எம் எஸ் வி -4 இசையு...
 
Notifications

எம் எஸ் வி -4 இசையும் காலமும்  

  RSS

palaniappansubbu
(@palaniappansubbu)
Active Member
Joined: 9 months ago
Posts: 6
17/05/2019 11:01 am  

இவை 1961ல் வெளிவந்த வேறு இரு பாடல்கள். இதுவரை நான் சொன்ன இயல்புகள் இந்தப் பாடலிலும் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இப்போது இவர்கள் இசையின் இன்னொரு தனித்தன்மையைப் பார்க்கலாம்.

இது, “பாலும் பழமும்” திரைப்படத்தில் வரும், “நான் பேச நினைப்பதெல்லாம்“, என்ற பாடல்.

இதிலும் நிலையான ரிதம், இயல்பான ட்யூன், ஒப்புக்கு சிவரஞ்சனி ராகத்தின் சாயல்.

பாவ மன்னிப்பு” படத்தில் வரும், “காலங்களில் அவள் வசந்தம்“-

இங்கும் முத்திரையாய் ஒலிக்கும் ரிதம், அதே முத்திரையோடு ட்யூன், தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாத செவ்வியல் இசை.

இத்தனை பாடல்களில் நான் சொன்னதற்கும் மேலே இன்னொன்றும் கவனித்திருப்பீர்கள்- இந்தப் பாடல்களில் இழையோடும் சோகம். நான் பட்டியலிட்டுள்ள எல்லா பாடல்களிலும் சோகத்தின் சாயல் இருக்கிறது. மேற்சொன்ன பாடல்களில் உள்ளது போல், காதல் பாடல்களிலும் ஒரு மெல்லிய சோகம். இவை மலையாளப் படங்களின் பெருஞ்சோகம் அல்ல- நம்மைத் தொய்வடையச் செய்யும் பாடல்கள் அல்ல இவை. இங்கு உற்சாகம் கெடவில்லை, ஆனாலும் மிகத் தேர்ச்சியான முறையில் சோகத்தின் நிழல் படிந்திருக்கிறது. விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசை என்றால் இந்த மென்சோகம்தான் மேலோங்கி நிற்கிறது.. மேலோங்கி என்றுதான் சொல்கிறேன், அது மட்டுமே இருக்கிறது என்று சொல்லவில்லை என்பதை கவனிக்க வேண்டும் (பிற ஒலிகளைப் பின்னர் பார்க்கலாம்). இந்தச் சோகத்தின் நிழலே நம்மைப் பாடலோடு என்றென்றும் கட்டிப் போடுகிறது. அறுபதுகளின் குழந்தைகள் இந்த மென்சோகமும் நாஸ்டால்ஜியாவும் கூடிய நினைவுகூர்தலில், அந்தக் கால படங்கள் போல் நல்ல படங்கள் எப்போதும் வந்ததில்லை, என்று சொல்வது புரிந்து கொள்ளக்கூடியதுதான்.

சோகத்தில் இவர்களின் ஆற்றல் முழுமையாய் வெளிப்பட்டதால் இவர்கள் மிகச் சுலபமாகவும் இயல்பாகவும் சோகப் பாடல்கள் அமைத்தனர், அவையே இன்றும் இவர்கள் பேர் சொல்லும் பாடல்களாக இருக்கின்றன.

திரைப்பாடல்களில் மிக உயர்ந்த தத்துவம் பேசும் பாடல் இது- பாலும் பழமும் படத்தில், போனால் போகட்டும் போடா

பாவ மன்னிப்பு படத்தில், சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்

நான் சொன்ன அத்தனை சுபாவமும் இந்தப் பாடலில் உண்டு (கட்டுரைக்கு சம்பந்தமில்லாத விஷயம்- எண்பதுகளில் சிவாஜி நடிப்பில் இயக்குனர்கள் விரும்பி வரவேற்றதை ஒற்றை வரியில் விவரிக்கிறது இந்தப் பாடலின் துவக்கம்)

கண்ணதாசனைப் பேசாமல் அறுபதுகளின் துவக்கத்தைப் பேச முடியாது. எத்தனைச் சிறந்த பாடலாசிரியர்- எம்டியும் பாடலாசிரியரும் இணைந்து கோலோச்சிய காலத்தில் எழுதியவர். ஒற்றை பத்தியில் கண்ணதாசன் பற்றி பேச முடியாது. இன்னும் நிறைய எழுத வேண்டும்.

1961க்குப்பின் விஸ்வநாதன் ராமமூர்த்தி தங்கள் முதல் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டதையும் அவர்கள் பின்னர் அளித்த பாடல்களையும் இனி பார்ப்போம்.


Quote
Share: