THEME MUSIC IN FILM...
 
Notifications

THEME MUSIC IN FILM THANGA PATHAKKAM  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 78
27/04/2019 6:17 pm  

Dear friends 

Thanks to Veeyar , who tirelessly work on Theme Music Title Music and BGM  from Mellisai mannar ,Here is one more sample of his work .

I am sure i would have a lot to explain. so i will leave it to him to narrate the scene and music 

The link for the scene is below 

https://youtu.be/6nzlPAXTJyA

best Regards
vk


veeyaar liked
Quote
veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
27/04/2019 8:13 pm  

Thank you VK for kickstarting this glorious journey.  Looking ahead .. we can visualise the great giant .in unimaginable unreachable height sitting pretty with a smile in his face ...".வாங்க தம்பிங்களா ... நான் மேலே இருக்கேன்னு எனக்கு கர்வம் இருக்குன்னு நீங்க நெனச்சா அது தப்பு... உங்களையெல்லாம் மேலே கூட்டிண்டு வரணும்,, நான் மேலே மேலே போனாத்தான் நீங்க எல்லோரும் கூட வருவீங்க... ஏன்னா எனக்கு ஒரு விஷயம் நல்லா தெரியுது.. என் வழியிலே வர்றத்துக்கு ஒரு பட்டாளமே கிளம்பியிருக்குன்னு.. எல்லாரும் வரணும்.. நீங்க எல்லோரும் மேலே வரணும். எனக்கு அதுதான் ரொம்ப சந்தோஷம் ... ". அப்படி அந்த உயரத்தில் மன்னரை அமர்த்தியிருப்பது இது போன்ற பின்னணி இசை உருவாக்கம் தான். பாடல்களைப் பொறுத்த வரையில் எல்லோருமே மக்களுக்குப் பிடித்த பாடல்களை அளித்திருக்கிறார்கள்.  இது மறுக்க முடியாத உண்மை. ஆனால் அசைக்க முடியாத கோட்டை ஒன்று இருக்கிறதென்றால்,  அது மன்னரின் பின்னணி இசைக் கோட்டை தான். 

அப்படிப்பட்ட கோட்டையின் அடித்தளமே இந்த Theme Music எனப்படும் கருவிசை தான்.  கிட்டத்தட்ட அவருடைய ஒவ்வொரு படத்திலுமே இந்த கருவிசை Concept இருக்கலாம். உள்ளே நுழைந்து நாம் தேடத் துவங்கினால் அள்ள அள்ளக் குறையாத புதையலாய் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும். 

 

எந்தவிதமான கதைக்களமானாலும் அவரால் கருவிசையை உருவாக்க முடியும்.  உருவாக்கியிருக்கிறார். குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் சமூகப்படங்கள், சமுதாயப் பிரச்சினைகள், அதிலும் குடும்பப் பிரச்சினகள், மனிதனின் குணாதிசயங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள், என பல்வேறு நிலைகளில் பாத்திரங்களின் அடிப்படையை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர் தனக்குள் ஒரு Musical Narration Path ஒன்றை அமைத்துக் கொள்கிறார்.  வணிகப்படங்களில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. அதிலும் அவர் ஏதாவது ஒரு நூலை எடுத்து உருவாக்குவார் என்றாலும் கூட மக்களிடம் நேரிடையாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கதைக்களமோ, சந்தர்ப்ப சூழ்நிலையோ பிரச்சினைகளோ என்றால் இவருடைய கற்பனைக்குதிரை படுவேகமான பாய்ச்சல் எடுக்கும்.  மன்னரின் கொடி அங்கே வானுயரப் பறக்கும்.

மேலே உள்ளவற்றைப் படிக்கும் போது அது புரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இதை உதாரணங்களுடன் சொல்லும் போது தான் மன்னரின் வீரியம் நமக்கு தெரிய வரும். இந்த முயற்சிக்கான அடித்தளமே இந்தப் பிரிவும் தலைப்பும். 

 

மேற்காணும் முந்தைய பதிவில் தங்கப்பதக்கம் படத்தின் கருவிசையைப் பார்த்தோம்.  இதை தரவேற்றிய விஜயகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி. அதில் இடம் பெற்றுள்ள கருவிசை படம் முழுதும் ஆங்காங்கே ஒலித்து நம் நெஞ்சைப் பிழியும் உணர்வினைத் தரும்.  சரி, இந்தக் கருவிசைக்கு மன்னர் எடுத்துக்கொண்ட அடிப்படை என்ன.. ஏதாவது இருக்க வேண்டும் அல்லவா.

 

ஆம். தங்கப்பதக்கம் படத்தின் கதை,  நேர்மையான ஒரு காவல் அதிகாரி, கண்டிப்பானவர், கடமை தவறாதவர், தன் கடமையில் பந்த பாசத்திற்கு இடம் தராதவர். அவர் மகனோ அவருக்கு எதிர்மறையான போக்கை கடைப்பிடிப்பவர்.  படம் முழுதும் தந்தைக்கும் மகனுக்கும் Tug of War நிலவிக்கொண்டே வரும். மகன் தந்தையை விரோதியாகவே பார்க்கிறான்.  அவரும் தன் பாசமகனை எப்பாடு பட்டாவது நல்வழிக்குக் கொண்டு வரவேண்டும் என முயல்கிறார். இந்தப் போராட்டத்தில் யார் வெல்கிறார்கள் என்பதே கதையின் போக்கை சொல்கிறது.

 

இந்த இருவருக்கும் இடையே நிலவும் எதிர்மறை குணாதிசயமும், எப்படியாவது தன் மகன் நல்ல வழியில் வரமாட்டானா என்ற அளவற்ற பாசம் கலந்த நம்பிக்கையுமுமே மன்னரின் கருவிசைக்கு அடிப்படையாய் அமைந்துள்ளன.  அதற்கேற்ப இந்த கருவிசை, படம் முழுதும் இவர்கள் இருவரும் சந்திக்கும் காட்சிகளிலெல்லாம் இடம் பெறும்.

 

மன்னரின் கருவிசையில் இன்னுமோர் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், நடிகர் திலகத்தின் படங்களுக்கு அவர் இசையமைக்கும் போது அவரையும் அறியாமல் அவரும் ஒரு சிவாஜி ரசிகராய் மாறி விடுகிறார் போலும். பல படங்களில் அவருடைய பாத்திரங்களின் தன்மையும் வேறு பல படங்களில் அவர் ஏற்று நடிக்கும் பாத்திரங்கள் சந்திக்கும் சூழ்நிலைகளையும் அல்லது உறவு முறை சிக்கல்களையும் அடிப்படையாய் வைத்து கருவிசை அமைத்துள்ளார். சொல்லப்போனால் நடிகர் திலகம் படங்களில் மெல்லிசை மன்னரின் கருவிசை எனத் தனியே முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையே எழுதலாம்.  அந்த அளவிற்கு மன்னர் விஷய தானம் செய்திருக்கிறார்.

 

இனி வரும் பதிவுகளில் இந்தத் திரியின் பயணம் மேற்காணும் கண்ணோட்டத்தை அடிப்படையாக வைத்து தொடரும்.

 

நீண்ட பதிவினைப் படித்த அனைவர்க்கும் உளமார்ந்த நன்றி.

 

 

 

 

இது ஒரு Sample தான்.  

 

This post was modified 11 months ago by veeyaar

ReplyQuote
K.T.RAMANAN
(@k-t-ramanan)
Trusted Member
Joined: 8 months ago
Posts: 65
01/10/2019 2:57 pm  

Excellent work.  Thanks a lot Veeyaar Sir / VK.


ReplyQuote
Share: