#எனதுபார்வையில்MSVT...
 
Notifications

#எனதுபார்வையில்MSVTKRஇசைரசனை ..3 தொடர்ச்சி.  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
01/03/2020 5:03 pm  

#எனதுபார்வையில்MSVTKRஇசைரசனை ..3 தொடர்ச்சி.

இசையமைப்பு. .. இசைக்கலையில் ஒரு தனி அங்கம். இதில் கொடுப்பதும் கொள்வதும் அதிகம். ஒன்று உறுதியாகச் சொல்லலாம். இதை இலக்கணத்திற்கு கட்டுப்பட்டு கையாண்டவர்கள் ஏட்டளவிலே புகழ் பெற்றவராய் இருக்கலாம். ஆனால் இலக்கியமாய் .. ஒரு சுதந்திர உணர்வுகளில் கையாண்டவர்களே மக்கள் மத்தியில் மறவாப் புகழாய் வெற்றி பெற்றவர்கள் எனலாம்.

இசை கர்நாடக இசையினினறு விலகி மெல்லிசை .. என்ற நிலைக்கு வர ..எல்லாப் பரிவர்த்தனைகளும்... பாவங்கள் கெடாத வகையில் ..ஆந்த மொழி கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டு வெற்றியும் கண்டன. இதற்கு உதாரணமாய்.. .. ஜிக்கி அவர்கள் பாடிய .. சின்னப் பெண்ணான போதிலே... ஆரவல்லி திரையில்.. ஆங்கிலபபாடலைத் தழுவியது.. மூலம் மகனைப் பார்த்து தாலாட்டு பாடுவது போல் ..தமிழில் காதலனை ப் பார்த்து பாடுவது போல். நான் வியந்தேன்.. இசையின் வித்தைகளை இப்பாடல் பரிமாற்றத்தில் கண்டேன்.

இதுபோல் ..ஜி.ராமணாதன்... அவர்கள் இசையில்..வெண்ணிலா ஜோதியை வீசுதே... பாடலும்... பாலசரஸ்வதியம்மா பாடிய ... மல்லிகைப் பூ ஜாதி ரோஜா... போன்ற பாடல்கள் ரசனையாளர்கள் மத்தியில் ஒரு வரவேற்பைப் பெற்றன. இந்தத் தாக்கம் ..இந்தப் புகழ்மிக்க இரட்டையர்களிடமும் அழகாக படிந்திருப்பதை அடுத்தடுத்து வந்த பல பாடல்கள் நிரூபித்தன.

அன்று வந்ததும் இதே நிலா... பாடலில் ஆங்கில நடனக்கலையின் பிண்ணனி இசை.. அழகான தமிழ் வரிகளோடு.. சச்சச்சா... என்ற சொல்லாட்சி சங்கதிகளும் சேர்க்கப்பட்ட நயம்.. தமிழ்ப் பாடலா இது..? கேள்வி எழுந்தாலும்.. தமிழ்ப் பாடலே எனக் கட்டியம் கூறின.
என் கடமை திரையில்... யாரது யாரது தங்கமா...? ... இதன் மேற்கத்திய இசைப் பிண்ணனி... ஒன்..டூ..த்ரீ.. ஒன்.டூ.த்ரீ...லாலலம்கம்.. லாலலம்கம்... இத்யாதி சங்கதிகள் கலவை... இன்றைக்கும் கேட்க சுகமே. சாந்தி திரையில்.... யார் அந்த நிலவு..... பாடல்... தமிழ் சோகத்திற்கு ... மேற்கத்திய இசை வளைந்தது இவர்களிடம்.... நடிகர் திலகமோ... நடிப்பில் யோசிக்க இரண்டு நாள் அவகாசம் எடுத்துக் கொண்டார்... அற்புதக் கூட்டணி வென்றது.

பறக்கும் .. பந்து பறக்கும்... இப்பாடல் .. அன்றைக்கு ஒரு பழைய ஒரு தமிழ்ப் படப் பாடல் ஒன்றின் தாக்கமாயிருந்தாலும்... இவர்கள் கையில் மெருகேறியது.. பந்து விழும் சததமே ... ஒரு நாதமாய் கொண்டு வந்திருப்பர்.
நெஞ்சில் ஓர ஆலயத்தில்..
எங்கிருந்தாலும் வாழ்க.... பாடலில் ...ஒரு இரவின் அற்புதச் சுழலை அப்படியே ..பல யுக்திகளைப் பயன்படுத்திக் கொண்டு வந்திருப்பர்... குறிப்பாக தவளைச் சத்தம்..
இவையெல்லாம் சோகரசத்தினுள்ளே..
பாலும்பழம் ...திரையில் போனால் போகட்டும் போடா... பருந்து மயங்கும் நிலை... இடுகாட்டின் ஓலம்.. புறக்கணித்துச் செல்லும் நடைக்கும் ஒரு ...அற்புத இசையாக... இவர்களே...இவர்களே...தந்தந்தனர் என்றால் மிகை இல்லை.
மென்மை க்கு... ஆலயமணியில்.... தூக்கம் உன் கண்களை...பாடலையும். , மனத்தவிப்புக்கு ...பரிகாரம் தேடும் துடிப்புக்கு ஏற்ற விதமாய்... சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.... இப்படி நாங்கள் வியந்து வியந்து ரசித்தவை ...இன்னும் எத்தனையோ...அத்தனையும் அருமை. இப்பாடல்களில் பாடலோடு இசையமைப்பையும் சரிசமமாக ரசிப்போம்.. அந்த அளவிற்கு ரசனை மேலும் வளர்ந்தது.

தொடரும்....

கோதைதனபாலன்


Quote
Share: