இசைக்கருவிகள் - மன்...
 
Notifications

இசைக்கருவிகள் - மன்னரின் மேலாண்மை  

  RSS

veeyaar
(@veeyaar)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 189
10/05/2019 5:34 pm  

ஷெனாய் மிகவும் மங்களகரமான இசைக்கருவியாக வடஇந்தியாவில் போற்றப்படுகிறது. நம் ஊர் நாதஸ்வரம் போல் வட இந்தியாவில் அநேகமாக எல்லா விசேஷங்களிலும் முதலில் இசைக்கப்படுவது ஷெனாய்.   ஆனால் தமிழ் சினிமாவைப் பொறுத்த மட்டில் இக்கருவி பெரும்பாலும் சோகத்திற்கே பயன்படுத்தப்பட்டுள்ளது என ஒரு கருத்து நிலவுகிறது. இதைப்பற்றி  என் சிற்றறிவிற்குத் தோன்றியதை குறிப்பிட விரும்புகிறேன். மன்னரைப் பொறுத்தவரையில் அவர் சோகக் காட்சிகளுக்கு அதிகம் ஷெனாய் பயன்படுத்தியதில்லை. அப்படியே இருந்தாலும் பின்னணி இசை என்று வரும் போது ஒரு குறிப்பிட்ட இசைக் கோர்வை படத்தில் முன்பே இடம் பெற்றிருந்து அது மீண்டும் இசைக்க வேண்டிய தேவை வந்திருக்குமானால் அந்த இடத்தில் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார். பாடல் காட்சிகளாகட்டும் பின்னணி இசையாகட்டும் மன்னர் ஷெனாய் பயன்படுத்தியுள்ள விதமும் முறையும் முற்றிலும் வேறு. நெஞ்சைத் தொடும் நெகிழ்வூட்டும் காட்சிகளில் தான் பெரும்பாலும் அவர் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார். சோகக்காட்சிகளுக்கும் இது போன்ற உணர்வு பூர்வமான மற்ற காட்சிகளுக்கும் நிறைய வேறுபாடு உண்டு. நம்மில் எத்தனை பேர் கவனித்திருப்பீர்கள் எனத் தெரியவில்லை. இனிமேல் கவனித்துப் பாருங்கள். அவர் இசையமைத்த படங்களில் மிகவும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் அவர் ஷெனாய் பயன்படுத்தியிருப்பார். அது சோகத்தைத் தாண்டி, பல்வேறு உணர்வுகளில் வரக்கூடியது. நீண்ட காலம் கழித்து சந்திக்கும் போது, ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை பெருக்கெடுத்து வரும் வகையில் வெளிப்படுத்தும் போது, உணர்வு பூர்வமான காதலர்கள் தங்களால் பேச முடியாத நேரங்களில் பின்னணி இசையில் ஷெனாயை ஒலிக்க விடுவது போன்ற ஏராளமான உணர்வுகளின் பின்னணியில் ஷெனாய் ஒலிக்குமேய.ன்றி சோகக்காட்சி என்றால் ஷெனாய் என்ற FORMULA வை மன்னர் எப்போதுமே கடைபிடித்ததில்லை. இதை இன்னும் விரிவாக பல காட்சிகளின் உதாரணங்களுடன் சொல்லலாம். ஆனால் பதிவு மிக நீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன். நன்றி


Quote
Share: