#எனது பார்வையில்MSV...
 
Notifications

#எனது பார்வையில்MSVTKRஇசைரசனை..4  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 33
05/03/2020 5:05 pm  

#எனது பார்வையில்MSVTKRஇசைரசனை..4 தொடர்ச்சி...
மெல்லிசை மன்னர்கள் ..ஒரு சகாப்தம்
MSV & TKR

ராகபாவங்களின் பின்னேயே மெல்லிசை பாடல்களை மட்டுமே ரசித்த இதயங்கள் பல... இசைக்கருவிகளின் ஆளுமைச் சக்தியையும் உணர்ந்து ரசிக்கத் துவங்கின என்றால் அது இவர்கள் இருவரது கைங்கரியமே. நுட்பமான இசைச் சங்கதிகளை பாடலுடனே சேர்ப்பதற்கான ஞானம் ஒரு பக்கம் அதிகமாக உருவாக.. அதை வெற்றிகரமாக செயல் படுத்தும் திறமைகள் ஒருங்குடன் இணைபிரியாது இணைந்திருக்க,
இவர்கள் சகாப்தம் படைக்க ஆரம்பித்து விட்டனர் எனலாம்.
அன்றைய ரசனைக்களம். .. நாலுவழியிலும் கைநீட்டி வரவேற்கும் படியான பாடல்கள் உருவாயின.

நல்லதொரு இசைக்கலைஞன் .. வெளியே வந்துவிட்டால்.... உண்மை ரசிகர்கள் ..ரசனையில் வேறுபட்டு நின்றாலும் அவர்கள் விரும்புவதைத் தரப் பாத்தியப்படுகிறார்கள். அதோடு சில தார்மீக உ ணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து ..ஆத்மார்த்தமாக செயல்படும் போது... அவை உச்சம் தொடும் . இவர்கள் அதைத்தான் செய்தனர்... காவியப் பாடல்களும் , காலத்தை வெல்லும் பாடல்களும் பிறந்தன.

காதல் ரசத்தில்.. சாந்தியில் ..நெஞ்சத்திலே நேற்று வந்தாய், காதலிக்க நேரமில்லை... அனுபவம் புதுமை... கர்ணனில். .. இரவும் நிலவும் மலரட்டுமே..., . பாடல்களும் வித்யாசமான முறையில் அமைந்து.. அது போல் பல பாடலகள் வெளிவந்தன.
நாளாம் நாளாம் திருநாளாம்.. பாடல் இன்னும் ஒரு இளமை மிளிரும் பாடலாக அறியலாம்.

பலவிதக் குரல்களுக்குத் தகுந்தாற்போல்
பாடல்கள் தெரிவு செய்யப்பட்டு ..அவையும் காவியப் பாடலாய் உள்ளன.
சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில்.. கர்ணன்... உள்ளத்தில் நல்ல உள்ளம் ... இன்று அனைவர் பார்வையிலும் வேதப்பாடலாகவே தெரிகிறது.
இவரே ...காதலிக்க நேரமில்லை காதலிப்பார் யாருமில்லை... பாடலையும் பாடி ...
ஒருவரே ஒரு முரண்பாடான ரசனைகளை பாடல்களில் காண்பிக்க முடிந்தால் ,
அதுவும் இசையமைப்பின் பிரத்யேக வெற்றியில் சேரும்.
இரக்கத்தின் உருவமாய் உருக்கத்தை தரும் பாடல்களே ... காவியமாகின்றன.
இதற்கு இவர்கள் பாடலை முதலில் வைத்தே அதை ஒட்டி இசை அமைத்தனர்.
இவர்கள் காலத்தில் கண்ணதாசன் போன்றோர் அழகாக இவர்களுக்கு அமைந்தனர் என்றால் அதுவும் இவர்களது மேன்மைக்கு ஒரு கொடுப்பினையே.

சொன்னது நீ தானா... சொல் என்னுயிரே..;
நெஞ்சம் மறப்பதில்லை அது நினைவை இழக்க வில்லை...; மாலைப் பொழுதின் மயக்கத்திலே.... ; மற்றும் உருக்கமே ஒரு புதுமை யான உணர்வில்... "யார் அந்த நிலவு...ஏன் இந்தக் கனவு..?" பாடல்.. ஆக இது போன்ற பாடல்களை ஏராளமாகத் தந்துள்ளனர்.
எல்.ஆர். ஈஸ்வரி அவர்களின் பிரத்யேகக் குரலுக்கென்றே ..இவர்கள் இசையமைப்பில் பல பாடல்கள் அவரை தமிழ்த் திரையுலகில் அடையாளம் காட்டுகின்றன.
இரண்டாவது கதாநாயகிக்கு இவர் குரலே பெரும்பாலும் வரும். பாதகாணிக்கை யில் ..உனது மலர் கொடியிலே....; எங்க வீட்டுப் பிள்ளையில் ... மலருக்குத் தென்றல் பகையானால்... பாடல்கள் சொல்லலாம்.
கறுப்புப்பணத்தில். கவர்ச்சிப் பாடலாக.... ஆட வரலாம்...ஆட வரலாம் ... பாடலும்.... அதிலேயே....' அம்மம்மா கேளடி தோழி....
எனும் இனிமை ததும்பும் பாடலும் இவரே தந்திருப்பார்.
இரண்டுமே முரண்பட்ட சுவை கொண்டவை.
ஸ்ரீனிவாஸ்,டி.எம்.எஸ், திருச்சி லோக நாதன்..இவர்களை ஒருங்கே இணைத்து ..கர்ணனில்.... ' மன்னவர் பொருள் கொண்டு நீட்டுவார்...; நாணிச் சிவந்தன மாதரார் கண்கள்...; என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்... என்றெல்லாம் பாடி ..ஆயிரம் கரங்கள் நீட்டி ...பாடலோடு முடியும்... இசையின் நடையழகு இன்னும் என் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

இவர்கள் இருவரோடு பாடலாசிரியர், பாடுபவர் , இயக்குனர் , தயாரிப்பாளர் , ..எண்ணிய வண்ணம் முடிக்கும் துணையாளர்கள் அழகுற இணைந்து அருமையான கூட்டணி அமைந்து ..அதன் மூலம் தமிழ்த்திரை இசை ..
ஒரு சகாப்தம் கண்டது என்றால்...
எல்லோர்க்கும் ஒரே அடையாளமாய் முன்னுரிமை பெறுபவர்கள்.. இந்த உன்னத இரட்டையர்கள்... எம்.எஸ். விசுவநாதன் & டி.கே. ராமமூர்த்தி ... அவர்களே.. அவர்களே..!

இனி அடுத்து.. தனித்த MSV... , எனும் பார்வையில் ... மீண்டும் எனது பார்வை...

தொடரும்...

KOTHAI DHANABALAN


Quote
Share: