மெல்லிசை மன்னர் இசை...
 
Notifications

மெல்லிசை மன்னர் இசைத் திறன் மற்ற சாதனையாளர்கள் கூறியவை  

  RSS

M.R.Vijayakrishnan
(@v-k)
Admin Admin
Joined: 1 year ago
Posts: 78
26/02/2020 7:47 am  

நண்பர்களே 

நாம் அனைவரும் அறிந்த மெல்லிசை மன்னர் இசைத் திறனைப் பற்றி அவருடன் பணி புரிந்தவர்கள் மற்ற சாதனையாளர்கள் கூறியவற்றை இங்கு பதியலாம் 

best Regards
vk


Quote
K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 104
26/02/2020 10:12 am  

மெல்லிசை மன்னர் காட்டிய முத்திரை உத்திகள் -2
எம் எஸ் வி -டி கே .ஆர் இணைந்திருந்த 1960 களில் சினிமாப்பாடல்கள் புதிய பாதையில் பயணிக்கத்துவங்கின .பின்னாளில் அதுவே மெல்லிசை என்ற பட்டத்தையும் , இவ்விரு இசை அமைப்பாளர்களுக்கு மெல்லிசைமன்னர்கள் என்ற விருதையும் வாங்கிக்கொடுத்தது
[.இந்நிகழ்விற்கு பின்னர் தான் இசையமைப்பாளர்கள் வேறு வேறு 'பட்டங்களை ' பெற்று அல்லது இணைத்துக்கொண்டனர். உதாரணமாக , ஜி ராமநாதன், ஆதிநாராயணராவ், எஸ் எம் சுப்பையாநாயுடு ,டி .ஜி.லிங்கப்பா, எஸ் வி வெங்கடராமன் என்று தத்தம் பெயரிலேயே அறியப்பட்டனர். பின்னாளில் வந்தவர்களுக்கு புயல், தென்றல் , சூறாவளி , சுனாமி என்றெல்லாம் பெயர்கள் அடையாள முத்திரைகளாக பயன் பட்டன. எ ம் எஸ் விக்கு முன்னோடிகள் பெரும்பாலும் ஆஸ்தான பதவிகளாக கம்பெனி இசைஅமைப்பாளர்களாக பணியாற்றிவந்தனர் ] ஆஸ்தான பதவி கலாச்சாரத்திற்கு விடை கொடுத்தது மெல்லிசைமன்னர்களின் திறமையை பயன்படுத்திக்கொள்ளவே என்பது தமிழ்த்திரை தன்னை ஒரு மாற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல உடன்பட்டது. என்பதற்கான சான்று
யார் யார் எந்த கம்பெனியில் என்பது இன்றைய நமது முயற்சியை முன்னெடுத்துச்செல்ல பயன் படாது . இத்துணை ஜாம்பவான்களுக்கிடையே மெல்லிசைமன்னர்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினர் எனில் அவர்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையுமே இசை என்னும் சாம்ராஜ்ஜியத்திற்கே அர்பணித்திருந்தனர் என்றே நாம் உணர வேண்டும்.இல்லையேல் 1960 களில் திரை உலகம் இவர்களை நோக்கி திரும்பியிருக்குமா ? நான் முன்னர் தெரிவித்திருந்த ஆஸ்தான இசை அமைப்பாளர்கள் தங்களுக்கென்ற சில இசை அமைப்புகளை சிறப்பாக பயன் படுத்துவதில் வல்லவர்கள். உதாரணமாக -உத்தம புத்திரன் , அம்பிகாபதி , வஞ்சிக்கோட்டை வாலிபன், பார்த்திபன் கனவு, அடுத்தவீட்டுப்பெண் படப்பாடல்களை நினைவு கூறுங்கள். அப்போது புரியும் மெல்லிசைமண்னர்கள் எப்படி தரமான பாடல்கள் மூலம் மையப்புள்ளிக்கு வந்திருப்பார்கள் என்பது.
இந்த காலத்தில் தான் கண்ணதாசன் , மெல்லிசை மன்னர்கள் தங்கள் சித்து விளையாட்டை துவங்கினர் என்பதை நான் எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நினைவுகொள்பவன் .
ஆமாம் மெல்லிசை மன்னார் காட்டிய உத்திகள் என்று துவங்கிவிட்டு , இவர்கள் செய்த அணிகலன்கள் என்று கண்னாசனையும் -மன்னரையும் இணைப்பது ஏன் என்ற கேள்வி எழும் . இதில் நான் தெளிவுபடுத்த வேண்டியது - 'சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும்' எனும் பழமொழிக்கு இலக்கணமாக திகழ்வன கவியரசரின் கவிதையும், மெல்லிசைமன்னரின் இசையும் இவற்றில் முன்னது சுவர், பின்னது சித்திரம் சில நேரங்களில் சித்திரம் சுவரையும் , சுவர் சித்திரத்தையும் விஞ்சியதுண்டு . எனினும் பல நேரங்களில் ஒன்றையொன்று தாங்கிப்பிடித்த தோழமை இந்த இணைப்பின் உலகப்ரசித்தம்.
வாருங்கள் விளையாட்டைக்காண்போம் .
'மலர்ந்தும் மலராத பாதி மலர்போல ' - "பாச மலர் " இதில் கவி உயர்ந்ததா , இசை உயர்ந்ததா ? ஒன்றை ஒன்று விழுங்கப்பார்க்கும் திறமைச்சுடர்கள். அது ஒரு ஆரோக்கியமான போட்டி.. இந்தப்பாடலில் கண்ணதாசன் தமிழில் திளைத்தார் என்றால், மன்னர் அரங்கேற்றிய ஆரவாரமில்லாத இசை , கவிக்கு குடை பிடித்த அழகு இசையில். இதேபடத்தில் ஒலித்த 'மயங்குகிறாள் ஒரு மாது' பாடல், இசைக்கு சாமரம் வீசிய கவி என்ற அனுசரணை .
எத்துணையோ வர்ணனை பாடல்கள் தமிழ்த்திரையில் பிரபலம் என்றாலும் ,
'காலங்களில் அவள் வசந்தம்' -[பாவ மன்னிப்பு] பெற்ற வரவேற்பு , பட்டி தொட்டி எங்கும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி என்ற பெயரை பரப்பியது. உண்மையை பேசினால் வியப்பாக இருக்கும். வி -ரா என்பது ஒரு நபர் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களும் உண்டு. ஒரு சில நேரங்களில் தபால் தலை அளவு புகைப்படங்கள் வெளியான பிறகே விஸ்வநாதன் வேறு, ராமமூர்த்தி என்பவர் வேறு என புலனாயிற்று . இந்த தகவல் , சினிமாத்துறை குறித்த செய்திகளுக்கு அச்சு ஊடகங்களின் அக்காலத்திய நிலைப்பாட்டை தெளிவு படுத்தவே.
எனினும் மெல்லிசைமன்னர்களின் முகங்களையும் , கண்ணதாசனின் உருவையும் பெருவாரியான மக்கள் மனக்கண்களால் வரித்திருந்தனர் - இவர்கள் மீது அவ்வளவு ஈர்ப்பு எனது தலைமுறையினருக்கு. எங்கள் காலத்திய மாணவர்கள் கவியரசர் , வி-ரா- தகவல்களை உரத்து ஒலிக்காவிடினும், மறக்காமல் மெல்லிய குரலில் சம வயதினருடன் பகிர்ந்து கொண்டமை , சுதந்திர போராட்ட காலத்திய இந்திய மக்களின் நிலையை ஒத்திருந்தது. புற ஒலியில் மென்மையும் அக உணர்வில் தீவிரமும் என வி-ரா எங்களை வயப்படுத்திக்கொண்டே இருந்தனர். என்னடா இவன் எங்கோ போய்க்கொண்டு இருக்கிறானே என ஐயம் வேண்டாம் , இவர்களின் வளர்ச்சி எத்தகைய தடைகளைத்தாண்டியது என்பதை இளையோர் ஆழ்ந்து உணர்தல் வேண்டும் என்பது அடியேனின் தாழ்மையான வேண்டுகோள்.
இவ்வாறு வேர் பிடித்த , வி-ரா , மெல்ல மெல்ல தங்களின் மெல்லிசை பாணியை படரவிட்டனர். பாருங்கள் எப்படி லாவகமாக "பெரிய இடத்துப்பெண் , பணத்தோட்டம், என் கடமை போன்ற எம் ஜி ஆர் படங்களில் மேற்கத்திய இசைநயம் மட்டுமல்ல கருவிகளும் அதிகம் பயன்படுத்தினர். இவ்வகை மாற்றங்களுக்கிடையே அவ்வப்போது மாறுபட்ட கோரஸ் [வார்த்தை இல்லா குரல் ஒலி ] அறிமுகம் ஆயிற்று. இவ் வகை நுணுக்கங்களை, பணம் படைத்தவன் படத்தில் திறமையாக நிர்வகித்திருந்தனர். இந்த மாற்றங்களை செய்த அவர்கள் இந்திய / உள்நாட்டு பண்பு கெடாமல் இசை வழங்கியதன் மூலம் - காப்பி அடித்துவிட்டதாக யாரும் திருவாய் மலரமுடியவில்லை. ஆங்கிலத்தில் EXCELLENT ADAPTATION என்பார்களே அது போல மேற்கத்திய இசையின் நளினம் மற்றும் இந்திய இசையின் ஜீவன் மாறாமல் கருவிகளை இசைத்தனர். இம்மாற்றங்களுக்கு ஊடே கவிஞர் வாலியும் தமிழ் திரையில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டிருந்தார். மொத்தத்தில் பெரும்பாலும் எம் எஸ் .வி -டிகே ஆர் , கண்ணாதாசன் / வாலி இந்தக்கூட்டே முதன்மை பெற்றது.
இன்னும் வளரும் அன்புடன் ராமன் மதுரை .


ReplyQuote
Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
28/02/2020 4:24 pm  

 //'சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும்' எனும் பழமொழிக்கு இலக்கணமாக திகழ்வன கவியரசரின் கவிதையும், மெல்லிசைமன்னரின் இசையும் இவற்றில் முன்னது சுவர், பின்னது சித்திரம் சில நேரங்களில் சித்திரம் சுவரையும் , சுவர் சித்திரத்தையும் விஞ்சியதுண்டு . எனினும் பல நேரங்களில் ஒன்றையொன்று தாங்கிப்பிடித்த தோழமை இந்த இணைப்பின் உலகப்ரசித்தம்.//    Well said sir ....


ReplyQuote
Share: