ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 114 பாதை மாறிய பயணிகள்  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 193
13/02/2021 1:07 pm  

அன்பர்களே

1965   பல மாற்றங்களை சந்தித்தது - திரையில் மட்டும் அல்ல, சில தனி மனித வாழ்விலும்  ஏன் தமிழக அரசியலிலும் கூட. ஆரம்பகாலபகுதியிலேயே மொழிப்போராட்டம் வலுத்து , இயல்பு வாழ்க்கை மாறி , எடுத்ததெற்கெல்லாம் வேலை நிறுத்தம் எனும் ஆயுதம் கையிலெடுக்கப்பட்டது.இது ஆழமாக வேரூன்றி பெரும் அரசியல் ஆசிகளுடன் தொழிற்சங்கங்கள் மற்றும் கூட்டு பேரம் துவங்கியது. இவை ஒரு புறம் இருக்க , ஆரம்பகாலம் முதல் கூட்டாக பயணித்தவிஸ்வநாதன் ராமமூர்த்தி இருவரும் ஆரம்பகால கூட்டில் இருந்து விலகினர். இது என்ன பெரிய விவாதப்பொருளா ? எனில் நிச்சயம் அப்படித்தான் .

இசை அமைப்பில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கி , அனைத்து தயாரிப்பாளர்களும் வி-- ரா இல்லாமல் தமிழில் வெற்றிப்படங்கள் உருவாக்குவது கடினம் என்ற மன நிலைக்கு தள்ளப்பட்டிருந்தனர்.அவ்வளவு ஏன், அனைத்திற்கும் ஆஸ்தானங்களை கை வசம் வைத்திருந்தக எஸ் எஸ் வாசனே , வி -ரா வை வைத்து "வாழ்க்கை படகு" படத்தை உருவாக்கியிருந்ததும் 1965ல் தான்.அந்த காலகட்டத்தில் விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்த எந்த படத்திலும் இசை சோடை போனதே இல்லை.

"1000 இல் ஒருவன்" வெளியான பின் வி- ரா வின் விலகல் அறிவிக்கப்பட்டது. "1000 இல் ஒருவன்" பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பிக்கொண்டிருக்க, வி -- ரா விலகி, வி யும் , ரா வும் என ஆனது அன்றைய  இசை ரசிகனுக்கு ஜீரணிக்கக்கூடியதே அல்ல. அன்றைய கல்லூரி மாணவர்கள் சில மாதங்கள் ஒரு மன வேதனையுடன் உலவி வந்த காட்சிகள் இப்போதும் மனத்திரையில் ‘பளிச்’ என்று மங்காமல் இருக்கின்றன. மேலும் கல்லூரி விடுதிகளில் கோஷ்டி சண்டைகள் பிரபலம் - இரு அணிகளாக -விசு அணி, ராமமூர்த்தி அணி என்பதாக .

இருவரில் யாருக்கு முதலிடம் என்பது குறித்து யாருக்கும் தெரியாத போதும் , இந்த கோஷ்டி மோதலுக்கு அளவோ, பஞ்சமோ இல்லை. அனைவரும் நண்பர்கள் தான் எனினும் , கருத்து வேறுபாடு தலைதூக்கி விட்டால் பின் வரும் சொற்பிரயோகங்கள் வெகு சாதாரணம்.  " படம்" வந்ததும் பாருங்கடா -ராமமூர்த்தி யாருனு "

எதிர் அணிப்பையன் சொல்வான் 'நீ தூங்காம உக்காந்திரு அப்பதான் ராமமூர்த்தி படம் பாக்கலாம் - ஏன்னா மறுநாளே  டப்பாக்குள்ள போய்டும் நீ வேணா பார்; '  என்பான்.  உடனே அவன் சீறுவான் போடா லூசு ,  விசு வுக்கு படமே வரப்போறதில்லை வந்தா நானே உன்னை கூட்டிக்கிட்டு போறேன் படம் பார்க்க '

இப்போது முன்னவன் " போங்கடா  எங்க மாமா வாகினி  ஸ்டூடியோ  அக்கௌன்ட்ஸ் ல இருக்கார் அவரே சொல்லிருக்கார் - விசு முன்னால எவனும் நிக்க முடியாதுனு. அதுனால உங்காளு இனிமே ஓரமா உக்காரவேண்டியதான் . அப்ப நீ புலம்பறத நாங்க பாக்கத்தான் போறோம் என்பான். இவை அன்றாட நிகழ்வுகள்.

ஆரம்பத்தில் விசு வுக்கு படங்கள் வெளிவரவில்லை.  ஆனால் ராமமூர்த்திக்கு வரிசையாக – ‘மெட்ராஸ் டு பாண்டிச்சேரி , சாது  மிரண்டால், சோப்பு சீப்பு கண்ணாடி ‘ என்று வரிசையாக வெளியீடுகள் விளம்பரப்படுத்தப்பட்டன . படங்களும் ஒவ்வொன்றாக வெளிவந்தன. பாடல்கள் பெரிதாக யாரையும் கவரவில்லை.. என்னடா இது - அவன் சொன்னது தான் நிஜமா என்று விசு அணியினர் சோர்வுற்றனர்.     திடீரென்று "நீ "  படம் வந்தது  இசை- விஸ்வநாதன். பாடல்கள் டிபிக்கல் எம் எஸ் வியின் கம்பீரத்துடன்.

விடுதியில் துவங்கிவிட்டது கோஷ்டி சண்டை;  " இப்போ வாடா வெளியே  பேரு  தாண்டா  "நீ" ஆனால் இசைன்னா 'நான்' தான் நிரூபிச்சிட்டாருடா விஸ்வநாதன் . "நீ” ல வந்தமாரி ஒரு பாட்டு இருக்காடா ஒங்க ஆளு ம்யுசிக்குல - சும்மா கூவாத ஒங்காளு - சுத்தம் கோவிந்தா -கோவிந்தா என்று விசுவின் ரசிகன் அலறி  பெரிய கைகலப்பு நண்பர்களிடையே. இவர்களை விலக்கி விடுவதே    எங்களுக்கு அன்றாட பணியானது. ஆனால் இதையும் தாண்டி "கலங்கரை விளக்கம் " உண்மையிலேயே விசுவின் தனித்த திறமைகளை பட்டவர்த்தனமாக்கி , அநேகமாக அனைத்து வாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. மீண்டும் ரா , வி என்ற பாகுபாடு விலகி அனைவரும் எம் எஸ் வி யின் இசையில் மயங்கி இன்றளவும் அந்த மயக்கத்திலேயே வாழ்வின் பெரும் பகுதியை மகிழ்ச்சியாக கழித்துவிட்டோம். மேலும் விவரங்களுடன் மீண்டும்.    அன்பன் ராமன்   மதுரை.


kothai liked
Quote
kothai
(@kothai)
Trusted Member
Joined: 6 months ago
Posts: 71
18/02/2021 4:43 am  

TO K.Raman Sir, 

நீங்கள் இதில் விவரித்தது நான் ஓரளவுதான் அன்றைக்குப் புரிந்து கொண்டிருந்தேன் . 'நான் 'திரையில் T K R ...இசை வெற்றிதான் . எம் எஸ் வியும் அவரது புதுமை ஆர்வத்தில் தனித்து நிற்கலானார் . இதில் பின்னாளில் நான் தெரிந்த உண்மை ...எம் எஸ் வி அவர்களைவிட வயதில் மூத்தவர் T K R . அதனால் விருப்ப ஓய்வோ சோர்வோ பெற்ற நேரத்தில் ...M S V அவர்கள் இசை தனித்து , புதுப்புது யுக்திகளில் வெளிவர வரவேற்பு பெற்றது . சிவந்த மண் , உலகம் சுற்றும் வாலிபன் இவை ..அந்த நேரம் ஆராதனா போன்ற இந்திப் படங்களில் இடம்பெற்ற பாடல்களுக்கு வந்த அபரிமிதமான வரவேற்பு நடுவில் சொல்லப் போனால் சூழலில் , தமிழ்திரையிசை உலகை M S V அவர்களே தனித்து நிறுத்த முடிந்தது .
இது வாணிஜெயராம் அவர்கள் பாடிய , 'மல்லிகை என் மன்னன் மயங்கும் ...' பாடலில் எதிரொலிப்பதைக் காணலாம் . இதில் ஒரு சங்கதி என்னவென்றால் T K R ...குப் பிறகு பாவங்களை அழகாகச் சேர்த்துக் கொடுக்கும் ..வயலின் கலைஞர் பொருத்தமாக கிடைக்கவில்லை . அதற்கேற்றாற்போல் அந்தக் காலகட்டங்களில் ...கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வரவில்லை . பொழுதுபோக்கு , பிறமொழிப்படங்கள் மாற்று மறு பதிப்பு , சர்ச்சைகள் வெளிப்பட்ட படங்களே வந்தன . எது எப்படி போனாலும் அபூர்வராகங்கள் வெற்றிக்கு M S V அவர்கள் இசையமைப்பும் .. கவியரசர் வரிகளும் காரணம் .1975. .. வரை இச் சூழல் நீடித்தது.
நன்றி ...நீங்கள் தமிழ்த் திரையிசை உலகில் ஒரு முக்கியமான கால கட்டத்தை விமரிசித்துள்ளீர் .


ReplyQuote
Share: