மெல்லிசைமன்னர்கள் இ...
 
Notifications
Clear all

மெல்லிசைமன்னர்கள் இசையில்//ஆளுக்கொரு வீடு"1960


kothai
(@kothai)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 73
Topic starter  

மெல்லிசைமன்னர்கள் இசையில்

#சுசீலாம்மாபாடல்ரசனையில் .. 78

பி.பி. ஸ்ரீனிவாசும் , சுசீலாம்மாவும் நிறைய வெற்றிப்பாடல்களைத் தந்துள்ளனர் . அவற்றில் சில இனி காண்போம் . இலங்கை வானொலி மட்டுமே கேட்டு நான் ரசித்த இந்த ஜோடிக்குரலில் முதன்மை எது என என்னை யாரும் கேட்டால் ,
"ஆளுக்கொரு வீடு" திரையில் இடம் பெற்ற

"அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா"...பாடலைத்தான் சொல்வேன் . பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் . பின்னாளில் காணொளியில் கண்டே நடிப்பு சத்யன் , எல். விஜயலக்ஷ்மி எனது தெரிந்து கொண்டேன் .
இசையமைப்பாளர் பற்றிய சிந்தனை எல்லாம் அப்போது எனக்கு கிடையாது . ஆனால் பாடலையும் , பாடுபவர் குரல்களையும் மீறி மெலிதான ரேகையை என் மனதில் அழுத்தமாக இசை பதிந்து விட்டது . இதுவும் பின்னாளில் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் , ராமமூர்த்தி எனது தெரிந்து கொண்டேன் .
ஆரம்ப இசை அள்ளிவரும் அதோடு கொஞ்சும் குரலில் ஆண்குரல்
"அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா"... என ராகபாவத்தோடு பாய்ந்து வர ...

"அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சம் ஆகுமா
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா'
சுசீலாம்மா மென்மையான , இனிய குரலில் ஒரு அழுத்தம் பதித்தே பதிலிருப்பார் பாடலில் .
அது சற்று உச்ச ஸ்தாயிலிலேயே பயணிக்கும் .

"மாலை வெயில் மயக்கத்திலே மறந்திடலாமோ
மனைவி என்றே ஆகும் முன்னே நெருங்கிடலாமோ'..
இப்படியான நெஞ்சைக் கிள்ளும் சந்தேகங்களாக வைக்க ..

"உறவானது மனதில்
ஆ..
மணமானது நினைவில்

இதை மாற்றுவதார் மானே வையகமீதில்,' ...என்ற உறுதிப்பாடான தன்மை ஒலிக்க ...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...சங்கதிகள் அழகாக விழும்

"காதலுக்கே உலகம் என்று கனவு கண்டேனே

நான் கனவில் கண்ட காட்சியெல்லாம்
கண்ணில் கண்டேனே

இது காவிய கனவு
இல்லை காரிய கனவு
புது வாழ்வினிலே தோன்றும் மங்கல கனவு..' உறுதிப்பாடான நிலையில் வரும் மகிழ்வான எண்ணங்கள் ...இன்னும் தொடர

"அன்பு மனம் துணிந்து
விட்டால் அச்சம் தோணுமா
ஆவலை வெளியிட வெகு நேரம் வேணுமா
இரு குரல் கலந்துவிட்டால் இன்ப கீதமே
இன்னமுத வீணையும் அறியாத நாதமே.'
பல்லவியையே சற்று மாற்றி , காதலுக்கு கட்டியம் கூறி பாடி முடிப்பர் .

கோதை தனபாலன்

https://www.youtube.com/watch?v=f8jAKQ5bF94


Quote
Share: