ஆயிரத்தில் ஒருவர் -...
 
Notifications
Clear all

ஆயிரத்தில் ஒருவர் - எம் எஸ் வி  

  RSS

SVR
 SVR
(@svr)
Active Member
Joined: 1 year ago
Posts: 5
18/05/2019 6:14 am  
அனைவருக்கும் வணக்கம். "ஆயிரத்தில் ஒருவர் எம் எஸ் வி" என்றதலைப்பில் எனது பதிவுகளை தொடங்குகிறேன். முதல் பாடலாக சூரிய பகவானைத் துதிக்கும் "ஆயிரம் கரங்கள் நீட்டி" என்ற பாடலுடன் துவங்குகிறேன். இந்தப் பாடலுடன் துவங்க இன்னொரு காரணமும் இருக்கின்றது. இந்தப் படம் ஒரு "MAGNUM OPUS" என்று கூறலாம். தமிழில் MAGNUM OPUS படமொன்றிற்கு மெல்லிசை மன்னர்களைத் தவிர வேறு யாரும் இது வரை இசையமைத்ததில்லை. இனி இசையமைக்கப் போவதுமில்லை இது போன்று.
 
கவியரசருடன் சேர்ந்து மெல்லிசை மன்னர்கள் தமிழில் "ஆதித்ய ஹிருதயம்" ஒன்றை அளித்துள்ளார்கள் என்றால் அது மிகையாகாது. அந்த ஸ்லோகத்திற்கு எந்த வகையிலும் இப்பாடல் குறைந்ததில்லை. இப்பாடல் அமைந்துள்ள இராகம் ரேவதி. ரேவதி இராகம்தான் வேதங்களின் அடிப்படை. எவ்வளவு சிந்தித்திருந்தால் இப்பாடலை இந்த இராகத்தில் வடித்திருப்பர்!
 
பாடல் துவங்கும்போதே தேவலோகத்தில் இருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறது. பாடகர்களின் உச்சரிப்பு மிகவும் ஸ்பஷ்டமாக மந்திரம் உச்சரிப்பது போன்றிருப்பது, அவர்கள் தொழில் மீது கொண்ட பக்தியை எடுத்துக் காட்டுகிறது. பாடகர்களின் குரல்களுடன் கூடவே பின்னணியில் இழையும் சந்தூர் இதை முற்றிலும் ஒரு சுலோகம் சொல்வது போன்றே காண்பிக்கின்றது.
 
ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி
 
இங்கு இடையிசையாக வரும் வீணை ஒரு தெய்வீக உணர்வை ஏற்படுத்துகின்றது.
 
தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி
தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க
நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி!!!!
 
பாடல் முடிந்தும் நம் மனதில் உள்ள தெய்வீக உணர்ச்சி அப்படியேதான் இருக்கின்றது. நாம் செய்த பாக்கியம் மெல்லிசை மன்னர்களின் இசையில் இத்தகைய தேவகானத்தை நம் வாழ்நாளில் கேட்க முடிந்தது. இப்பாடல் நிச்சயம் சூரிய பகவானுக்கு ஒரு ஆபரணமாய் அமைந்துவிட்டதில் வியப்பேதுமில்லை.
 
நன்றி.
This topic was modified 1 year ago by SVR

Quote
sravi
(@sravi)
Eminent Member
Joined: 1 year ago
Posts: 41
26/05/2019 6:47 am  

ரமணி சார்,

கர்ணன் -கனவிலும் நியைத்துப் பார்க்க முடியாத படைப்பு.

அதுவும் குறுகிய காலத்தில் அதை செய்தனர் என்னும் போது பிரமிப்பு ஏற்படாமல் என்ன செய்யும்.

துரதிர்ஷ்டம் -வாழும் காலத்தில் அதற்குண்டான சரியான மதிப்பை அது பெற முடியவில்லை


ReplyQuote
Share: