைத்து விட்டாலும் ... சிவாஜி அவர்கள் .... அந்த நாள் , தெய்வமே , யார் அந்த நிலவு ..பாடல்களுக்கு நடிக்க காலதாமதம் எடுத்துக் கொண்டதை அறிந்தேன் . உள்ளம் வியப்பில் ...இன்றும் . எவ்வளவு பெரிய அர்ப்பணிப்பு .

This post was modified 11 months ago by kothai

ReplyQuote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 3 years ago
Posts: 160
 

அன்பு சகோதரிக்கு
ஆம் .பெரும்பான்மையோர் நடிகர் ,பாடகர்கள் கவிஞர்கள் பிறகு இசையமைப்பாளர் என்ற வரிசையிலே பாடலை ரசிக்கத தொடங்கி உள்ளோம்
ஆனால் இசையமைப்பாளர் தான் முதல் தொழிற்நுட்பக் கலைஞர் (டைரக்டர் தவிர ) கதை பற்றி தெரிந்தவர் .எனவே அவரே படம் எடுக்கப்படும் விதத்தினை முன் வைக்கிறார் அதே போல் நடிகர்களின் உணர்சசி மிகு நடிப்பினை சொல்லித்தருவதில் (மறைமுகமாகத்தான் ) இயக்குனருக்கு உதவுவது பாடல்கள் தான் .எனவே பாடல் ஒரு (filler_ ) மட்டுமல்ல (pillar ) ஆக மாறுகிறது .
Prof வெண்ணிற ஆடை பாடல்களை CVS கவியரசு மெல்லிசை மன்னர்கள் எப்படி உருவாக்கி அதன் மூலம் கதை போக்கினை நிர்ணயம் செய்தார்கள் என்பதை சொல்லியிருப்பார் https://youtu.be/GyLYy3e-3bM
ஆகவே மெல்லிசை மன்னர் கதையை கவனத்துடன் கேட்பார் எனக் கேள்வி பட்டிருக்கின்றேன் .
முதலில் கதை சொல்லியிருப்பார்கள் , பிறகு பாடலாக்கத்தின் பொது சொல்லும் கதை சூழல் வேறாக இருந்தால் உடனே கேட்பாராம் இது முதலில் சொன்ன கதையில் இல்லையே என்று .திரு கே பாக்கியராஜ் சொல்லி வியந்தார் .நாங்கள் 6 மாதம் 1 வருஷம் முன்னாடி சொன்ன அந்த சூழலை மனதில் வைத்து கேள்வி கேட்பார் .நாங்கள் ரூம் போட்டு 5 அல்லது 6 பேர் யோசிப்பதை ஒருவராக வெகு விரைவில் உள்வாங்கி மெட்டு அமைப்பார் பின்னணி இசை அமைப்பார் என்றார்
நீங்கள் சொல்வது போல் இது எல்லாம் நமக்கு மிக தாமதமாகத் தான் தெரியவந்தது .தன சாதனைகளை விளம்பரப் படுத்தி க் கொள்ள தெரியாததால் நாமும் கவனிக்க தவறி விட்டோம் .
இப்பொழுது திரையுலக ஆளுமைகள் இல்லாத நிலையில் பேச துவங்கி உள்ளார்கள்
ஜமுனாராணி சிறந்தப் பாடகி என்பதனை உறுதி செய்யும் மற்றுமொரு பாடல் .
கவியரசுவிற்கு கவலைகள் தந்தப் படத்தில் இம்மாதிரி பாடல் வருவதில் வியப்பென்னே

best Regards
vk


kothai liked
ReplyQuote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

@v-k    அன்புச் சகோதரருக்கு வணக்கம்
இசையமைப்பாளர்களுக்கு விளம்பரம் அவசியம் இல்லை . அவர்களது ஆத்மார்த்த பணியே , அவர்கள் திறமையை வளர்த்து ஒரு கட்டத்தில் வெளிக்கொணரும் . இன்னும் சொல்லப் போனால் அதற்கென்று அவர்கள் எத்தனைக் களங்களை தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது . இதற்கு உதாரணமாக ஒன்று வைக்கிறேன் . நம் மனவோட்டங்களை அறிந்தே . பக்திப்பாடல்களைத் தவிர , தனிப்பட்ட மெல்லிசை பாடல் தொகுப்புகள் எத்தனையோ இசைக் கலைஞர்கள் , பாடகரும் சரி , இசையமைப்பாளரும் சரி வெளியிட்டிருந்தாலும் எதனால் அவை பிரபலம் ஆவதில்லை . கிராமிய , கர்நாடக இசை தனித்த பாடல்கள் இதில் அடங்காது . எனக்கு இப்படி ஒரு கேள்வி உண்டு .உறுதியான பதில் சொல்ல முடியவில்லை .அதனால் ரசனை ... என்ற ஒரே சொல்லுக்குள் மறைந்து கொள்கிறேன் .  


ReplyQuote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

@v-k  உண்மை ... கவியரசருக்கு கவலைகள் தந்த திரைப்படமே . கலைக்கோயிலும் நம் மன்னருக்கு ஆனால் பாடல்கள் வெற்றி . , 


ReplyQuote
Share: