எம் எஸ் வி -6 இசையு...
 
Notifications

எம் எஸ் வி -6 இசையும் காலமும்  

  RSS

palaniappansubbu
(@palaniappansubbu)
Active Member
Joined: 9 months ago
Posts: 6
17/05/2019 11:04 am  

(1963ல் எம்ஜிஆர் நடித்து வெளிவந்த “ஆனந்தஜோதி” படப்பாடல்கள் சிவாஜி/ ஜெமினி படப்பாடல்கள் போலிருக்கும்- “நினைக்கத் தெரிந்த மனமே“, “பனி இல்லாத மார்கழியா” முதலிய பாடல்கள்).

எம்ஜிஆர் படங்களில் மட்டும்தான் விஸ்வநாதன்- ராமமூர்த்தி வெவ்வேறு வகை பாடல்களில் இசையமைத்தனர் என்றில்லை- சிவாஜியின் “பலே பாண்டியா” ஒரு முக்கியமான படம். இதில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம். நகைச்சுவைப் பாடல்களில் மிகவும் புகழ் பெற்ற பாடல் இது- “நீயே உனக்கு என்றும் நிகரானவன்

இதன் ட்யூனில் நகைச்சுவை என்று சொல்வதற்கு ஒன்றுமில்லை. முழுக்க முழுக்க சுத்த தன்யாசி ராகத்தில் அமைந்த பாடல் இது. முடிவில் வரும் சுவரங்களும் ஜதிகளும், அதைப் பாடி நடிக்கும் நடிகர்களும் (குறிப்பாக எம் ஆர் ராதாவின் மிகைநடிப்பு)- நகைச்சுவை விருந்து அளிக்கிறது.

இதே படத்தில்தான் “நான் என்ன சொல்லிவிட்டேன்,” “அத்திக்காய் காய் காய்” என்ற பாடல்களும், நொந்துபோன கணங்களில் நம்பிக்கையூட்டும், “வாழ நினைத்தால் வாழலாம்” பாடலும் இருக்கின்றன.

இந்தப் பாடல்கள் அவர்களுடைய தனித்திறமைக்கு விளம்பரம் என்றால், அந்த இரண்டு ஆண்டுகளில் இவர்கள் இசையமைத்த பாடல்கள் இவர்களைச் சிறந்த பாடல்கள் இசையமைப்பாளர்கள் என்ற நிலைக்கு கொண்டு சென்றன. சோகப் பாடல்களுக்கும் இவர்கள் பெயர் பெற்றனர்.

இதைவிடச் சோகமான பாடல் கேட்க முடியுமா? “ஆலயமணி” படத்தில் வரும், “சட்டி சுட்டதடா” பாடல்.

இந்த இரு ஆண்டுகளில் அவர்கள் அளித்த அருமையான பாடல்கள்தான் எத்தனை எத்தனை!. “ஆலயமணி“, “பாத காணிக்கை“, “நிச்சய தாம்பூலம்“, “படித்தால் மட்டும் போதுமா“, “பார்த்தால் பசி தீரும்“, “சுமைதாங்கி“, “நெஞ்சம் மறப்பதில்லை“, “கற்பகம்” என்று மிகச் சிறந்த பல படங்கள் அந்த இரு ஆண்டுகளில் வெளிவந்தன.

இதோ “போலீஸ்காரன் மகள்” படத்தில் இரண்டு பாடல்கள்- இவை அவர்களின் இசையின் வேறொரு இயல்பை வெளிப்படுத்துகின்றன-

கானடா ராகத்தில் அமைந்த இந்தப் பாடல்-பொன்னென்பேன் சிறு பூ என்பேன்....

பிபிஎஸ், ஜானகியின் குரல்கள் இப்பாடலுக்கு மிகவும் பொருத்தமானவை. என்ன ஒரு மெலடியில் அமைந்த பாடல் இது. “முல்லை மலர்” பாடலை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் கானடா ராகத்தை எப்படி மாறுபட்ட முறையில் அணுகியிருக்கிறார்கள், இப்போது.திரைப்பாடலில் ராகத்தின் அழகு கெடாமல் அதைப் பயன்படுத்துவது எப்படி என்று பாடம் நடத்துவது போலிருக்கிறது.

இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலை கேட்கின்றேன்.....

இது கல்யாணி ராகம். இதுவும் பிபிஎஸ், ஜானகிதான். தமிழிலும் தெலுங்கிலும் மிகப்பெரும் வெற்றி பெற்ற பாடல்.

இந்தப் பாடல் கல்யாணி ராகத்தில் அமைந்திருப்பது முக்கியமில்லை- எவ்வளவு சிறந்த திரைப்பாடலாக வந்திருக்கிறது பாருங்கள்-

இது எழுபதுகளின் கடைசியில் “வியாமோகம்” என்ற பெயரில் மலையாள மொழி திரைப்படமாக வெளிவந்தது. அதற்கு இசையமைத்தவர் இளையராஜா. விஸ்வநாதனின் கல்யாணி ராஜாவுக்கு ஒரு உத்வேகம் அளித்திருக்கக்கூடும். ராஜாவின் முற்றிலும் மாறுபட்ட கல்யாணியாக அமைந்தது.

போலீஸ்காரன் மகள்” படத்தின் இரு பாடல்களைக் கொண்டு நான் சொல்ல வந்த விஷயம் இதுதான்- பாடல் அமைப்பு எவ்வளவு எளிமையாக இருக்கிறது பாருங்கள். பல்லவி எப்போதுமே எளிமையாக இருக்கும், சரணங்களும் இங்கு எளிமையாக இருக்கின்றன. இவற்றில் எதிர்பாராத திருப்பம் எதுவும் கிடையாது. எனவே யாரும் இந்தப் பாடலுடன் இணைந்து பாட முடியும், நம்மாலும் எளிதாக உள்வாங்கிக் கொள்ள முடியும். தவிர, கண்ணதாசன் வரிகள் இந்தப் பாடலை மறக்க முடியாமல் செய்கின்றன. எனவேதான் இன்றும் இந்தப் பாடல்களை இன்றும் தடுமாற்றமில்லாமல் பாட முடிகிறது.


Quote
Share: