மெல்லிசை மன்னர் காட...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னர் காட்டிய முத்திரை உத்திகள்  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
18/02/2020 1:12 am  

ஒரு இசை அமைப்பாளருக்கு முதல் தேவை - கிடைத்த பாடல் வரிகளுக்கு 'framing ' எனப்படும் ராக அமைப்புக்குள் சொற்களை அடக்குவது தான்.   சரி,

கவிஞர் கள் இந்த அமைப்புக்கு உட்பட்டு சொற்களை நிறுவுவார்களா அல்லது காட்சியின் தேவை கருதி சொற்களை தொகுப்பார்களா என்றால் ...  ம் ம் ம்  யோசிக்க வேண்டியுள்ளது  .இக்கால சூழலில் எதையாவது எழுதி 'தாள ' அமைப்பு விலகாமல் வார்த்தைகளை பொருத்தினால் போதும் -கவிஞர் என்று காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.

நாம் பரிசீலனையில் இறங்கியிருக்கும் 1950-80 கால கட்டத்தில் , பல தேவைகளுக்கும் ஈடு கொடுத்தால் தான் சினிமா கவிஞன் இல்லையேல் கோடம்பாக்கம் தெருக்களில் வாய்ப்பு தேடி அலைய வேண்டியதுதான்.

படிப்படியாக கவிஞரும் -இசையமைப்பாளரும் ஒரு ஆழமான புரிதலும் அனுசரணையும் கைக்கொண்டு பணியாற்ற துவங்கிய காலம் கண்ணாதாசன்- எம் எஸ் வி / கே வி எம் போன்றவர்கள் இணைந்த பிறகுதான் என்பதை பல சான்றுகளுடன் புரிந்துகொள்ளலாம்.  ஆனால் என்னைப்பொறுத்தவரை இதற்கெல்லாம் சான்று தேடிக்கொண்டிருப்பதில் உடன்பாடில்லை. ஆங்கிலத்தில் "Proof of the pudding is in the eating ' என்பார்கள். அதாவது உணவின் சுவையை பலரும் உண்பதிலிருந்தே புரிந்துகொள்ளலாம் என்பதே.அதே போல பாடல்கள் பெற்ற வரவேற்பை அளவுகோலாக   கொண்டால் நிலைமை தெளிவாக புரியும் , கண்ணாதாசன்- எம் எஸ் வி இருவரின் ஆளுமை பற்றி.

சரி இவர்களின் ஆளுமை எத்தகையது - அதை விளக்கவோ விலக்கவோ முற்படுவது நடை முறை யில் எளிதன்று . ஏனெனில் இந்த இக்கட்டான சூழலை நமக்கு தெளிவு படுத்தவே மெல்லிசை மன்னர் 'மீட்டர் /மேட்டர் என்று ஒரு சொல் வழக்கை மிகஎளிதாக கையாண்டார். எந்த அளவுக்கு அவர் தமிழ் மொழியில் பரிச்சயம் பெற்றிருந்தார்  என்பதை அவர் பேச்சு , பாடல்களில் சொல்லுக்கு முன்னுரிமை , உச்சரிப்பில் ஆழ்ந்த கவனம் என்று அவர் பாடல்கள் பறைசாற்றுவதை நாம் அறிவோம்.எனவே அவர் தமிழ் பாடல்களுக்கு இசை அமைக்கும் போது எவ்வித திணறலும் இல்லாமல் மிகுந்த பண்பட்ட பக்குவத்துடன் உருவாக்கமுடிந்தது. இசை நுணுக்கங்களில் அவர் வேற்று மொழி பண்புகளை லாவகமாக நுழைத்திருந்தாலும் தமிழின் சுவை குன்றாமல்  மெருகேற்றினார் . அவரின் உத்திகளுக்கு ஆரம்பம் தேடுவது நதி மூலம் -ரிஷி மூலம் போன்றதுதான் 

சரி அவரின் மீட்டர் என்று ட்யூனுக்கான அளவுகோலையும் , மேட்டர் என்பது பாடல் வரிகளில் உள்ள சொற்களையும் என்று புரிந்துகொள்ளலாம் . எது முன்னது எது தொடர்வது என்ற முடிவு பாடலின் பண்புகள் , காட்சியின் தன்மை பற்றியது.

நான் சொல்வதற்கு நீ வேலை செய் என்று கண்ணாதாசனும் -மெல்லிசைமன்னரும் ஒருவரை ஒருவர் எளிதாக தங்கள் ஆளுமைக்குள் கொண்டு வந்து அற்புதமான பாடல்களை கொடை வள்ளல்களாக வாரி வழங்கினர். பொருளுக்கும் பெருமைக்கும் அலையாமல் ஆத்ம திருப்திக்கே செயல் பட்டுள்ளனர் என்று பாடல்களின் கம்பீரம் நமக்கு வெளிச்சம் போட்டு காட்டுகின்றன . இதைத்தான் மெல்லிசை மன்னர் -தனது சொற்றொடராக   'இறக்கும் மனிதர்கள் இரவாப்பாடல்கள் மற்றும் "MORTAL MEN- IMMORTAL SONGS' என்றும்  மகிழ்ச்சியுடன்   கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். இவ்வாறு இவர்கள் பாடலுக்கு சேர்த்த அணிகலன்களை தொடர்ந்து காண்போம்.

அன்புடன் நன்றிகள் - ராமன்   மதுரை


Quote
Share: