அறிமுகம் ...வாழ்த்த...
 
Notifications

அறிமுகம் ...வாழ்த்துக்களுடன்  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
29/02/2020 5:08 pm  

அனைவருக்கும் வணக்கம் .

என்னை இங்கு அறிமுகப்படுத்தியவர் விஜயகிருஷ்ணன் ராஜகோபாலன் அவர்கள் . நான் முகநூலில் பத்து வருடங்களாக இருந்தாலும் எனக்கு அதிக அறிமுகங்கள் எனது திரைப்பட பாடல் ரசனைக்காகவே என்பதை முழுமனதுடன் உணர்ந்துள்ளேன் . அறுபது வருடத்து ரசனையை ஐந்து விநாடியிலோ , ஐந்து வருடங்களாக தொடர்ந்து எழுதினாலும் முழுமையுறாது . கடவுள் எனக்களித்த வரம் நல்ல தமிழில் இசையை ரசித்து எழுதுவது . தமிழைத் தாண்டி என் மனம் ரசிக்காது ...காரணம் மொழி புரியாது .

இங்கு பலவிதமான ரசிகர்களைக் கவனித்தேன் ... அவர்களிடமிருந்து நான் எப்படி வேறுபட்டுள்ளேன் ..?
இந்த கேள்விக்கு விடை நான் அடுத்தடுத்து பாடல் , இசை பற்றிய ரசனைகளை எழுதும்போது புரியலாயிற்று .
அறியாத வயதில் இசையமைப்பாளரெல்லாம் தெரியாது , எழுதியவர் தெரியாது... பாடியவர் மட்டுமே பாடும் பாவத்தால் என்னை ஈர்த்துக் கொண்டிருப்பார் .

பின்னாளில் தான் தரம் பிரித்து அடையாளம் காணப் பழகினேன் .
என் வரையில் அன்றைய ஐம்பது கால கட்டத்தில் ஜி.ஆர். ராமநாதன் , லிங்கப்பா , சுப்பையா நாயுடு ,கே. வி. மாகாதேவன் அடுத்து ,

இரட்டையரான விஸ்வநாதன் &ராமமூர்த்தி என்றே அறிமுகமாகி ...
இவர்களே தமிழ்த்திரையில் முதல் சகாப்தத்தை உருவாக்கியவர்கள் .
இந்தக்காலம் , இவர்களுக்கேற்ற வகையில் கவியரசரும் , பாடகர்கள்... உச்ச சிறப்பாக சுசீலாம்மா , டி .எம் எஸ் ..சேர்ந்த ஒரு கூட்டணி ... நல்லதொரு திரைக்கதை அமைந்த திரைகளில் இடம்பிடித்து அழியா இசைக் காவியங்கள் படைத்தன .
மற்றையோரும் உண்டு .

இவைகளை பற்றி என் ரசனை வழி நான் .எவ்வளவோ எழுதியிருந்தாலும் ... இந்தக் குழுவொடும் ,
இங்கே தொடர்ந்து இன்னும் பல பாடல்கள் பற்றிய எனது விமரிசனங்களை , வெவ்வேறு கோணங்களில் வைக்கத்  தலைப்பட்டுள்ளேன் ...... தங்கள் அனைவரது அனுமதி , ஆதரவோடு .

நான் எனது கிராமத்தில் தற்சமயம் விவசாயம் பார்த்து வருகிறேன் . இசைஞானம் என்றெல்லாம் எனக்கு இல்லை , ராகங்களும் சொல்லத் தெரியாது .
ஆனால் நல்ல ரசனையுள்ளம் என்றும் மறவாத தன்மையோடு ... என்னையும் நன்முறையில் இயக்கிக் கொண்டிருக்கிறது .

இதை சொல்வதில் எனக்கு மகிழ்ச்சியும் பெருமையும் உண்டாகிறது .
இந்த இணையத்தை உருவாக்கியவர்களுக்கு எனது வணக்கங்களும் , நன்றியும் .
வாழ்த்துக்கள் .. நன்முறையில் இன்னும் ஆக்கம் பெற்று வளர .

Kothai
( கோதை தனபாலன் )


Quote
Nagai V Kannan
(@nagai-v-kannan)
Active Member
Joined: 1 month ago
Posts: 6
01/03/2020 1:05 pm  

வாழ்த்துக்கள் அம்மா !


ReplyQuote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
01/03/2020 3:06 pm  

@nagai-v-kannan  மன நெகிழ்வுடன் நன்றி

 


ReplyQuote
Share: