ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் – 116 மாறிய களம் , கலம் ,காலம்  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 203
21/02/2021 1:13 pm  

அன்பர்களே

இப்போது நாம் காண இருக்கும் களமும் காலமும் மிகவும் மாறுபட்டன ; அதாவது யார் யாருடன் எந்த படத்தயாரிப்பில் இணைந்தனர் என்ற சுவாரசியம் மிக்க கட்டம் . இதில் முன்னணியில் நான் நிறுத்திவது ஸ்ரீதரைத்தான் ; அவர் மெல்லிசைமன்னருடன் பயணித்த 1966, 67,68 எனும் பரபரப்பான காலம்.  அதாவது வி , ரா தனிமைப்பட்ட பின் நிகழ்ந்த சில இசை சிறப்புகள் இந்த காலகட்டத்தில் தான் அரங்கேறின என்பதால் இந்த காலமும் முக்கியத்துவம் பெறுகிறது.           1965 க்குப்பின்  தனித்த எம் எஸ் வியின் இசை மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது 1966 இல்.

படங்களின் பட்டியலைப்பாருங்கள்.     அன்பே வா ,நான் ஆணையிட்டால், சித்தி, சந்திரோதயம் , மோட்டார் சுந்தரம் பிள்ளை , கொடிமலர் , பறக்கும் பாவை. இவற்றின் பாடல்கள் இசை ரசிகர்களை கட்டி வைத்திருப்பதை நாம் நன்கறிவோம். தனித்த எம் எஸ் வியின் இசை, ஸ்ரீதருக்கு வழங்கிய கொடை1967 இல் வெளிவந்த நெஞ்சிருக்கும் வரை படத்திற்கான பாடல்கள்.

ஏன், 1966இல் கொடிமலர் ஸ்ரீதர் இயக்கிய படம் தானே என்போர் கேள்விக்கு நான் குறிப்பிடுவது ஸ்ரீதர் தயாரிப்பும் இயக்கமும் செய்த அடிப்படையில் என தெளிவு படுத்துகிறேன். இதே காலகட்டத்தில் ஸ்ரீதர் -காதலிக்க நேரமில்லை படத்தின் ஹிந்தி தயாரிப்பை வெளியிட்டார் [ 1966].    அப் படத்திலும் ஜி .பாலகிருஷ்ணா தலைமையில் , என்.பாலகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.     1967 ல் வெளிவந்த ஊட்டி வரை படம் மீண்டும் பாடல்களுக்காக பெரிதும் பேசப்பட்டது.       [-தயாரிப்பு கோவை செழியன் ].

1968 வேறொருவகையில் ஸ்ரீதருக்கு எம் எஸ் விக்கும் சிறப்பு சேர்த்தது. தமிழில் வெற்றிக்கொடி நாட்டிய  , பாலும் பழமும் படம் ஹிந்தியில் மீண்டும் எடுக்கப்பட்டது. ஆம் ஸ்ரீதரின் தாய் வீடான வீனஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அப்படத்தை தயாரித்தது . இயக்கம் ஸ்ரீதர் -ஒளிப்பதிவு மார்கஸ் பார்ட்லே, இசை: நவுஷத் . முதலில் தமிழில் வந்த பாடல்களை கேட்டு , பின் இசை அமைக்க மறுத்துவிட்டாராம். பின்னர் விசு வின் வேண்டுகோளை ஏற்று இசை அமைத்துக்கொடுத்தாராம். இது குறித்த பின் வரும் தகவலை நான்  COPY AND  PASTE  செய்து கொடுத்துள்ளேன். எம் எஸ்வியின் இசை பற்றி பிரம்மரிஷி நவுஷத் என்ன சொல்லியிருக்கிறார் என்று  படித்து இன்புறுங்கள்.

When C.V.Sridhar approached Naushad for composing, he listened to the songs of the original film Paalum Pazhamum which was composed by Viswanathan–Ramamoorthy in Tamil. After listening to the songs, Naushad wrote a letter to M.S.Viswanathan saying that he cannot replace the wonderful music which he has composed and he's declining the project. Later, Naushad accepted to compose for the film only on Viswanathan's request. The film's soundtrack was composed by Naushad while the lyrics were provided by Majrooh Sultanpuri.

இப்போது நாம் சில தகவல்களை சரியாக கவனிக்க வேண்டும். வீனஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்ரீதர் வெளியேறி சுமார் 9-10 ஆண்டுகளுக்குப்பின்னர் அந்த நிறுவனம் ஸ்ரீதரையே ஹிந்திப்படப்பிடிப்பிற்கு பயன் படுத்திக்கொண்டது. - நட்போ அன்றி தொழிலார்ந்த தேர்வோ ; எப்படி ஆயினும் வட நாட்டில் ஏற்கனவே ஹிந்திப்படங்களில் ஸ்ரீதர் பெயரெடுத்திருந்தார்.  அதே போல பாடல்களின் தேவை யை நன்குணர்ந்த ஸ்ரீதர் , இசைக்கு நவுஷத்தை நாடினார்.

நவுஷத்  ஒரு இசை ஜாம்பவான். எப்படி ரீமே க் குறித்து எம் எஸ் வி தயக்கம் காட்டுவாரா அதே பண்பை நாம் நவுஷத் திடம் பார்க்கிறோம். இறுதியில் அன்புக்கு கட்டுப்பட்டு இசை அமைத்துள்ளார்.

எம் எஸ் வியின் மானஸீககுரு நவுஷத் . அதே போலநவுஷத்தின்  மானஸீககுரு எம் எஸ் வி. இருவரும் மனதால் இசையில் ஒன்றித்திளைத்து பரஸ்பரம் அன்பும் மரியாதையும் கொண்ட ஜாம்பவான்கள். அக்காலத்திய திரை உலகம், தரம் மிகுந்தது எனில் மிகை அல்ல.

 வேறு தகவல்களுடன் மீண்டும் சந்திப்போம்.                             அன்பன்  ராமன்  மதுரை.


Quote
Share: