ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 132 முன்னும் பின்னும் பயணித்த காலம், களம்,கோலம் காலம், களம்,கோலம்  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 212
22/06/2021 11:44 am  

அன்பர்களே

இது என்ன " திரை உலகம் முன்னும் பின்னும் பயணித்த காலம், களம்,கோலம்" என்ற வினா எழுகிறதல்லவா? ஆம் அது தான் அன்றைய நிலை. எந்த அம்சத்தை பார்த்தாலும் முன்னேறிய  நிலையில் இருந்து சற்றே பின்னோக்கி சென்றதோ என்று எண்ணத்தோன்றும். இந்த 'அலைத'லில் பாகு பாடு இன்றி அனைத்து நிறுவனங்களுமே இயங்கத்தலைப்பட்டன.

வண்ணப்படங்களில் சிறப்பாக தடம் பதித்த, ஸ்ரீதர், ஏ வி எம் , ஜெமினி [ஹிந்தி] விஜயா - வாஹினி , பந்துலு உள்ளிட்ட அனைவரும் மீண்டும் கருப்பு வெள்ளை படங்களைக் களப் படுத்தினர். அது ஏன் என்ற ஒரு கேள்விக்கு விடைகள் ஏராளம். அவை முற்றிலும் பொருளாதார நிலை சார்ந்தவை.

அன்று படம் பிலிமில்  பதியப்பட்டு பின்னர் பிரதிகள் எடுத்து திரையிடப்படும் தொழில் நுட்பம் மட்டுமே இருந்தது. நமது நாட்டின்  பொருளாதார மற்றும் வெளியுறவு கொள்கைகளுக்கு ஏற்ப சினிமா பிலிம் வாங்குவதை முறைப்படுத்தும் இறக்குமதி மற்றும் அந்நியச்செலாவணி கொள்கைகள் வகுக்கப்பட்டிருந்தன. எனவே பிலிம் விலையும் அவ்வப்போது உயர்ந்து வந்தது. இவை அனைத்தையும் சகித்துக்கொண்டு தான் வண்ணப்படங்களை உருவாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது .

ஆகவே முன்னணி நிறுவனங்கள் கூட அதிகளவில் வண்ணப்படத்தயாரிப்பில் தெம்புடன் செயல்பட இயலவில்லை. ஆகவே கலர் மற்றும் கருப்புவெள்ளை படங்கள் மாறி மாறித்தான் வெளிவந்தன. ஒரு மன நிறைவான நிலை யாதெனில் இன்று போல் அன்று எந்த முன்னணி நடிகனும் சட்ட திட்டங்களை  வகுத்ததில்லை.தயாரிப்பாளரே முதன்மையானவர் . இரண்டாம் தலைவர் -இயக்குனர். எனவே கொள்கை முடிவுகள் வெற்றியை அடிப்படையாக க்கொண்டிருந்தன.

இவற்றிற்கிடையே தான் ஸ்ரீதர் புதுமுகங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வந்தார். இதனால் அவர் நினைத்ததை நிறைவேற்ற ,அவருக்கு வேண்டிய பலம் இருந்தது. அவர் பெரிதும் சார்ந்திருந்தது திறமையான தொழில் நுட்ப க்கலைஞர்கள் மற்றும் கம்பீரமான இசை அமைப்பாளர்கள். நெஞ்சில் ஓர்  ஆலயம் அமைத்த மெல்லிசை மன்னர் நீண்ட இசைக்கொடையை ஸ்ரீதருக்கு இடையறாது வழங்கி வந்தார். குறிப்பாக 'வெண்ணிற ஆடை' படத்திற்கு பிறகு எம் எஸ் வி தனித்து இயங்கிய போதும், ஸ்ரீதரின் படங்களுக்கு அதிரடி மற்றும் அலாதியான இசைப்பரிமாணங்களை வெளிப்படுத்தினார். நெஞ்சிருக்கும் வரை, கொடிமலர் , அலைகள் போன்ற கருப்புவெள்ளைப்படங்களிலும் , ஊட்டிவரை உறவு, சிவந்தமண்  அவளுக்கென்று ஒரு மனம் போன்ற வண்ணப்படங்களிலும் முற்றிலும் வேறுபட்ட தொகுப்புகளை [ compositions ] தந்தார் எம் எஸ் வி.    

 

தனி ஆளாக அன்றைய திரை இசையை வியத்தகு வியாபகங்களுக்கு விரிவடையச்செய்தார். அன்றைய களம் தயாரிப்பாளர்களுக்கானது. ஆயினும், இசை என்ற பரிமாணம் குறித்து கவனம் கொண்டிருந்த எந்த தயாரிப்பாளருக்கும் உற்ற நண்பனாக உதவியவர் எம்எஸ்வி. ஆம், பொருள் பற்றிய முதன்மைச்சிந்தனை கொள்ளாமல், இசையை முன்னிலை கொள்ளச்செய்த பெருந்தகை எம் எஸ் வி எனில் அது முற்றிலும் சத்தியம் அவருக்கு அதுவும் / எதுவும் சாத்தியம். நெஞ்சிருக்கும் வரை அலைகள் , சிவந்த மண் , அவளுக்கு என்று ஒரு மனம்  அனைத்திலும் அமைந்த பாடல்கள்     எ ம் எஸ் வியின் பன்முக ஆளுமைகளை தவறாது வெளிப்படுத்தின,

முத்துக்களோ கண்கள், பொன் என்ன பூவென்ன கண்ணே , ஒரு ராஜா  ராணியிடம் , பட்டத்து  ராணி, உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்  என்று  அமைந்த பாடல்களே மெல்லிசை மன்னரின் அடங்காத இசை ஊற்றின் சில அடையாளங்கள். அவற்றை முறையாக பயன்படுத்திட  ஸ்ரீதருக்கு அமைந்த காலங்கள் இனி மீளுமா என்ன ? ஊஹூம் என்றே தோன்றுகிறது .

மேலும் தகவல்களுடன் தொடர்வோம் அன்பன்  ராமன்  மதுரை

This topic was modified 1 month ago by K.Raman

Quote
Share: