ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 97 [ காலத்தை முந்திய கலைஞர்கள் வி – சு ]  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 166
25/10/2020 2:22 am  

அன்பர்களே

 இது  ஏதடா  வி-  சு  என்று ஏதோ கிளம்புகிறானே என்று யோசிக்க வேண்டாம் . ஆம் இப்போது விசு விலிருந்து  வி -  சு  வுக்கு   அதாவது வின்சென்ட் - சுந்தரம் என்ற வேறு ராக்ஷஸர்களை பற்றிப்பார்க்க இருக்கிறோம் .

இப்போது ஏன் இவர்கள் என்கிறீர்களா? ஆம் அதற்கு ஒரு நியாயம் இருக்கிறது. "நாளாம் நாளாம்"  பாடலை உள்ளரங்கில் காட்சிப்படுத்திய  வித்தகர்கள் இவர்கள் அன்றோ? இதில் என்ன வித்தகம் என்றால்  ஒரு 5  தகவல்களை கருத்தில் கொள்ள வேண்டும்..

1 படத்தின் பெரும்பாலான பாடல்கள் வெளிப்புறக்காட்சிகள். 2  குறைந்த ஒளிஅமைப்பை சீராக செய்திருக்கும் பங்கு. 3  வி- சு இருவரும் பதிவு செய்த முதல் வண்ணப்படம். 4  படம் முழுவதும் transient மற்றும் abrupt lighting என்பன மேலைநாட்டுப் படங்களுக்கு இணையாக 1963- 64 ல் நிர்வகித்த ஆளுமை சாதாரண த்திறமை அன்று.  5 அன்றைய புதிய laboratory பரிந்துறைகளையும் கணக்கில் கொண்டே indoor -outdoor light balancing ல் ஈஸ்ட் மன் கலர் ஒளிப்பதிவில், மிகுந்த கவனம் செலுத்தி இருந்தனர்.காட்சிமாற்றங்கள் மிகவும் எளிதாக,இனிதாக ,அன்றைய  காமெராவினால் நிறைவேற்றப்பட்டது எனில் , காமெராவுக்குப்பின்னே இருந்தவர்கள்  ஜாம்பவான் வகை ராக்ஷஸர்கள்  என்பது சர்வ நிச்சயம்.

அன்பர்கள்  இது  ஏதடா ,வேறு யாரும் செய்யாததா  என்று நினைக்கக்கூடும் . உண்மை என்னவெனில் , பின்னாளில் பதிவிடப்பட்ட உயர் வகை கேமரா பதிவுகள் அவற்றின் குறைந்த வயது நிலையிலேயே கூட பொலிவிழந்து காணப்படுவதையும், 1964 ல் வெளிவந்த காதலிக்க நேரமில்லை படம் இப்போதும் கண்கவர் நிலையில் இருப்பதை கவனித்தால் அடியேனின் கூற்றில் உள்ள கருத்து வலுப்பெறும்.

இதற்குக்காரணம்  ஒரு FILM ன் தன்மைக்கேற்ப  PICTURING / PROCESSING முறையாக செய்திருந்தால் அந்தப்பிரதிகள் நீண்ட ஆயுளும் பொலிவும் பெற்று அமையும்.  முன்னதில் வி  - சு  இருவரும் , பின்னதில் ஜெமினி வண்ணக்கூடத்தின் தொழில் நுட்ப கலைஞர்களும் அன்றைய பம்பாய் வண்ணக்கூடத்தில் பதியப்பட்ட வண்ணப்பிரதிகளை ,  அனாயாசமாக  தூக்கிச்சாப்பிட்டுவிட்டனர் என்று அப்போதே சினிமா வட்டாரங்களில் சிலாகிக்கப்பட்டதை இப்போது உவகையுடன் நினைவு கூறுகிறேன்.  இவை குறித்த எந்த புரிதலும் தென்படாத விமரிசனங்களை வெளியிட்டு நமது பத்திரிகைகள் புகழ் தேடிக்கொண்டன .

இதில் ஒரு வியப்பு யாதெனில் வின்சென்ட் ஜெமினி ஸ்டூடியோ வில் திரு Kamal ghosh ன் சீடர்    [ நான் முன்பொரு பதிவில் நிமாய் கோஷ் ன் சீடர் என்று தவறாக பதிவிட்டுள்ளேன் அதற்காக அன்பர்களின்  மன்னிப்பை க்கோருகிறேன் ] திரு சுந்தரம் முற்றிலும்   வாஹினி யில் உருவானவர்.

இருவரும் ஒளிப்பதிவின் நுணுக்கங்களை சிறப்பாகப்புரிந்துவைத்திருந்தனர் ; எனவே வண்ணம் அவர்களுக்கு எண்ணம்  போல வசப்பட்டது. "நாளாம்  நாளாம்" பாடலில் கேமரா இயல்பாக இடம் மாறுவது ஒரு சிறப்பு. அதன் இயக்கம் ஒரு பார்வையாளனின் நிலையில் இருப்பது போல் அமைந்ததனால் , திரையில் ரம்மியமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டது. இருவரும் திரைப்படக்கல்லூரியில் பயிற்சி பெறாவிட்டாலும் , தத்தம் அனுபவ அறிவு மற்றும் தீவிர புரிதல் மற்றும் முயற்சியினாலும்   தங்களை நிலைப்படுத்திக்கொண்டனர்.  எவ்வளவு அனுபவசாலி எனினும் முன் பின் கையாளாத கலர் பிலிம் பணியை தன்னம்பிக்கை அன்றி வேறு எதைக்கொண்டு திறம்பட கையாண்டனர் ? இவற்றை நாம் அமைதியாக ஆலோசித்தால் மனித மனங்களை விஞ்சிய டெக்னாலஜி எதுவும் இல்லை என்று உணர்த்திய இவர்கள் நம் மனம் கவர்ந்த ராக்ஷஸர்கள் தான்.

  மேலும் வளரும்..   அன்பன்  ராமன்


Quote
Share: