ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -42  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 105
16/03/2020 1:10 am  

அன்பர்களே

சென்ற பகுதியின் தொடர்ச்சியாக , மேலும் சில தகவல்களை  காண்போம் . ஸ்ரீதர் ஒரு அபார துணிச்சல் காரர் . ஆம் பிறர் செய்ய தயங்கும் சோதனைகளை மிகுந்த  தன்னம்பிக்கையுடன் மேற்கொள்வார். திரு கோபு அவர்கள் நினைவு கூறுவது போல -முதல்நாள்  வாங்கிய காரில் , கோபுவையும் ஏற்றிக்கொண்டு அசுர வேகத்தில் காரை ஒட்டினாராம்.. நீ எப்போது கார் ஓட்ட கற்றுக்கொண்டாய் ? நேற்று தான் என்று சொன்னாராம். புதிதாக வாகனம் ஓட்டும் யாருக்கும் இவ்வளவு துணிச்சல் வராது. காரில் அவரும் பயணித்தார் என்பதே கவனிக்கவேண்டியது. எதிலும் ஒரு துடிப்பான ஆர்வம்.  சரி அவற்றிற்கான அளவுகோல் என்ன?   

அவரது சாகசங்கள் கருப்பு -வெள்ளை படங்களிலேயே துவங்கியது.  1. பெரும்பாலும் சாதாரண நடிகை நடிகையரையே அமர்த்தி நடிக்க வைப்பார். 2. பெரும் நட்சத்திரங்களின் மேலாதிக்க மனப்பான்மைக்கு இடம் கொடாதவர். 3. படப்பிடிப்புகளுக்கு குறித்த நேரத்தில் கலைஞர்கள் வரவேண்டும் என்று கண்டிப்பு காட்டக்கூடியவர். [நடிகை பத்மினி சரியான நேரத்திற்கு வராததால் சினம் கொண்ட ஸ்ரீதர் ,ஸ் டுடியோ வளாகத்தில் கோபு, வின்சென்ட் , சுந்தரம் என்று அழைத்துக்கொண்டு சிறுவர்களைப்போல கோலிக்குண்டு விளையாடி கோபத்தை வெளிப்படுத்தினாராம்]  4. சில புதிய வரவுகளுக்கு தொடர்ந்து ஆதரவளித்து அவர்களை நிலைப்படுத்திக்கொள்ள உதவிய நிகழ்வுகள் அநேகம்.  உதாரணம்: முத்துராமன், நாகேஷ், மாலி, மூர்த்தி, காஞ்சனா , சச்சு என்று பட்டியல் நீளும். 5 அவர் தொடர்ந்து தயாரிப்பாளராக இருந்த காலங்களில் அவரது தொழில் நுட்ப குழு நிரந்தரமானதாகவே இருந்தது. வின்சென்ட்-சுந்தரம் [கேமரா] , தங்கப்பன் [நடன இயக்குனர்] , என்.எம்.சங்கர் [எடிட்டர்], உதவி டைரக்டர்கள் -  பி..மாதவன் சி.வி.ராஜேந்திரன், பாஸ்கர் ,  பின்னாளில், பி.வாசு , மக்கள் தொடர்பு -பி.ஜி .ஆனந்தன் , ஸ்டில்ல் -திருச்சி அருணாச்சலம் [என்ற ஆனா ருனா ]. வின்சென்ட்-சுந்தரம் தனித்து இயங்க துவங்கியபின் என் . பாலகிருஷ்ணன்  [கேமரா]  இவர்கள் பெயர் சுவரொட்டிகளில் கீழ் பகுதியை அலங்கரித்தது ஸ்ரீதர் படங்களில் மட்டுமே. பின்னர் பிறர் இதை கடைப்பிடிக்கத்துவங்கினர். 6 அவரால் நல்ல இடத்துக்கு வந்தவர்கள் : முத்துராமன், நாகேஷ்,  சச்சு,  கல்யாணகுமார் , தேவிகா , அறிமுக வெற்றியாளர்களாக -ஜெயலலிதா , காஞ்சனா , ரவிச்சந்திரன், வெ .ஆ .நிர்மலா , வெ .ஆ மூர்த்தி, மற்றும் விக்ரம்.

அதிகம் அறியப்படாத முத்துராமன், நாகேஷ்,,தேவிகா கல்யாணகுமார்- நெஞ்சில் ஒர் ஆலயம்   வெற்றியினால் நட்சத்திர அந்தஸ்து பெற்றனர்.  காஞ்சனா , ரவிச்சந்திரன் காதலிக்க நேரமில்லை க்குப்பின் மார்க்கெட் பிடித்தனர்

ஜெயலலிதா, வெ .ஆ .நிர்மலா , வெ .ஆ மூர்த்தி மூவரும் வெண்ணிற ஆடைக்குப்பின் தமிழ்த்துறையில் நீண்ட காலம் வலம் வந்தனர்

மிகவும்  ஆழமான பாத்திரங்களில் -பாரதி மற்றும் முத்துராமனை அவளுக்கென்று ஓர் மனம் படத்தில் சிறப்பாக பயன் படுத்தி இருந்தார். [அதாவது ஒரு கலைஞனின் பரிமாணத்தை வெளிக்கொணரும் திறமையாக இதை குறிப்பிடுகிறேன்]. 8. தொழில் நுட்பத்தில் பரிசோதனை : இதில் ஸ்ரீதர் ஒரு மாறுபட்ட பார்வைகொண்டவர். முதலில் கருப்பு வெள்ளை காலத்தில் /களத்தில் . நெஞ்சில் ஓர் ஆலயம்  21  நாட்களில் உருவாக்கம். அதிகம் தமிழ்திரையில் வலம் வராத நடிக ,நடிகையர் , நாகேஷ் என்னும் இளம் காமெடியன் , குட்டி பத்மினி -சிறு குழந்தை பாத்திரத்தில்  இந்தப்படத்தில் தான். முதலில் ஸ்ரீதர் குழுவில் பங்கேற்ற விசு -ராமமூர்த்தி இசை , ஒரே செட்டில் படப்பிடிப்பு. இத்துணையும் விநியோகஸ்தர்களுக்கு தெம்பளிக்காத அமைப்புகள். சமகாலத்திய படங்களோ, நட்சத்திர பட்டங்கள் வலிமையோடு. ஆயினும் படம் மாபெரும் வரவேற்பை பெற்று , வசூலிலும் சாதனை . ஸ்ரீதரே படத்தை வெளியிட்டு தனது  துணிச்சலை   ஐயம் திரிபற நிலை நாட்டினார்.. 9 சுமை தாங்கியிலும், போலீஸ் காரன் மகளிலும் ஏறக்குறைய குறைந்த பட்ஜெட்டில் வலுவான காட்சி அமைப்புகளால் வெகு ஜன பாராட்டுகளை பெற்றன. இவை அன்றைய  கதை மற்றும் சில செண்டிமெண்ட் களை தழுவாமல் மாறுபட்ட பார்வையில் அமைந்து வரவேற்பை பெற்றன.. 10  நெஞ்சம் மறப்பதில்லை படம் பல வகைகளிலும் புரட்சிகரமானது. நம்பியாரை ஒரு நூற்று கிழவனாக காட்டிய ஒப்பனை ஹாலிவுட் தரத்துக்கு அமைந்திருந்தது. இவை அனைத்தும் காலத்திற்கு முற்பட்டவை.

11  நெஞ்சிருக்கும் வரை ஏழ்மையை கவுரவமாக பதிவிட்ட படம், முன்னணி நடிகர்களை ஒப்பனை இல்லாமல் பங்களிக்க வைத்த திறமை -ஸ்ரீதருக்கே சாத்தியம் எனில் மிகை அல்ல.

  • 12 கலர் படங்களில் ஸ்ரீதரின் வீச்சு அபாரமானது.  ஆம் 1964 இல் முழுநீள நகைச்சுவை, சில புது முகங்களையும் சில பழைய நடிகர்களையும் கொண்டு , பாடல்கள் மற்றும் அற்புதமான படப்பிடிப்பினால் உள்ளங்களை கொள்ளை கொண்ட யதார்த்தம் நிறைந்த படம்.. சென்னை, ஜெமினி வண்ணக்கூ டத்தில், அனைத்து வசதிகளும் இருந்தும் , பெரும்பாலும் தமிழ் திரைப்படங்கள் பம்பாய் பிலிம் சென்டரில் தான் உருவாக்கப்பட்டன. துணிச்சலாக , ஸ்ரீதர் கா.நே  வை ஜெமினி நிறுவனத்தின் வண்ணக்கூடத்தில் கழுவி, பிரதிகளையும் எடுத்து வெளியிட்டார். இப்படம் அடைந்த வெற்றியை நான் சொல்ல வேண்டியதில்லை.

13 மீண்டும் ஒரு வண்ணப்புரட்சி    "வெண்ணிற ஆடை " ஆம் அனைவரும் புதுமுகங்கள் -ஜெயலலிதா, ஸ்ரீகாந்த், நிர்மலா, மூர்த்தி, ஆஷா , சேஷாத்திரி, மாலி என்று நீளும் பட்டியல். கதைக்கருவும், அமைப்பும் படப்பிடிப்பும் வண்ண படத்தின் தேவைகளை அற்புதமாக நிறைவு செய்தன. பாடல்கள் முற்றிலும் புது ரகம் , அபாரமான மேற்கத்திய இசை நுணுக்கங்களுடன். 1964-65 கால கட்டத்தில் தான் தமிழ் திரையுலகம் வண்ணப்பட தயாரிப்பில் கவனம் செலுத்த துவங்கியது. சில ஹிந்தி படங்கள் ஜெமினி வண்ணக்கூடத்திற்கு வர ஆரம்பித்தன.

14 ஒரு மா பெரும் புரட்சி 'சிவந்த மண்'  ஐரோப்பாவில் படப்பிடிப்பு, பெரிய அரங்க நிர்மாணங்கள். ஹெலிகாப்டர் சண்டைக்காட்சிகள் , எகிப்திய நடன அமைப்பு, இரு மொழிகளில் என்று அந்நியச்செலாவணிக்கு அஞ்சாமல் களம் கண்ட இயக்குனர் ஸ்ரீதர்.  இவற்றினூடே , ஊட்டி வரை உறவு, அவளுக்கென்று ஓர் மனம் போன்ற முற்றிலும் உள்நாட்டில் , வெளிப்புற படப்பிடிப்புகளுடன்.   இவற்றில் ஸ்ரீதரின் தனித்தன்மை அகலவே இல்லை. . இவ்வாறு பல புதுமைகளை ஒன்றன் பின் ஒன்றாக [சில சமயம் ஒரே நேரத்தில் ] களமிறக்கிய நம் காலத்திய வித்தகர்.

15 திரைப்படங்களின்  வேண்டாத போட்டியை தவிர்க்க ஒரு சுய கட்டுப்பாடு வேண்டும் என்று அவற்றின் வெளியீடுகளை சரியான கால இடைவெளிகளில் செய்தால் அனைத்து தயாரிப்புகளுக்கு நியாயமான வாய்ப்பு கிடைக்கும் என்னும் நோக்கில் மூவி  மேக்க ர்ஸ் கவுன்சில் என்ற அமைப்பை முன்மொழிந்து செயல் படுத்தினார். இவ்வாறு தனது தொழில் குறித்த அக்கறை கொண்டிருந்தார். ஏகப்பட்ட சிறப்புகளுக்கு  சொந்தக்காரர் ஸ்ரீதர்.

அவர் மறையும் வரை அவரை சந்திக்க அடங்காத ஆவலுடன் அலைந்தேன். யாரை அணுகுவது என்ற தெளிவில்லாமல் வாய்ப்பை இழந்து , அவரின் ஆக்கங்களை பெருமையுடன் பகிர்ந்து சற்றே திருப்தி கொள்கிறேன்.  

கொடுப்பினை என்பது இது தான் போலும்                                                                                                                    மேலும் வேறு  தகவல்களுடன்   பின்னர் சந்திப்போம்.                                              அன்புடன்        ராமன்  மதுரை .


Quote
Share: