#எனது பார்வையில் தன...
 
Notifications

#எனது பார்வையில் தனித்த மெல்லிசைமன்னர் MSV . 5  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
10/03/2020 3:48 pm  

#எனது பார்வையில்MSVTKRஇசைரசனை..5

மெல்லிசை மன்னர்கள் ..சகாப்தம்

MSV & TKR

தனித்த மெல்லிசை மன்னர் ... MSV.

தனித்து நின்று தீரமாய் தமிழிசை காத்தவர்.

இந்த இறுதிப்பகுதியில் தனித்த MSV... அவர்கள் இசையில் எனது ரசனைகளை..எண்ணங்களை இங்கே பதிவிடுகிறேன். இரட்டையராக இருந்தவர்களை மெல்லிசை மன்னர்... என்று தனித்த தனியாகப் பிரிந்த பிறகு... ..தனித்த MSV தனித்த TKR என்று அழைத்திடுவதே எனது பழக்கம்

அன்றைய காலத்திலேயே இவரது பாடல்கள் பழையன போல் இல்லையே எனச் சிந்திப்பதுண்டு. பொதுவான உண்மை , நல்ல ரசிகர்களுக்கு எந்தப் பாடலும் மறக்காது. அந்தவகையில் ..இத்தனை வருடங்கள் கழித்து இன்னும் என் மனம் அசை போட்டுப் பார்க்க ...சில உண்மைகள் மனதில் பதிவாகின்றன.

பிரிந்த புதிதில் .. "கலங்கரை விளக்கம்" பாடல்கள் இதயத்தைத் தொட்டன. "பொன்னெழில் பூத்தது புது வானில் ..."... " என்னை மறந்ததேன்... "" " சங்கே முழங்கு ... ' இன்றும் அதே ரசனையில் நாம் கேட்கலாம் . சந்தி ரோதயம் " திரைப் பாடல்கள் பிரபலம். "சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ.. " இன்றும் கேட்க சுகமே.

புதிய பாடகர் SPB.. அன்று, " பொட்டு வைத்த முகமோ.. " எனப் பாடி அசத்தினார்.

இக்கட்டத்தில் இசைக்கருவிகளின் ஆதிக்கம் தலைகாட்டியது. அது ரசனையாளர்கள் மத்தியில்.. பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு ஆத்மார்த்த இசை என்பது சற்று மாறி, கேட்பவர்களுக்காக பல ரசனையாளர்களைத் திருப்திப்படுத்த, இசை அமைப்பாளர்களுக்கு கட்டாயம் என்ற ஒரு புதிய சூழ்நிலை உருவாயிற்று .

இந்திப் பாடல் தாக்கம் அவர்கள அலைக்கழித்ததும் ஒரு காரணம். " சாந்தி நிலையம் " பாடல்களில் அவ்வளவு இனிமை ..பாவங்கள்.. தந்தவர் , இசை பாதை மாறிப் பயணித்தது காலத்தின் கட்டாயம். தமிழ்த் திரையுலகு ...விடுத்த அந்த அறைகூவல் .தனித்த மெல்லிசை மன்னர் MSV... என்ற ஒருவரே எதிர் கொண்டார். சில அழுத்தமான வெற்றி தமிழ்த் திரைக்காக ப் பதித்தார். உண்மை ...உண்மை..

உலகம் சுற்றும் வாலிபனில் ... இவரது இசையில் களித்தேன்.. கருவியின் இரைச்சலும் ஒரு புதுமை நாதமாகக் கேட்டது. சிவந்தமண் ..இது போலவே. ஆனால் இன்று கேட்க...அந்த ரசனை என்னிடம் இல்லையே. ஆர்வமும் இல்லை.. காரணம்.. யோசனை செய்தே இந்தப் பதிவு. மக்களை திருப்திப்படுத்த .. இவர் ஒருவரால் தான் அன்று முடிந்தது.

நடுவில் ".நாளை இந்த வேளை .. " உயர்ந்த மனிதனில்..சுசீலாம்மா பாடியது தேசீய விருது பெற்றது. பலருக்கும் அப்பாடல் இன்றும் பிடிக்கும்.. ஏனோ அதில் எனக்கு ஆர்வம் இல்லை. மாறாக...அவளுக்கென்று ஓர் மனம்...திரையில் ஜானகி அம்மா அவர்கள் பாடிய ... " உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்.... ' இசை யோடு பாடல் இன்றும் அற்புதம். " சொல்லத்தான் நினைக்கிறேன் ....." பாடலும் இதே ரகம். அவர் குரலோடு ஜானகியம்மா குரலும் இணைந்து ஒரு இனிய நாதமாக இன்றைக்கும் கேட்க எனக்குப் பிடிக்கும் .

வாணிஜெயராம்.. அவர்களை ..இந்துஸ்தானி சங்கீத ரசனைக்காகவே அறிமுகப்படுத்தினார். 'மல்லிகை ..என் மன்னன் மயங்கும்... " பாடல் அந்த மெட்டோடு.. பெரியதொரு வரவேற்பைப் பெற்றது. "தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு.. " தங்கப் பதக்கத்தில் ,

இன்னும் சில வாணியம்மா அவர்கள் குரலில் வந்தாலும்... அபூர்வ ராகங்களில் ...கண்ணதாசன் வரிகளின் பெருமையில்...

" ஏழுஸ்வரங்களுக்குள்.. " மற்றும் ' கேள்வியின் நாயகனே... " காவிய பாடல் வரிசையில் அமைந்து விட்டன . யேசுதாஸ் குரலில் .. விழியே கதை எழுது.. , தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு... அதிசயராகம் ஆனந்தராகம் போன்ற பாடலகள் இன்னும் சுகம். எனக்கு .."வாழ்வு என் பக்கம் " திரையில் .. வீணை பேசும் ..அது மீட்டும் விரல்களினின்று.. இனிமை.. இனிமை இன்னும் இனிமை.

"சீர்வரிசை" யில், " கண்ணனை நினைக்காத நாள் இல்லையே... " மிகவும இனிமை. மற்றும் " மண்ணில் வந்த நிலவே..." , " என் ராசாவின் ரோஜா முகம் .." இன்னும் சலிக்காத பாடல்கள்.

காபரே டான்ஸ் பிரியர்களுக்காக ..ஈஸ்வரி அவர்களின் பிரத்யேகக் குரலை இனம் கண்டு அந்த நேர வெற்றிப் பாடல் அள்ளி வழங்கியவர் நம் மெல்லிசை மன்னர் எம். எஸ். வி. அவர்கள். " பட்டத்து ராணி பார்க்கும் பார்வை..", " அடடா என்ன அழகு..."

இவை அவரது தனித்திறமைக்கு கட்டியம் கூறுபவன. .

அவருக்கு இசை எல்லாம் ஒன்றே.. ரசனையாளர்களின் பக்கம் இதயம் தொட்ட இசையே சகாப்தம் எனப்படும்.

நினைத்தாலே இனிக்கும் பாடல்கள் பற்றிப் பேசுகின்றனர். என் பார்வையில் எனக்கு அதில் அவ்வளவாக ஈடுபாடில்லை .. ஆனால் அன்று ஹரேராம ஹரேகிருஷ்னா.. இந்திப் பாடல் பின்னே சென்றவர்களை நிறுத்தி சற்று திசை திருப்பியது உண்மை. இசை கருவிகளின் ஆதிக்க ரசனை ...அது .

"பட்டிக்காடா பட்டனமா"வில்... "அடி என்னடி ராக்கம்மா... " பாடலும் சரி... அதற்கு நேர்மாறான சுவையில்... "அவன்தான் மனிதன்." திரையில் .. "மனிதன் நினைப்பது ண்டு வாழ்வு நிலைக்குமென்று.... "பாடல்... அருமையான அரிதான உருக்கம். கண்ணதாசன் வரிகளில் இவர் இசை சற்றுப் பெருமைபட வந்துள்ளதை என் மனம் உறுதிப்பாடாக அறிகிறது.

நினைவில் வந்ததை உரைத்திட்டேன்..இன்னும் சில விடுபட்டிருக்கலாம். எது எப்படியாயினும் தனித்து.... தளரும் கட்டத்தில் , இளையராஜா பிரவேசம் ..தமிழ்த்திரையின் அடுத்த சகாப்தம். தமிழ்த் திரையுலகை வைத்தே என் பதிவுகள் வரும் . மற்றபடி வேறு காரணம் இல்லை .

தனித்த மெல்லிசை மன்னர் MSV அவர்கள் தமிழ்த்திரையிசை யுலகைக் காத்த வரிசையில்தான் ..

இவரை ஒரு

தீரம் மிக்க உன்னதக் கலைஞனாய்...

நடிப்பில் சிவாஜி போன்று இசையில் இசைப்பட வாழ்ந்தவராய் வணங்குகிறேன்...

என்றும் நன்றி மறவாத தமிழ் உலகம்,

தமிழ் இசை காத்த உத்தமராய் .. வாழ்த்தும்.

மெல்லத்திறந்தது கதவு...

ஆம்... 'வா வெண்ணிலா..."என்று எம்.எஸ்.வி . யும்..

' ஊரு சனம் தூங்கிடுச்சு...

என இளையராஜாவும்... சரித்திரம் காணா பாடல்கள் ஒற்றுமையாய் வழங்கியிருப்பர். ...

யாராயினும் தமிழில் நல்லதொரு இசைக்கு யாம் அடிமை.

கோதை

KOTHAIDHANABALAN


Quote
Share: