ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 92 மெல்லிசை மன்னர் ஒரு சித்தர்  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 156
16/10/2020 5:22 am  

அன்பர்களே

அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் , மன்னருக்கு எந்த அடைமொழியிட்டு அழைத்தாலும் , ஒரு நிறைவை நம்மால் எட்டமுடியாத அளவிற்கு மாபெரும் பரிமாணங்களுக்கு சொந்தக்காரர். அவரை ஏன் சித்தர் என்று அடையாளப்படுத்த முயல வேண்டும் ? சித்தர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்று சாமானியர்களால் யூகிக்க முடியாது. அவர்களுக்கு உடல் ஓரிடத்திலும் மனம் வேறு இடத்திலும் சஞ்சரிப்பது  இயற்கையாகவோ , கடும் பயிற்சியினாலோ அமைந்த ஒன்று. இதன் விளைவாக மன்னர் ஈட்டிய பொருளை விடவும் , திரை உலகம் பெற்ற பலன்கள் ஏராளம் . அதைக்குறித்த எந்த விமரிசனங்களையும் அவர் தம் வாழ்நாளில் வெளியிட்டதில்லை. அவரைப்பொறுத்தவரை இசை அவரது ஆன்மாவில் இரண்டறப்பிணைந்துவிட்ட  ஒரு அங்கம். இதேபோன்ற மன நிலையில் எப்போதும் இசை நதிகளில் நீராடிக்கொண்டே , இசையை மனதில் அசைபோட்டுக்கொண்டே இயங்கியவர் மன்னர்.

இவ்வாறு இயங்கியவர் என்று எவ்வாறு நாம் உணர்ந்து கொள்வது என்ற கேள்வி எழலாம். இதை உறுதிப்படுத்திக்கொள்ள அவருடன் பணியாற்றிய இசைக்கலைஞர்களின் பதிவுகளே சான்று. அக்காலத்திய ரீ-ரெக்கார்டிங் காணொலிபதிவுகளிலும் , இயக்குனருடன் பேசிக்கொண்டே ஒருபுறம் திரையில் ஓடும் காட்சியைப்பார்த்துக்கொண்டே  , எங்கெங்கு என்ன வேண்டும் என்று விவாதிப்பார்; திடீரென்று OK , டேக் போலாமா என்பார் ; உடனே மாயாஜாலம் போல இசைக்கருவிகளின் பயணம் துவங்கும். சரியாக எத்தனை வினாடிகளுக்கு பின்னிசை ஒலிக்கவேண்டும் என்பதை படம் ஓடும் போதே தீர்மானித்து , அதே அளவில் இசை ஒலியை நிறுத்திவிட்டு, அடுத்த பகுதிக்குள் பிரவேசிப்பார். அவரின் சங்கேதங்களை நன்கு அறிந்த கலைஞர்கள் சிறப்பாக அவரது எண்ணங்களுக்கு செயல் வடிவம் தருவர்.

ஏதாவது பிழை நேர்ந்தால் உடனே மின்னலாய் குறுக்கிடுவார் மன்னர். தொடர்ந்து பிழை செய்தால் மன்னர் சிவனாக மாறி ருத்ரதாண்டவம் ஆடி விடுவார்.. தொடர்ந்து பிழை செய்தால், யாரும் காலாகாலத்தில் வீட்டுக்குப்போக முடியாது. எனவே பயபக்தியாக அனைவரும் குறிப்பறிந்து செயல்படுவார்கள் என்று பலரும் சொல்லக்கேட்டிருக்கிறோம்.                     

நான் முன்னர் கூறியுள்ள படி "காதலிக்க நேரமில்லை " ஒரு திருப்புமுனை என்பதால் மன்னரின் ரசிகர்கள் சிலர் " கா.நே" க்குமுன் ,"கா.நே " க்குப்பின் என்ற பார்வையை தமிழ்ப்பட பாடல்கள் மீது வைப்பார்கள். நிச்சயம் அதை தவறென்று கொள்ள முடியாது.  "காதலிக்க நேரமில்லை " எனும் இந்த ஒரு படத்தில் மன்னர்களின் இசை ராஜ்ஜியம் எவ்வளவு பறந்து விரிந்தது மற்றும் ஆழமானது என்பது தீவிர ஆராய்ச்சிப்பொருள் என்றே நான் உறுதியாக நம்புகிறேன். இந்தப்படத்தில் 8 பாடல்கள் ; ஒன்றுபோல் ஒன்று  இல்லை மாத்திரம் அல்ல , அன்றுபோல் [இசை] இன்று இல்லை என்பதும் மனதைக்குடைவதை நாம் மறுக்கவோ , மறக்கவோ முடியவில்லை.

மாறுபட்ட இசைக்கோர்வைகளும், கருவிகளின் சங்கமும் அவ்வப்போது ஒன்றிரண்டு பாடல்களில் நாம், அறிந்திருந்தாலும் , ஒரே படத்தில் இத்துணை ,மேற்கத்திய தாக்கம் அதற்குமுன் வந்த படங்களில் குறைவு தான். இவ்வளவு மேற்கத்திய ஜாலம் புரிந்த வி. ரா , கோரஸ் இல்லாமல்        [ வி.வேலைவேணும் தவிர]  பாடல்களை உருவாக்கியிருந்ததும் , மெல்லிசை மன்னரே கோரஸை தவிர்த்ததும் ஒரு சிறிய விலகல்.                             அதிகம் அறியப்பட்டிராத  கே .ஜே யேசுதாஸ் இப்படத்தில் எட்டியது ஒரு புதிய பரிமாணம் [ ஏனெனில் முன்னர் "பொம்மை" படத்தில் பாடியது வேறு வகை அமைப்பில் - எஸ்.பாலச்சந்தரிடம்].

யூக்லிங் பாடல் இந்தப்படத்தில் நாகேஷ் அவர்களுக்கு. படங்களில் அதிகம் அமையாத double டூயட் 'நெஞ்சத்தை அள்ளி' இந்தப்படத்தில் தான் இடம் பெற்றது; மேலும் இன்றுவரை கிறங்கடிக்கும் "அனுபவம் புதுமை" என்ற  பீஸேம் முச்சோ வகை இசைக்கோலமும் இதே படத்தில் தான்.

இவ்வாறாக பட்டையைக்கிளப்பிய மெல்லிசை மன்னர் இதே சாயலை தவிர்த்து வேறு வகை  பட்டையைக்கிளப்பியஉத்திகளை வெகு லாவகமாக அரங்கேற்றினார் என்பதை கவனித்தால்   அவரின் கற்பனைக்கு எல்லையே இல்லை  என்று அறிவுள்ள எவரும் ஏற்றுக்கொள்வர். இத்தகைய ஜாம்பவானை திரு ஸ்ரீதர் சிறப்பாக பயன் படுத்திக்கொண்டார் ; இவ்வாறாக இரும் பெரும் ஆளுமைகள் நிகழ்த்திய பாடல் அற்புதங்கள் நம்மை காலகாலத்திற்க்கும் மயக்கிக்கொண்டேசுருண்டுகிடக்க நாமும் தயார் என்பதே நமது நிலைப்பாடு.               அற்புதங்கள் தொடரும் .                   அன்பன் ராமன்   மதுரை.             


Quote
Share: