மெல்லிசை மன்னர்கள் ...
 
Notifications

மெல்லிசை மன்னர்கள் ..ஒரு சகாப்தம் MSV & TKR  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
29/02/2020 4:19 pm  
மெல்லிசை மன்னர்கள்.... ஒரு சகாப்தம்
விஸ்வனாதன் & ராமமூர்த்தி
இலங்கை வானொலியில் பல பழைய பாடல்களை அறிந்து ரசிக்கும் பாக்கியம் கிட்டியது. அமுதவல்லி, ஆளுககொரு வீடு, மகாதேவி முதலிய காலகட்டத்து திரைப்படங்கள் அறியாத நிலையிலும் பாடல்கள் மனதை நிறைத்தன. ஆடைகட்டி வந்த நிலவோ... எனும் பாடலில் ...சுசீலாம்மாவின் குரல் குழைவின்... துள்ளித் துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை... என்று நுழைவுமுகத்தை மிகவும சிலாகிப்போம். ஆளுககொரு வீடு... அன்பு மனம் கனிந்த பின்னே... இன்னமும். எல்லாம் பாடலாக மட்டுமே ரசனைத் தன்மையில். டி.எம்.எஸ். , சுசீலாம்மா அவர்கள் பெரும்பகுதி இவர்களின் இசையமைப்பில் ஆக்ரமித்தாலும்... வித்தியாசமான குரல்களுக்கும் தகுந்தாற்போல் ...பாடல்களும் இராகங்களும் இனம் காணப்பட்டு ...இவர்களை வெற்றிப்பாதையில் அழைத்துச் சென்றன என்றால் அது மிகை இல்லை. ஸ்ரீனிவாஸ்&சுசீலாம்மா பாடல்களும் இனிமை சேர்த்ததில் நிகரில்லை. இதன் அடிப்படை உண்மை..இணைந்த இருவரின் ஒருமித்த செயல்பாடு. ஒருவர் திறமையை ஒருவர் அங்கீகரித்து ச் சென்ற நேர்த்தி எனலாம்.
 
பாடகர்களைத் தெரிவு செய்யுமிடத்து சில இயக்குனர்..தயாரிப்பாளர்கள் சிக்கலைத் தந்திருக்கலாம். இவ்விஷயங்களில் நன்கு பேசிப்பழகும் MSV..அவர்களே முன்னின்று காரியம் பார்ப்பார். இதில் ஒரு சேதி உண்டு. சுசீலாம்மா வுக்கு. மாற்றுக் குரல் வந்தே ஆக வேண்டும் என்று இயக்குனர் ஸ்ரீதர் ...ஜானகி அம்மாவுக்கு அதிகம் வாய்ப்பளிக்க வைப்பார். போலீஸ் காரன் மகள் ...பாடல்கள் இதற்குச் சான்று. ஆனால் தமிழ் உச்சரிப்பில் இந்த இசை அமைப்பாளர் அதிக கவனம் வைத்ததாலேயே ... பாவங்கள் ரசிகர்களிடையே உள்ளபடி உணரப்பட்டது எனலாம். மற்றொரு குறிப்பிடப்பட வேண்டிய அம்சம் , கண்ணதாசன் போன்ற திறம்பட எழுதும் கவிஞர்களின் வலிமைமிகுந்த வரிகள் ...இவர்களின் ராகத்தெரிவுகளுக்கும். , பாவங்களுக்கு ம் சவாலாக அமைந்து இவர்களுள் ஒரு ஆரோக்கியமான மௌனயுத்தத்தை உண்டாக்கி... நாமும் சாகாவரம் பெற்ற பாடல்களை அடைய நேர்ந்தது.
 
கிராமியப் பாடல்களின் மணம் இல்லாமல் எந்தப் பாடலும் அன்று இனிமை கண்டதில்லை. பாகப்பிரிவினைப் பாடலில் ..தாழையாம் பூமுடிச்சு ... வெற்றி இவர்களது இணைவின் வெற்றிக்கு மற்றொரு சான்று. மலையாளத்தவர்க்கு நம் ஊர் நாட்டுப்புறம் எப்படித் தெரியும்..? என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டு...ரசிக்கப்பட்ட உண்மைகள்.
 
அதோடு நின்றிடவில்லை.
 
இசைக்கருவிகள் ஞானம் யாரும் அவ்வளவாக அறிந்திடாத வேளையில் புதுமை யுக்தியாக சிற்சில பாடல்களில் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ...பாடலையும் மீறி அந்தக் குறிப்பிட்ட இசையை ரசிக்க வைத்தனர்.
 
தங்கத்திலே ஒரு குறையிருந்தாலும் ... பாடல் துவக்க இசை,
 
பார்த்தால் பசி தீரும் ... அன்று ஊமைப் பெண்ணல்லோ.... பாடல் இருமுறை வரும்... அதில் ஒருவித இசைக்கருவியின் தாளநயம் ராகத்தின்பின்னோடே ஓடி வரும் அழகு அற்புத ரசனை. ஏ.எல். இராகவன் & சுசீலாம்மா பாடியதில்... சாவித்திரி யம்மா..ஜெமினி குரல்களில்...அ..னா ..ஆ..வன்னா... சொல்லித் தரும் அழகைக் கோர்த்துவிட்ட நயம் வெகுவான பாராட்டைப் பெற்றது.
 
பார் மகளே பார்... படப்பாடல் இருமுறை வரும். முதல் முறையில் துவக்கத்தில் வரும் ஒரு இசையின் வேகம்... ராகத்தை அள்ளித் தரும் சுகமாய் ... பார் மகளே பார்..நீ .. பாடல். பின்னது, .உருக்கம் சொல்லி மாளாது. இவற்றினால் எனது அந்த வயதுகளிலும் ஏற்பட்ட ஒரு ரசனையின் தாக்கம் ஒரு இன்பமான அனுபவம்.
 
மகாதேவியில்..எம்.எஸ். ராஜேஸ்வரி குரலில்... கன்னிமழலைக் குரல்..எனலாம்.. காக்கா காக்கா மை கொண்டா... எளிமையான பாடல். ஆனால் என்ன ஒரு இனிமை. பாவங்களினால் ஈர்க்கப்பட்ட பாடல்களினின்று சிறிது சிறிதாக... இசையமைப்பையும் உணர வைத்த காலகட்டம் அது. நாங்கள் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து கொண்டு எந்த ஒரு ராகசங்கதிகளையும்..இசைக்கருவிகளின் ஆதிக்கம் பற்றி பேசியதில்லை. அவைபற்றி தெரியாது என்பதுதான் உண்மை. ஆனால் இனிமையான தரமான பாடல்களைத் தெரிநதெடுத்து ரசிக்கும் திறம் எங்களுள் வளர்ந்திருந்தது . இது போன்ற பாடல்களினாலேயே ... என இங்கு சொல்லிக் கொள்ளப் பிரியப்படுகிறேன்.
 
மறுபடியும் வருவேன் ...
 
கோதைதனபாலன்
 

Quote
Share: