தேடி வந்த மாப்பிள்ள...
 
Notifications
Clear all

தேடி வந்த மாப்பிள்ளை  

  RSS

sravi
(@sravi)
Eminent Member
Joined: 2 years ago
Posts: 41
14/09/2019 8:57 am  

துள்ளும் கலக்க்கல் இசை


Quote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 115
14/09/2019 2:39 pm  

ஆஹா ஹிந்துஸ்தானி இசையின் அடிப்படையில் அமையப்பெற்ற அற்புதமான முகப்பிசை. படத்தின் கதையை முகப்பிசையிலேயே பார்வையாளர்களுக்கு புரியவைக்கும் யுத்தியை ஆரம்பித்தவரே மன்னர் தானே. பாடல்களுக்கு மட்டும் உழைக்காமல், படத்தின் Title Card -டிலிருந்து ஆரம்பித்து "the end " போடும் வரைக்கும் ஒவ்வொரு frame -மையும் அனுபவித்து அதற்க்கு இசை வாயிலாக உயிரூட்டியவரும் மன்னரே.

வழக்கம் போல் படத்தின் கதையை 2 .30 நிமிட இசையின் வாயிலாக பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறார். முதலாளியின் மனைவி மற்றும் குழந்தை காணாமல் போவதையும், பிறகு அவரிடம் வேலை பார்த்தவனின் குழந்தை காணாமல் போவதையும் opening இசையிலேயே புரியவைத்துவிடுகிறார். பிறகு காலம் உருண்டோடுவதை (ரிதுக்கள் மாறுவதை) இசை வாயிலாக symbolic ஆக உணர்த்திவிடுகிறார். அதற்க்கு பிறகு வரும் இசைக்கோர்வை முதலாளியின் மகன் (கதாநாயகன்), வேலைக்காரனின் காணாமல் போன மூத்த பெண் (துணை கதாநாயகி) மற்றும் வேலைக்காரனின் இரண்டாவது மகள் (கதாநாயகி) இவர்கள் பருவ வயதை அடைந்து விட்டதை குறிக்கிறது. பிறகு வரும் இசை காதல், பாசம் இவைகளை சுட்டிக்காட்டுகிறது. அதற்க்கு பிறகு வரும் இசை dramatic / fight scenes -சை குறிக்கிறது. மீண்டும் காதல், பாசம் இவற்றை குறிக்கும் இசைக்கோர்வை. அதன் பிறகு படிப்படியாக கிளைமாக்ஸை நெருங்குவதை குறிக்கும் இசைக்கோர்வை - கொஞ்சம் பாசம், கொஞ்சம் dramatic மற்றும் ஆர்பாட்டமில்லாத கிளைமாக்ஸ்.

இந்த இசைக்கோர்வையை அமைப்பதற்கு ஹிந்துஸ்தானி பாணியை தேர்ந்தெடுத்ததற்க்கே அவரை வானுயர பாராட்டலாம். இத்தனை நிகழ்வுகளையும், உணர்வுகளையும் எவ்வளவு துல்லியமாக தெள்ளத்தெளிவாக ஹிந்துஸ்தானி இசை பார்வையாளர்களுக்கு உணர்த்திவிடுகிறது. எப்படித்தான் இப்படி யோசித்து செயல்பட்டாரோ. சாஷ்டாங்க நமஸ்காரம் அவருக்கு.

நன்றி / வணக்கம்

ரமணன் கே.டி.


ReplyQuote
Share: