மென்மையான இசைக் கோர...
 
Notifications

மென்மையான இசைக் கோர்வைகள் / MSV  

  RSS

Kothai
(@kothai)
Eminent Member
Joined: 1 month ago
Posts: 32
16/03/2020 4:15 pm  

மென்மையான இசைக் கோர்வைகள் / MSV

எம்.எஸ்.வி. அவர்களின் இசையை , இரட்டையர்களாக இருந்தபோதும் சரி , தனித்து நின்றபோதும் சரி ... "மென்மையான இசைக் கோர்வைகள் " என்ற தலைப்பின் கீழ் , நினைவில் நின்றதை சற்று சுருக்கமாக விளக்க பிரயாசைப் படுகிறேன் . எடுத்துக் காட்டும் பாடல்களும் , தனிப்பதிவுகளாக பின்னர் அந்த வருடக் குறியீட்டுப்படி பதிவும் செய்ய உள்ளேன் .

பொதுவில் மெல்லிசை மன்னர்கள் பற்றிப் பேசும்போது , கண்ணதாசன் , T M S , சுசீலாம்மா இவர்களுடன் கூட்டணி என்று ஆராய்வோரும் உண்டு . ஒரு கணிசமான பகுதியினர் , அவர் பயன் படுத்திய இசைக்கருவிகளை பற்றி ரசித்து பேசுவதும் உண்டு .
என் மனம் எத்தனை வகையாக பிரித்து பார்த்தாலும் , கணிசமாக அவர் தந்துள்ள மென்மையான இசைக் கோர்வையில் வெளியான பாடல்கள் நோக்கி ஒரு நடை போடுகிறது. அதன் வழி முதலில் அனைவரும் ரசித்து , பெரிதும் பாராட்டு பெற்ற பாடல் ,
" அத்தான் ..என் அத்தான் .. அவர் என்னைத்தான் ... எப்படி சொல்வேனடி ..." ... பாவமன்னிப்பு திரையில் இடம்பெற்றது . சுசீலாம்மா அந்தப் பாடலில் எதிரொலிக்கும் நாணத்தை , அப்படியே தனது இனிமையான குரலில் மிகவும் மென்மையாக ஒலிக்கப் பாடியிருப்பார் . அந்தப் பாடல் ஒருத்தி தனது காதலன் செயல்பாட்டை இன்னொரு தோழியிடம் நாசூக்காகப் பாடி , அவளும் தனது காதலனை நினைத்து , ஆக இருவரும் மகிழ்வதுபோல் ஒரு காட்சி . இதன் பின்னணியில் ஒரு சேதி உண்டு . இந்தப் பாடலை வேறு ஒரு படத்திற்கான காதல் பாட்டாக கவியரசு தர , "என்னது அத்தான் , அத்தான் .." என்று அதை பரிகசித்து வேண்டாம் என்று சொன்ன அதே எம் எஸ் வி அவர்கள் ... இந்த சூழ்நிலைக்கு தான் போட்ட மெட்டிற்கு பொருத்தமாகுமோ ...என்று அவரது இசைஞானம் ஒரு பொறி தட்டினாற்போல உணர்ந்து தானே கவியரசரிடம் அந்தப் பாடலை மறுபடியும் கேட்டு வாங்கி இசையமைத்தாராம் .

ஆக இந்த வரிசையில் அதனதன் காட்சியமைப் பிற்கேற்ற வகையில் இடம் பெற்ற இன்னொரு பாடல் , என் கடமை .. திரையில் , ' யாரது , யாரது தங்கமா ... ?' T M S , சுசீலாம்மா பாடியது . சற்று மேற்கத்திய இசையை , ஒரு பாலே நடனத்திற்கு ஏற்றாற்போல் அமைத்திருப்பார் . சொகம்மான பாடல் என்பதை விட , மனம் வெகுவாகக் குழம்பிய நிலையில் ஒரு பாடல் , " யார் அந்த நிலவு ..." சாந்தி திரையில் இடம்பெற்றது புதுமையானதாகத் தெரிந்தது . அனைவரிடமும் நல்ல வரவேற்பு . அந்த மேற்கத்திய இசை பாணி சற்று கலந்தே T M S அற்புதமாகப் பாடியிருப்பார் .

மனமகிழ்வில் , L R ஈஸ்வரி அவர்களுக்கு ஒரு பாடல் ..." அம்மம்மா கேளடி தோழி ...' கறுப்பு பணம் "திரையில் ... அவர் குரலின் வீச்சு  மெலிதான பின்னணி இசையில் அற்புதமாகத் தெரியும் . இன்றும் அதன் சுவையே தனி . சுருக்கமாக சொன்னால் ஒரு ஆர்ப்பாட்டமில்லாத வகையில் இவ்வகை மென்மையான இசையமைப்பை வகைப்படுத்தலாம் . பின்னாளில் இவர் தனித்து இசையமைக்கும் போது வகை வகையான வாத்திய இசைக்கருவி களின் தாக்கம் அதிகம் தேவைப் பட்ட நிலையிலும் , இரண்டு பாடல்கள் என் மனத்தை மிகவும் தொட்டன . " சொல்லத்தான் நினைக்கிறன் ... உள்ளத்தால் துடிக்கிறேன் .." என்றொரு பாடல் ...இசையமைப்போ சீராக ஒரே நேர்கோட்டில் செல்வதுபோல் இருக்கும் .. பாடும் பாவங்கள் சற்று ஏறி நின்று ஒலிக்கும் . எம் எஸ் வி அவர்களே ஜானகியம்மாவுடன் , சொல்லத்தான் நினைக்கிறேன் திரையில் பாடியது . இன்னொன்று ... சொல்லப் பொன்னால் எனது இந்தப் பதிவை எழுதாத தூண்டிய பாடல் .." வீணை பேசும் அதை மீட்டும் விரல்களில் நின்று ..." யேசுதாஸ் அவர்கள் மிக மென்மையாக சீராக ..பாடி வருவார் .ஊமையான மனைவி யிடம் அந்தக் குறை யுணராத வகையில் எடுத்துச் சொல்லும் பாடல் , அது சுமந்து வரும் கவியரசரின் பொருள் ஆழம் கொண்ட வரிகள் ..இசைக்கோர்வையில் .. ஊமையின் மொழியாக சசிரேகா அவர்களின் ஹம்மிங் ... யோசிக்க , ஒரு இசைக்கலைஞன் மனம் அந்த பாவத்தில் நின்று இசையமைத்தால் அன்றி இப்படி பாடல்கள் வெகு சிறப்பாக அமைந்திட வழியில்லை .

கிராமத்து அளவில் பழனியில் , " யாரோடும் மண்ணில் எங்கும் நீரோடும் .." பாடல் ,
பாகப்பிரிவினையில் ," தாழையாம் பூமுடிச்சு தடம் பார்த்து நடை நடந்து .." தனக்கு அனுபவம் இல்லாத இந்தப் பாடல்களை எல்லாம் அவர் நேரில் கிராமத்து பாடல்களைக் கேட்டும் அறிந்தும் , அதனோடு சரியான விகிதத்தில் தனது இசை நகர்வையும் கொண்டு செலுத்தினார் என்பது அவரே ஒரு பேட்டியில் சொன்ன தகவல்கள் . உண்மை ... இசையில் ஆத்மார்த்த ஈடுபாடு உள்ளவர்க்கே தெரியாததையும் தெரிந்து அந்த இசையை மக்களிடம் சேர்க்க முடியும் .

கோதை
( KOTHADHANABALAN )


Quote
Share: