ஆயிரத்தில் ஒருவர் M...
 
Notifications
Clear all

ஆயிரத்தில் ஒருவர் MSV - 004  

  RSS

SVR
 SVR
(@svr)
Active Member
Joined: 1 year ago
Posts: 5
25/05/2019 6:40 am  
ஆயிரத்தில் ஒருவர் MSV - பாடல் 0004.
 
கிராமத் திருவிழாக்களின் பாடல்களின் முன்னோடி இது என்று கூறலாம். உடுக்கை, தவில், நையாண்டி மேளம் மூன்றும் மிகவும் நேர்த்தியாக கையாளப்பட்டிருக்கும். இளையராஜாவின் பல திருவிழாப் பாடல்களுக்கும் இது முன்னோடியாக அமைந்த பாடல். நம்மை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும் இசையை MSV அளித்துள்ளார். TMS உணர்ச்சி ததும்ப பாடியிருப்பதை சிவாஜி தனது நடிப்பில் அப்படியே வெளிப்படுத்தியிருப்பார். கிராமத்து கதாபாத்திரங்கள் என்றல் சிவாஜிக்கு கேட்கவே வேண்டாம், அசத்திவிடுவார். இதிலும் அப்படியே, கவியரசரது வரிகளில் சிறிது அரசியல் கலந்திருந்தாலும், அடிப்படையாகப் பார்த்தால் கிராம மக்களது வாழ்க்கை நிலையை வெளிப்படுத்தும் பாடலாகவே இது இருக்கின்றது. மொத்தத்தில் அனைவரும் சேர்ந்து நம்மை பக்தியின் எல்லைக்கே அழைத்து சென்று விடுகின்றனர்.
 
நடிகர்திலகத்தின் சிறந்த வேடங்கள் பலவுண்டு. ஆனால் ஒரு கிராமத்தானாக, கம்பீரமாக நடித்த படம் இது. மதுரைக்கருகில் இருக்கும் சோழவந்தான் என்னும் சிற்றூரில் பெரிய விவசாயியாக வாழும் வேடம் நடிகர் திலகத்திற்கு. அவருடைய அறிமுகமே கோவில் திருவிழாவில் தீச்சட்டி தூக்கியபடி ஆடிப்பாடும் கட்சிதான். படத்தின் வெற்றிக்கு கட்டியம் கூறிவிடுகிறது இந்தப் பாடல். இதை இயற்றியவர், இசையமைத்தவர் யாராயிருந்தாலும் சரி. தன்னுடைய கம்பீரமான தோற்றத்தினாலேயே பாடலை வெற்றி பெற செய்பவர் நம் நடிகர் திலகம் என்பது நிதர்சனமான உண்மை. இடது மூக்கில் மூக்குத்தியும், காதுகளில் வைரக் கடுக்கண்ணுமாக என்ன ஒரு மிடுக்கான தோற்றம். இவையெல்லாம் இவர் அணிந்திருப்பதாலேயே அல்லவோ பளீரென்று மின்னுகின்றன! போதாததற்கு வலது கன்னத்தில் ஒரு மச்சம். கம்பீரத்தின் உச்சம்!
 
அம்பிகையே என்று அவர் வலது கையில் தீச்சட்டியும் இடது கையில் வேப்பிலையுமாக தோன்றும்போதே நம்மை உற்சாகம் தொற்றிக் கொள்கின்றது. அவரது ஆட்டத்தைப் பாருங்கள், என்ன ஒரு லாவகம், எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடையும் நாட்டியம். ஓங்காரியே வேப்பிலைக்காரி என்று வேப்பிலை அடித்து அவர் அம்மனை அழைக்கும் அழகு, காணக் கண்கோடி வேண்டும். அனைத்து அவயங்களும் நடனமாடுகின்றன. இவருக்கு நடனம் வராது என்று சொல்பவர்கள் அறிவிலிகள். கைதேர்ந்த நடனக்காரர்கள் கூட இவ்வாறு ஆடமுடியுமா என்பது சந்தேகம்தான். கலைக்காகவே பிறந்த கலைஞன். வலதுகையில் தீச்சட்டியை சுழற்றியபடி இடது கையால் வேப்பிலையை சுழற்றும் லாவகம், அபாரம்.
 
"வேலையிலே மனசு வெச்சோம் முத்துமாரி, இப்போ வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி" என்று உழைப்பின் பெருமையையும் எடுத்துக்கூற மறக்கவில்லை நம் ஐயன். இவ்வரிகள் கவியரசர் இவருக்காகவே எழுதியுள்ளார். இது போதாது இவருக்கு. ஆனால் என்ன செய்ய, இதற்கு மேலும் இலக்கியத்தில் வார்த்தை ஏது சொல்ல?
 
அம்பிகையே... (உடுக்கை, தவில் நையாண்டி மேளம் ஒலி)
ஈஸ்வரியே..(.உடுக்கை, தவில் நையாண்டி மேளம் ஒலி)
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
மீண்டும் மூன்று தாளவாத்தியங்களின் நீண்ட கலவை ஒலி
அம்பிகையே... ஈஸ்வரியே...
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
ஒம்காரியே.... வேப்பிலைக்காரி..ஈ. ஈ. ஈ. ஈ. ஈ. ஈ.
உடுக்கையின் ஓம்கார ஓசை
ஒம்காரியே.... வேப்பிலைக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
மறுபடியும் உடுக்கையொலி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி
அம்பிகையே... ஈஸ்வரியே...
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
 
இடையிசையாக உடுக்கை, தவில் நையாண்டி மேளம் மறுபடியும்
 
வேலையிலே மனசு வெச்சோம் முத்துமாரி
இப்போ வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி
(மீண்டும் மூன்று தாளவாத்தியங்களின் நீண்ட கலவை ஒலி)
வேலையிலே மனசு வெச்சோம் முத்துமாரி
இப்போ வெற்றிக்கொடி நாட்டுகிறோம் முத்துமாரி
ஆலமரம் போலிருக்கும் எங்கள் கூட்டம்
எம்மை ஆதரிச்சு வாழ்த்துதடி முத்துமாரி (அம்பிகையே)
 
இடையிசையாக உடுக்கை, தவில் நையாண்டி மேளம் மறுபடியும்
 
ஏழைகளை ஏய்ச்சதிலே முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லே முத்துமாரி
(மீண்டும் மூன்று தாளவாத்தியங்களின் நீண்ட கலவை ஒலி)
ஏழைகளை ஏய்ச்சதிலே முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லே முத்துமாரி
வாழவிட்டு வாழுகிறோம் முத்துமாரி
இனி வருங்காலம் எங்களுக்கே முத்துமாரி (அம்பிகையே)
 
இடையிசையாக உடுக்கை, தவில் நையாண்டி மேளம் மறுபடியும்
 
சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி
(மீண்டும் மூன்று தாளவாத்தியங்களின் நீண்ட கலவை ஒலி)
சிவகாமி உமையவளே முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலம் உண்டு முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று வாழ்த்துக்கூறி
இந்த மக்களெல்லாம் போற்றவேண்டும் கோட்டையேறி
 
அம்பிகையே... ஈஸ்வரியே...
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட குங்குமக்காரி
உடுக்கை, தவில் நையாண்டி மேளம் மூன்றும் துரித கதியில் ஒலித்து பாடல் நிறைவுறும்
 
நன்றி. வணக்கம் .
 

Quote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 41
26/05/2019 6:37 am  

ramani sir

arumai


ReplyQuote
Share: