மெல்லிசை மன்னரின் இ...
 
Notifications
Clear all

மெல்லிசை மன்னரின் இசை உத்திகள்- 3  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 210
31/07/2020 12:41 pm  

அன்பர்களே

நான் பிறிதொரு பதிவில் தெரிவித்திருந்தது போல 1964 தமிழ் திரை தொழிலுக்கும் , கலைஞர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஒரு மறக்கவொண்ணா காலம். அவ்வாண்டில் ஏராளமான வெற்றிப்படங்கள் , ஒவ்வொன்றும் தனித்தன்மை உடையது. மேலும் அனைத்திலும் மெல்லிசை மன்னர்களின் இசை ஜாலங்கள்.

காதலிக்க நேரமில்லை, புதிய பறவை , படகோட்டி கருப்பு பணம் , ஆண்டவன் கட்டளை, கர்ணன், கலை கோயில் , சர்வர் சுந்தரம்,  தெய்வத்தாய் ,பச்சை விளக்கு, என் கடமை ,பணக்கார குடும்பம் என ஒரு சிறிய சாம்பிள்.  இவற்றில் மெ .ம மாறுபட்ட இசை வடிவங்களை வெளிப்படுத்தி இருந்தனர் . அவ்விருவரின் உச்சிக்காலம்; திரைப்படங்களின் தலையெழுத்தை தீர்மானிக்கும் வல்லமை உடையவர்கள் என ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தனர். 

இத்துணைக்கு நடுவில் ஒரு சிலர் 'சிவாஜி ]பாடல் , எம்ஜி.ஆர் பாடல் ' என்று அவரர் தத்தம் ஹீரோ க்களுக்கேற்ப பாடல்களுக்கு முகவரி தந்தனர். ஒரு அடிப்படை காரணம் -அந்நாளில் படத்தின் டைட்டில் கார்டுகளில் ஊன்றி படிக்கும் பழக்கம் இல்லாததும் , விமர்சனங்களில் கூட இசை அமைப்பாளர் பேரை குறிப்பிடாமல் பாடல்கள் சுமார் ரகம் என்று பொத்தாம் பொதுவாக எழுதி விடுவதும் தான். கர்ணன் படவிமரிசனத்தில் , விமரிசகர் "பாடல்கள் எதோ “  இருக்கின்றன என்று எழுதி இருந்தார். இந்தக்காலம் என்றால் பாடல் ரசிகர்கள் .விமர்சகர் வீட்டின் முன்னே திரண்டு 'வாய்யா வெளியே என்று கூச்சலிட்டு ,  மன்னிப்பு க்கேள் ' என்று சிலஊடங்களில் இந்தத்தகவல் வெளிவருமாறு  பார்த்துக்கொண்டிருப்பார்கள். இது  போன்ற  விமர்சனங்களை எம்.எஸ்.வி அறிந்திருந்தாரா அல்லது  அறவே ஒதுக்கியிருந்தாரா என்பன  அந்த இறைவனுக்கே  .வெளிச்சம் என நினைக்கிறேன். இது போன்ற ஒரு நிலைமை இன்றைய திரைத்துறையினருக்கு நிகழ்ந்தால் , அதுவே TV விவாத மேடைக்கு வந்து நார் நாராக கிழிக்கப்பட்டிருக்கும். இது போன்ற காலக்கொடுமைகளை மெல்லிசை மன்னர்கள் அமைதியாக பொறுத்துக்கொண்டிருந்தனர். இதற்கு, மேலும் ஒரு சான்றாக , உலகம் சுற்றும் வாலிபன்  படத்தின் இசைப்பணிகளுக்காக, எம்எஸ்.வி தனது ஊதியத்தை வாங்கிக்கொள்ளாமலேயே இருந்து விட , எம்.ஜி. ஆர் என்ன காரணம் என்று தூண்டித்துருவி கேட்டதற்கு , எம்.எஸ்.வி சொன்னது 'நீங்க தான் பாடல்  நல்லா  இல்லைனு ட்டீங்களே -அப்புறம் எதற்கு பணம் னு இருந்துட்டேன். எம்ஜி.ஆர் ஆடிப்போனார். சும்மா விளையாட்டா சொன்னேன்யா -அப்பதான் அடுத்த படத்துல இன்னும் சிறப்பா   பாடல் போட்டுத்தருவ என்று சொன்னேன் என்றாராம். எம் .எஸ். வி க்கு எப்படி இருந்திருக்கும் ? எந்த கதையையும் , காட்சியையும் சிறப்பாக உள்வாங்கி இசை அமைக்கும் மன்னர் உ .சு .வா படத்தின் எந்த தகவலும் தெளிவுபடுத்தப்படாத நிலையில்,  ஜப்பான் , டோக்கியோ , தாய்லாந்து . எக்ஸ்போ-70 என்ற இடங்களில்  படப்பிடிப்பு என்ற அடிப்படையில் , 10 மெகா ஹிட் பாடல்களை அசுர வேகத்தில் மிகுந்த இடையூறுகளுக்கிடையே ஏவிஎம் கூடத்தில் பதிவிட்டார் என்பதையோ , அவருக்கு இதனால் பிற வேலைகளுக்கு எவ்வளவு 'தள்ளிப்போதல் ' ஏற்பட்டிருக்கும் என்பைதையோ அன்று யாரும்  எழுத முன்வரவில்லை. எத்துணையோ பேர் ' உ .சு .வா வில் வேலை செய்யக்கூடாது என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில் , எம் எஸ் வி எவ்வாறு செயல் பட்டார் என்ற கேள்விக்கு நான் சொல்லக்கூடிய விடை , எம்.எஸ்.வி யின் இசைத்திறமை பின்னாளில் தங்களுக்கு பயன்படாமல் போய் விடக்கூடிய ஆபத்து உண்டு என்பதனால் அவரை தொந்தரவுக்கு உட்படுத்தி இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது.    உ.சு.வா நிகழ்வு எம் எஸ்.வி ஒரு தவிர்க்கமுடியாதவர் என்ற காலகட்டத்தில் நிகழ்ந்தது என்றால் , அவர் ஒரு சிறுவனாக ஸ்டுடியோ களில் உலவி வந்தபோது எந்த அளவு பொறுமையுடன் இருந்திருப்பார் என்பது இன்றைய இளம் மனங்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டிய தகவல்.இவ்வாறெல்லாம் பண்படுத்தப்பட்ட மனம்கொண்டவர் ஆதலின், அவர் வெற்றி தோல்விகளை சமமாகவே பாவித்தார் ; மேலும் எவரையும் அலட்சியம் செய்யாத பண்பாளர். அவருக்கு எதிரிகள் என்று எவரும் இலர்.

இவ்வளவு பண்பாளர் , பாடல் என்று வந்துவிட்டால் ஒரு யோகியைப்போல , அதே நினைவாக கவிதையின் சிறப்பு குன்றாமல் , ஓசை நயம்பட சொற்களை அழகுபடுத்திப்பாட வைப்போர். இந்த முறை உத்தி பிற இசை அமைப்பாளர்கள் பாடல்களில் மேலோங்கி காணப்பப்பட்டதில்லை. இதன் காரணமாகவே இது எம் எஸ் வியின் பாடல் என்று ரசிகர்கள் வெகு எளிதில் அடையாளப்படுத்திட  முடியும். இவற்றையே நான் உத்திகள் என்ற தலைப்பில் எழுதிட துவங்கி, அவரின் ஏனைய பண்புகளை இப்போது பேச இதுவே களம் என இங்கே அவற்றை பதிவிட்டுள்ளேன்.  இனியும் தாமதியாமல் அவர் கையாண்ட உத்திகளை காண்போம் .

ஒரு பட்டியலாக பார்த்தால், பலவற்றை குறிப்பிடலாம்.  அவை 

  1. பாடப்படும் முறை, .2 . சொற்களை சற்றே நீட்டி/சுருக்கி அல்லது நீண்ட காலப்ரமாணத்தில் பாடவைத்தல் , 3 சொல் மாற்ற அமைப்பு , அதாவது ஒரே சொல்லை 2 முறை வேறு வேறு வகையில் பிரித்து ப்பாடுதல் 

இருவர் பாடும் பாடல் அமைப்பில் ஒரே நேரத்தில் பாடகர்கள் வெவ்வேறு நிலைகளில் [லெவல் ] பாடுவது,  இவை பாடுவது எளிதல்ல ஏனெனில் ஸ்கேல் என்ற அளவுகோல் மாறும் பொது, அருகருகே இருவர் தனக்குரிய ஸ்கேலில் தொடர்ந்து பாடுவது , மெல்லிய கம்பி மீது நடப்பதற்கு ஒப்பாகும். மிகுந்த பயிற்சி இல்லாமல் குழப்பம் தவிர்த்தல் என்பது மிகவும் கடினம். 5  கோரஸ் [இது எம் எஸ் வியின் கோட்டை என்றே சொல்லலாம். பல விதமான கோரஸ் களை அனாயாசமாக அரங்கேற்றியவர் அவர் தான். தமிழ் பாடல்களில் "chipmonks" பாணியை உபயோகித்த முன்னோடியும் அவரே. மற்றுமோர் எம் எஸ் வியின் தனிச்சிறப்பு, எந்த வகை பாடலுக்கும் [ லவ் டூயட் உள்பட ] மிகப்பொருத்தமாக கோரஸ் அமைத்துவிடும் அதீத கற்பனை உள்ளம் உடையவர். 6  non -verbal singing -அதாவது சொல் இல்லாமலேயே வித விதமான ஹம்மிங் எனும் முறையில் உணர்ச்சிகளை வெளியிடுதல் . 7 வேற்று குரல் மூலம் பாடலின் உணர்ச்சிக்கு வலு ஏற்றுவது [பாடலை  பிறர் பாடினாலும்], இவ்வகை உத்தியை அநேகமான எம் எஸ் வி    தன்  குரலிலேயே  இது போன்ற உணர்வுகளை சிறப்பாக வெளிப்படுத்துவார். ஏன், பாடலின் ட்யூன் அமைப்பிற்கும் இந்த குரல் பயணிக்கும் போக்கிற்கும் நேரடி தொடர்பு இருக்காது. ஆனால், அவை இரண்டும் உணர்வு பூர்வமாக ஐக்கியப்பட்டுவிடும்.. இவை எல்லாமே பாடலில் குரல் அமைப்பிற்கானவை. 

இவை தவிர வேறு உத்திகள் embellishment எனப்படும் அழகூட்டல் வகையினைச்சார்ந்தவை.இவை ஒவ்வொன்றையும் இனி உதாரணங்களுடன் பார்ப்போம்.          அன்பன்  ராமன்  மதுரை .


Quote
Share: