எம் எஸ் வி -5 இசையு...
 
Notifications

எம் எஸ் வி -5 இசையும் காலமும்  

  RSS

palaniappansubbu
(@palaniappansubbu)
Active Member
Joined: 9 months ago
Posts: 6
17/05/2019 11:02 am  

1961ஆம் ஆண்டு திருப்புமுனையாக இருந்தால், அதைத் தொடர்ந்த இரு ஆண்டுகளில் எம். எஸ். விஸ்வநாதன்- ராமமூர்த்தி தங்களைத் திரையிசையின் முன்னணி கலைஞர்களாக நிறுவிக் கொண்டனர். அதன்பின் 1964ஆம் ஆண்டு அவர்களுக்கு மகத்தான ஒன்றாக அமைந்தது.

விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் உள்ள ஒலி பற்றி பேசினோம். அதில் ஒரு மெல்லிய சோகம் கலந்திருந்தது என்று எழுதியிருந்தேன். இதற்கு ஒரு முக்கியமான காரணம், 1961ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கு அப்படிப்பட்ட ஓசை தேவைப்பட்டது என்பதாகவும் இருக்கலாம். அவற்றில் பல மிகையுணர்ச்சியை வெளிப்படுத்திய படங்கள்- ‘பாலும் பழமும்“, “பாவ மன்னிப்பு“, “பாசமலர்”, “பாக்கியலட்சுமி“. இந்த நான்கு படங்களில் மூன்றை இயக்கிய பீம்சிங் உணர்ச்சிகரமான திரைப்படங்களை இயக்குபவர் என்று புகழ் பெற்றவர். எனவே இந்தப் படங்களில் தேவைகளுக்கு ஏற்பவே இசையும் அமைந்திருந்தது.

பீம்சிங் திரைப்படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்த விஸ்வநாதன்-ராமமூர்த்தி மேலும் சில மிகச்சிறந்த திரைப்பாடல்களைத் தருவார்கள். ஆனால் 1962ஆம் ஆண்டுதான் இயக்குனர் ஸ்ரீதர் இவர்களோடு இணைந்த ஆண்டு. முதலில் விஸ்வநாதன் ராமமூர்த்தியுடனும் பின்னர் எம்எஸ்வியுடனும் இணைந்து ஸ்ரீதர் மறக்கமுடியாத பல பாடல்களை அளித்தார். 1962களிலேயே இவர்களின் இசையில் ஸ்ரீதரின் மூன்று திரைப்படங்கள் வெளிவந்தன- “சுமங்கலி“, “நெஞ்சில் ஒரு ஆலயம், “போலீஸ்காரன் மகள்“. 1961ஆம் ஆண்டு ஐந்து படங்களுக்கு இசையமைத்திருந்த இவ்விருவரும் அடுத்த ஆண்டு பதினான்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தனர். அவர்களது வளரும் புகழுக்கும் முக்கியத்துவத்துக்கும் இதுவே போதுமான ஆதாரமாகிறது.

விஸ்வநாதன் ராமமூர்த்தி தேர்ந்த மெலடியில் இசையமைக்கக்கூடியவர்கள் என்பதைக் காட்ட பீம்சிங், ஸ்ரீதர் மற்றும் பலர் களம் அமைத்துக் கொடுத்தார்கள் என்றாலும் எம்ஜிஆர் திரைப்படங்களே அவர்களுக்கு விதவிதமான பாடல்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு அளித்தன. எம்ஜிஆர் படங்களிலும் சிறந்த மெல்லிசைப் பாடல்கள் இருந்தன என்றாலும், அவற்றில் துள்ளிப் பாயும் உற்சாகம் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டியிருந்தது. மிகப்பெரிய ஆளுமையாக எம்ஜிஆர் திரைப்படங்களில் தோன்றியது ஒரு காரணம் என்றாலும் அவர் அரசியலில் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ள திரைப்படங்களைப் பயன்படுத்தியதும் ஒரு காரணம். முன்னதாகவே எம்ஜிஆர் இவர்களுடன் பணியாற்றியிருந்தார் என்றாலும் விஸ்வநாதன் ராமமூர்த்திக்கும் கே வி மகாதேவனுக்கு சம வாய்ப்புகள் அளித்தார் (பின்னரே அவர் எம்எஸ்வி பக்கம் சாய்ந்தார்).

1960ஆம் ஆண்டிலேயே எம்ஜிஆருக்கு மறக்க முடியாத ஒரு பாடல் அமைத்திருந்தனர்- “மன்னாதி மன்னன்” திரைப்படத்தில் வரும், “அச்சம் என்பது மடமையடா,” என்ற பாடல். இன்றும் இது கழக மேடைகளில் தவறாமல் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல். இதன் ட்யூன் நன்றாக இருக்கிறது என்றாலும் ஐம்பதுகளுக்கு உரிய பாடல்தான் இது- விஸ்வநாதன் ராமமூர்த்தி முத்திரைகளில் மிகக் குறைவாகவே இதில் இருக்கிறது. அக்காலத்துக்கே உரிய பாடல்-

பாசம் (1962) என்ற திரைப்படத்தில் ஏறத்தாழ இதே போன்ற தாளம் மற்றும் பாடல் அமைப்பு இப்போது நவீனமாக ஒலிக்கிறது. இதன் துவக்கத்தில் வரும் கிதாரின் அதிர்வுகள் மற்றும் வயலின், இன்டர்லூடில் வரும் அக்கார்டியன் ஓசை, டிஎம்எஸ் பாடும் முறை இந்த மாட்டு வண்டி முன்பிருந்த ஒன்றல்ல என்பதைக் காட்டுகின்றன- “உலகம் பிறந்தது எனக்காக

அரசியல் பாடல்கள் மட்டுமல்ல, எம்ஜியாரின் காதல் பாடல்களும் உற்சாகமாக இருந்தன. இதற்காக விஸ்வநாதன் ராமமூர்த்தி கர்நாடக சங்கீத ராகங்களின் கட்டுக்களைத் தளர்த்து, மேலும் நவீன வகையில் இசையமைக்க வேண்டியிருந்தது. இது, “பணத்தோட்டம்” படத்தில் வரும் “பேசுவது கிளியா,” என்ற பாடல்..

இந்த பாடலின் முன்னிசை எவ்வளவு நவீனமாக ஒலிக்கிறது பாருங்கள். பல்லவியின் துவக்கத்தில் பாங்கோக்கள் சேர்ந்து கொள்கின்றன. “சேரனுக்கு உறவா, செந்தமிழர் நிலவா” என்று எவ்வளவு அழகாக பல்லவி நிறைவடைகிறது பாருங்கள்.

பணத்தோட்டம்” பாடல் நவீன பாடலாக இருந்தாலும் அது தமிழ் மெலடியாகதான் இருக்கிறது, சரணத்தில் தபலாதான் பாடலைக் கொண்டு செல்கிறது. இதன்பின் “பெரிய இடத்துப் பெண்” படத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று முழுக்க முழுக்க மேலை நாட்டுப் பாணியில் ஒரு பாடல் செய்தார்கள். இதில் தபலா கிடையாது. முழுக்க முழுக்க சா சா நடனத்தைத் தழுவிய மேற்கத்திய இசைப்பாணி. இங்கு நாம் விஸ்வநாதன் ராமமூர்த்தி நம் எல்லைகளுக்கு அப்பால் சென்று உலக இசையை நமக்கு அளிக்க முயற்சி செய்வதைப் பார்க்கிறோம் (1990ஆம் ஆண்டுதான் உலக இசை தமிழ் திரைப்பாடல்களில் ஒலித்தது என்று நினைப்பவர்கள் தம் கருத்தைப் பரிசீலித்துக் கொள்ளலாம்)-

இதே படத்தில் “பாரப்பா பழனியப்பா” என்ற கிராமிய மெட்டில் ஒரு பாடலை ‘ஏழைப்பங்காளன்’ எம்ஜிஆருக்கு இசையமைத்திருந்தது இவர்களுடைய திறமைக்குச் சாட்சி. முன்சொன்ன பாடல் இளமையான, கம்பீரமான எம்ஜிஆர் பாடுவது.

பலவகைப் பாடல்களுக்கு இசையமைக்கக்கூடியவர்கள் என்று சொல்வதை நம்பாதவர்கள் இதைக் கேட்கலாம்- “கட்டோடு குழலாட


Quote
Share: