மெல்லிசை மன்னர்கள் ...
 
Notifications

மெல்லிசை மன்னர்கள் .. சகாப்தம் MSV & TKR  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
28/02/2020 3:33 pm  

#எனதுபார்வையில்MSVTKRஇசைரசனை .. 1.

அனைவருக்கும் வணக்கம் சொல்லி
எனது முதல் பதிவு தொடராக ,

எம்.எஸ். விஸ்வநாதன் & ராமமூர்த்தி // மெல்லிசை மன்னர்கள்
தமிழ்த்திரை இசையில் மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் & டி .கே . ராமமூர்த்தி இசையமைந்த காலத்தை முதல் சகாப்தம் என்று முறைப்படுத்தாமல் மேற்கொண்டு செல்ல இயலாது .
பாமர ரசிகை நான்....

ஆலயமணியின் ஓசையைக் கேட்டேன்.... பாடல் தொட்டு ...இன்றும் ..அந்த அம்சத்தை ஒரு புதுமைப் பொலிவோடு...காலத்தின் சூழலில் அடுத்தடுத்து பல பரிமாணங்களில் நின்றும் மனதில் அசைபோட்டு ரசிக்க முடிகிறது . என் போன்றோர் ராகங்கள் கண்டு இசை ரசிப்பதில்லை... பாவங்கள் கண்டுணர்ந்தே... மெய்மறப்போம். அந்த மனித உணர்வுகளை...பாவங்களில் பல வழிகளில் ஓடவிட்டு... எம் போன்றோர் மனதில் குடிபுகுந்தவர்கள் இவர்கள் ...

இவர்களது நுணுக்கமே ...ராகங்களைப் பிரித்து பாவங்களில் அடக்கி... பாடுபவர் குரலிலும்...பாடலாசிரியர் வரிகளிலும். ...இழையோடவிட்டு.... நம் மனங்களைக் கொள்ளையடிப்பதுதான். எப்படி அவர்களால் முடிந்தது ? நான் யோசிப்பது உண்டு . அறிந்து கொண்டது அவர்களது ஆத்மார்த்த இசை அர்ப்பணிப்பால் என்பதே . ராகபாவங்களை..இலக்கணமாகப் பார்க்காமல் இலக்கிய உணர்வுகளோடு அனுகிய முறைதான்...உயிரோட்டம் கொண்ட தாயும் அமைந்தது. இதில் பாவத்தை தொடுபவர் ராமமூர்த்தி ஐயா என்றால்
பக்கபலமாக பலவிதக் இசைக்கருவிகளைக் கையாண்டு , ராகங்களை பிரித்து வேய்வதில் கரை கண்டவர் எம்.எஸ். வி. அவர்கள் . ஆக இந்த மெல்லிசை மன்னர்கள் தந்த பாடல்கள் அதி அற்புதமானவை
அன்று ஊமைப் பெண்ணல்லோ....இசை யில்.. கையாண்ட புதுமை இசையை முதன் முதலில்.. இந்த இரட்டையர்கள் இருவரையும்.. அதிசயித்தேன்...ரசித்தேன்...

எங்கிருந்தாலும் வாழ்க...பாடல் இசை ...நுணுக்கம் மிகுந்தது.
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.. உருளும் சாரட் வண்டியோடு..குதிரைக்
குளம்பிசை... பாடல் பிற்பகுதியிலும் ..மனதில் நின்றொலிக்கும் அற்புதம்.

கர்ணன்...படப்பாடல்கள்...இரவும் நிலவும் வரட்டுமே...ஷெனாய்...நாதம்...நம் நரம்புகளைச் சுண்டி இழுக்கும்..
அன்று திரைஇசை ரசிகர்கள் மத்தியில் ..இசைக்கருவிகளின் ஆதிக்கம் இல்லை. ராகங்களில் இழைந்தோடும் பாவங்களிலும்.. பாடல் வரிகளிலுமே ..கவனம்.. குரல் வளத்தோடு சேர்ந்து பிரதிபலித்தன. இது உண்மை. இங்கு இவர்களில் MSV அவர்களிடம் இசை நுணுக்கங்கள் .. பலவாறாக எளிதில் பிடிபடுபவனவாக இருக்க. ...அதை அவர் நினைப்பதற்கும் மேலாக வயலின் வித்தகரான. TKR ...ராகபாவங்களில். கொண்டு சேர்ப்பார் ... இந்த உடன்பாட்டுச் செயலே ... இவர்கள் காவியப் பாடல்கள் படைக்க ஏதுவாயின. வீணை, புல்லாங்குழல் ...போன்ற மென்மையான இசைக்கருவிகளை விடவும் வயலின் இசையிலேயே அதிக ரக ... பாவங்களை ராகங்களோடு இணைக்க முடியும்.
வித்தகரான TKR ..MSV. யுடன் இணைந்தது தமிழ்த்திரை இசை உலகின் புண்ணியம் என்றே சொல்ல வேண்டும்.
இந்த இணைப்பை முனைப்புடன் ஏற்படுத்தியதில் ... இயக்குனர் ஸ்ரீதர்..ஜி .என். வேலுமணிக்கு முக்கிய பங்கு உண்டு. TKR கூச்ச சுபாவத்தினால் தன்னை எளிதில் முன்னிலைப்படுத்திக் கொள்ளார். மாறாக MSV ..எளிதில் யாரோ டும் இணைந்து பழகும் சாமர்த்தியம் உள்ளவர் இதனாலே கண்ணதாசன் இவரோடு இறுதி வரை இருந்தார். பின்னாளில் எம்ஜிஆர் ..ம் தொடர்ந்து வந்தார் . அதனால் வெளியுலகம் இவரையே அடையாளமாகக் காண ஆரம்பித்ததில் வியப்பில்லை.

நான் ..
இவர்களது
இசையமைப்பில்...ராகபாவங்கள் சங்கதிகளை ..பாலும்பழம் திரையில் தான் முதன் முறையாக உணர்ந்தேன்.ஒன்பது வயதுதான் இருக்கும். ஆலயமணியின் ஓசையில் ..சந்தோஷம்... பாலும்பழமும் பாடலில் சோகம்...போனால் போகட்டும்.... விரக்தியின் உச்சம் ... நான் பேச நினைப்பதெல்லாம்... நளினம்... மற்றவை சரி....இந்த நளினம்.... இவர்கள் மூலம் நம்மை ...இன்றும் வென்று வரும் காவியப் பாடல்கள் அல்லவா..? காதல் சிறகை... மனதில் ஒரு நெகிழ்வு.. ஏற்படுத்துமே.. பொருள் ஆழத்தோடு...இசையும் பொருந்தி ..நம் மனதை ஆட்சி செய்த மாண்பை ..பேசிக் கொண்டே இருக்கலாம்.

பாவமன்னிப்பில்...காலங்களில் அவள் வசந்தம்...ஜனரஞ்சகமான இசை... அத்தான் ..என் அத்தான்... இதில் இசையமைப்பின் கற்பனை... இசையில் விழுந்த பாவங்கள்...நரம்புகளில் மெலிதாகக் குடிபுகும் உணர்வுகளை ஒத்தது.. இவர்களுடைய உன்னதம். நெஞ்சம் மறப்பதில்லை....பாடல் இன்னும் காற்றில் வரும் ரீங்காரமாய் மனதில் ஒலிக்கிறதே...
இதன் பிறகு இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பு நேரம் கூட்டப்பட அதிகம் தமிழ்ப்பாடல்கள் ... எம்மைப் போன்றோர் கேட்கும் வாய்ப்பு பெருக.. இன்னும் இவர்கள் இசையமைத்த பழைய படங்களின் பாடல்கள் அறிமுகமாயின. மன்னாதி மன்னன் ஒன்று. TMS. அவர்களுடன். .. இசைமேதை MLV அவர்களை. ..ஆடாத மனமுமுண்டோ ..? ... எம் போன்ற சிறுவயதினரும் .... இசைஞானம் பற்றி அறிந்திடாதவர். ... அப்பாடலில் மயங்கித்தான் இருந்தோம்.. ஆர்வமான. யுக்திகளில். .. சசுசீலாம்மாவின் வர்களுக்கு குரல் வளம் ...இந்த இவர்களுடைய ராகபாவங்களுக்கு ஒத்துழைக்க.... இவர்கள் அவர் மூலம் மகோன்னதமான பாடல்களைத் தந்தனர் என்றால் மிகை இல்லை.

தொடர்ந்து . மத்தியில் விவிதபாரதியையும் மீறி தமிழ்த்திரை இசை ... விபரங்களுடன் எங்கனும் தமிழர்களைச் சென்றடைந்தது.. இலங்கை வானொலியின் கைங்கரியம்..
மெல்லிசை மன்னர்கள் .. சகாப்தம் (MSV & TKR)
இன்னும் பல கோணங்களில் இவர்களை நினைந்தே மீண்டும் மீண்டும் வருவேன்...
கோதைதனபாலன்


Quote
Share: