MSV - THE COMPOSER ...
 
Notifications
Clear all

MSV - THE COMPOSER PAR EXCELLENCE  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
09/02/2020 9:39 am  

                                             பின்னணி பாடகர்கள் -அறிமுகம்

அன்பர்களே

மேற்கூறிய ஆங்கில தலைப்பை மொழி பெயர்க்காமல் பயன்படுத்த  காரணம்- அத்தலைப்பு உணர்த்தும்   மெல்லிசை மன்னரின் சீர் மிகு  தொழில் திறன் என்பதே.  சரி    -தொடங்கிய உட் தலைப்பில் நாம் காண விழைவதென்ன? இசை அமைப்பாளர்கள் குறைந்தது இருவருக்காவது தத்தம் கால கட்டத்தில் வாய்ப்பளித்திருப்பார்கள் . சொல்லப்போனால் அவ்வாறு புதிய குரல் தேடலில் அவர்களுக்கு நிச்சயம் ஆர்வம் உண்டு. அதற்கு பல காரணங்களும் உண்டு.ஆனால் புதுக்குரல்கள் தொடர்ந்து நிலை பெறுதல் என்பது, அந்தக்கலைஞர்களின்  தொழில் திறன் சார்ந்ததே அன்றி இசையமைப்பாளர்களின் பங்களிப்பு அன்று.  .

 நிச்சயமாக மெல்லிசை மன்னரும் புதிய குரல்களை பயன்படுத்த தயங்கியதில்லை -provided -அந்தக்கலைஞர் பாடல் நுணுக்கங்களை சிறப்பாக வெளிப்படுத்த கூடியவர் எனில். இதற்கு சில பிரத்யேக நிகழ்வுகளை சுட்டிக்காட்ட இயலும். சிறந்த கர்நாடக  இசை வல்லுனர்களான எம் எல் வசந்தகுமாரி , எம்.பால முரளி கிருஷ்ணா, நித்யஸ்ரீ , பம்பாய் ஜெயஸ்ரீ போன்றவர்களை வெகுசிறப்பாக பயன்படுத்திக்கொண்ட பெருமையும் மெல்லிசைமன்னருக்கு உண்டு. முகத்தில் முகம் பார்க்கலாம் [MLV , TMS - மன்னாதி மன்னன்]. தங்க ரதம் வந்தது [பாலமுரளி - பி.சுசீலா], [ இந்த பாடலுக்கு பின் தான் திரைப்படங்களில் பலமுரளியின்   குரல் அவ்வப்போது பயன் படுத்தப்பட்டது என்பதை நினைவு கூற விரும்புகிறேன் ]

சரி வரிசைப்படி சில அறிமுகங்களை பார்ப்போம்

1964

கே ஜே .யேசுதாஸ்

முதலில் "பொம்மை" படத்தில், எஸ் .பாலச்சந்தர் தான் KJ J அவர்களை அறிமுகம் செய்தவர் . ஆனால், மிகப்பெரிய பாடகர் அந்தஸ்து KJJ க்கு "காதலிக்க நேரமில்லை " படத்திற்கு பின்னர் தான் கைகூடியது. அதுவும் ஒரே படத்தில் இரண்டு பாடல்கள் இரண்டும் சூப்பர் ஹிட் -என்ன பார்வை , நெஞ்சத்தை அள்ளிக்கொஞ்சம் என்ற இரண்டும் அவரை விரைவாக அறியச்செய்தன .

1964

எம்.பாலமுரளிகிருஷ்ணா

கலைக்கோயில் மூலம் தங்கரதம் பாடலில் அறிமுகம். பின்னர்தான் 'திருவிளையாடல்' படத்தில் ஒரு நாள் போ துமா' பின்னர் வேறு படங்களில் பாடத்துவங்கினார்.       

1968

பி..ஜெயச்சந்திரன்  "மணிப்பயல் " படத்தில், தங்கச்சிலை போல் பாடலில் அறிமுகம். பின்னர் அலைகள் படத்தில் பொன்னென்ன , பூவென்ன கண்ணே ' பாடல்., பின்னர் மந்தார மலரே பாடல் "நான் அவனில்லை 'படத்தில்  மேலும் பல படங்களில் பாடியுள்ளார் .

கிட்டத்தட்ட 1967-68 காலகட்டத்தில்,  ஷோபா - சுரேந்தர் என்ற இரு குழந்தைகள் , எம் எஸ். வி இசையில் பாடத்துவங்கின . இவர்களில் ஷோபா தான் நடிகர் விஜய் -ன் தாயார். சுரேந்தர் பல இசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பவர்.

1969

எஸ்.பி..பாலசுப்ரமணியம்

எம் எஸ் வீ இசையில் ஹோட்டல் ரம்பா படத்தில் எல். ஆர். ஈஸ்வரியுடன் பாடினார். ஆனால் படம் தடைப்பட்டது. "சாந்தி நிலையம்" படத்தில் பி. சுசீலாவுடன் இணைந்து பாடிய "இயற்கை என்னும் இளைய கன்னி" பாடல் எஸ்.பி. அவர்களை புகழின் உச்சிக்கு உயர்த்தியது.

 1973

வாணி ஜெயராம்

"தீர்க்க சுமங்கலி" படத்தின் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' பாடலில் தமிழில் , எம்.எஸ் வி இசையில் அறிமுகம். பின்னர் வி.ஜெ தேசிய விருது உயரத்திற்கு சிகரம் தொட்டதும் எம் எஸ். வி இசையில் தான்.

பாடகி ஸ்வர்ணலதா வும், மலேசியா வாசுதேவனும் - எம் எஸ் வியின் அறிமுகங்களே .

ஓரிரு பாடல்களே ஆனாலும்  சந்திரபோஸ் [ ஏண்டி முனியம்மா]] , எம். எல். ஸ்ரீகாந்த் [காதல் காதல் என்று பேச ].   .  பாடலில் ஹம்மிங் எனினும் ,மிகுந்த வரவேற்பை பெற்ற குரலுக்கு சொந்தக்காரர்கள்.   

வெறும் ஹம்மிங் மூலமாகவே சில பாடகிகளையும் புகழ் பெற வைத்தவர் மெல்லிசை மன்னர்.

"வீணை பேசும் [மீண்டும் வாழ்வேன்" படத்தில் ஊமையின் உருக்கமான ஹம்மிங் பி, எஸ், சசிரேகா , மற்றும்

பொ ட்டுவைத்த   முகமோ பாடலில் பி.வசந்தாவின் நளினமான குதூகல ஹம்மிங் என்று மெல்லிசை மன்னர் அரங்கேற்றிய விந்தைகள் ஏராளம்.

இதில் நான் தெளிவாக குறிப்பிட விழைவது , முதல் பாடலிலியே , அவர்கள் மார்க்கெட் பிடிக்கும் அளவிற்கு வாய்ப்பளித்து பாடகர்களுக்கு வலுவான தளம் அமைப்பவர் மெல்லிசை மன்னர். அவரை அல்லவா நாம் இழந்து நிற்கிறோம் ஏழைகளாக.

மீண்டும் பிறிதொரு களத்தில் சந்திப்போம். அன்புடன்  ராமன்        மதுரை..


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Trusted Member
Joined: 1 year ago
Posts: 67
10/02/2020 8:31 am  

Dear Prof 

இன்னும் நிறைய பாடகர்களை அறிமுகப் படுத்தியது மெல்லிசை மன்னர் ஆகத் தான் இருக்க முடியும் நாகூர் ஹனிபா, ஷேய்க் தாவுத், Ananthu ஜெயஸ்ரீ கோவை sound rajan. Madurai GSMani etc

best Regards
vk


ReplyQuote
Share: