அன்பர்களே
ஸ்ரீதர் -எம் எஸ் வி இருவரும் கவியரசரை சிறப்பாக பயன்படுத்தினர் என்பது தமிழ்த்திரை தன்னை வளப்படுத்தியமைக்கு அடையாளம் . இவர்தம் முதல் படம் நெஞ்சில் ஓர் ஆலயம் ; ஆனால் பாடல்களில் வெளிப்படும் கவித்துவம் , இசையின் ஆளுமை இரண்டும் காட்சிகளுக்கு சிறப்பு சேர்த்ததை நாம் அறிவோம். இதில் என்ன 'ஆனால்' என்கிறீர்களா? அந்த ஆனால் வலுவாக கட்டமைப்பது இப்படத்தின் கதையின் போக்கும் காட்சிகளின் தன்மைகள் முற்றிலும் மரபு விலகியிருந்தமை [அதாவது , அன்றைய திரைமரபுகளிலிருந்து ] கவனத்தில் கொள்ளத்தக்கன. இவை மாறுபட்டிருந்தாலும் , கவியரசரும், செவியரசரும் தத்தம் ஆளுமைகளை அனாயாசமாக நிறுவியபின், ஸ்ரீதர் தன்னை நிருபிக்க வேண்டிய சூழல் வலுவாக அமைந்தது.இதை நான் உணர்த்திட , 'சொன்னது நீதானா ' காட்சியையும் , 'என்ன நினைத்து என்னை அழைத்தாயோ' காட்சியையும் அடையாளம் கொள்ளலாம் என உணருகிறேன். இந்த சகாப்த நாயகர்களின் பிற படங்களில் அமைந்த சிறப்புகளை பேசலாம் .
“போலீஸ்காரன் மகள்”.
ஆரம்ப கால நீச்சல்குள படப்பிடிப்பில் அமைந்த பாடல் 'ஆண்டொன்று போனால்' பிளே பாய் பாத்திரத்தில் பாலாஜி வெவ்வேறு பெண்களுடன் குலாவும் காட்சி. பாடலின் உயிர் நாடியாக 'அழகுடன் இளமை தொடர்ந்து வராது ,இருக்கின்றபோதே வா வா வா ' . பெண்கள் மாறுவதை குறிக்கும் உத்தியாக இசையும் மாறுபடும் -குறிப்பாக இடை இசை. இதற்கொப்ப ஸ்ரீதரும் காட்சியமைப்பில் கவனம் செலுத்தி பாடல் களத்தையும் மாற்றி மாற்றி அமைத்தார்.
'இந்த மன்றத்தில் ஓடி வரும் ' பாடலில் கவிஞர் காட்டும் ரஸம் மாறுபட்டது - " நடு இரவினில் விழிக்கின்றாள் , உன் உறவினை நினைக்கிறாள் " மற்றும் தன் “கண்ணனைத்தேடுகிறாள், இந்த அண்ணனை மறந்துவிட்டாள் என ஒரு மொழி கூறாயோ " என்று அண்ணன் பாட , தங்கை அதிர்வதாக காட்சி அமைப்பு. இப்பாடலின் ஆக்கத்தில் அனைவரது பங்களிப்பும் பெருமைக்குரியது.
கதைக்கருவை தொட்டு காட்டும் பாடல் " கண்ணிலே நீர் எதற்கு " கதையில் விழுந்த சிக்கல் நாயகியின் நிலையே. அதை நன்கு வெளிப்படுத்திய அண்ணன்- தங்கை -சோகப்பாடல் , இதில் கவிஞர் காட்டும் வீரியம் "வண்டுக்கு சிறகெதற்கு - என அண் ணன் தேம்ப , உண்டபின்பு பறப்பதற்கு" என்று குமுறும் தங்கை ; இவர்கள் வாயிலாக உவமையின் வடிவில் யுவதியின் வஞ்சிக்கப்பட்ட நிலையை கவிஞர் சொல்லில் பீறிட , மன்னர் சோகத்தை இசை மற்றும் பாடும் பாவம் இரண்டிலும் பிழிந்து அரங்கில் மயான அமைதியுடன் பார்வையாளர்கள். இது போன்ற அமைப்புகள் சமகால படங்களில் இடம் பெறுவதில்லை , அதுவும் கூட பெண்களுக்கு பொது இடங்களில் இன்னல் ஏற்பட ஒருவகையில் காரணியாக அமைந்து விட்டதோ என்ற அச்சம் எழுகிறது. அதாவது, பல நேரங்களில் ADVENTURE வகை ஆண் -பெண் சந்திப்புகள் அமைவதற்கு திரைப்பட காட்சி அமைப்புகள் தெம்பூட்டுகின்றன என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது வெளிப்படுவது இதை உணர்த்துவதாக என் மனம் நினைக்கிறது. தவறெனில் மன்னிப்பீர் எனது விமரிசனத்தை.
இதில் அடுத்த களம் 'சுமைதாங்கி' .
இப்படத்தில் ஸ்ரீதர் காதல் - தியாகம் இரண்டையும் வெகு சிறப்பாக காட்சிப்படுத்தினார் . அடியேனின் பார்வை என்னவெனில் , காதல் மன்னன் என்ற பட்டத்திற்கு இணையாக பெண்பால் பட்டம் இருந்தால் தயங்காமல் தேவிகா விற்கு சூட்டலாம் [ நிச்சயம் காதல் மன்னி என்ற பட்டம் வழங்க முடியாது என்பதால், குழப்பத்தில் இருந்து தப்பித்துக்கொண்டனர் ரசிகர்கள்] ஆரம்பத்தில் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் ஜெமினியை கையாண்ட தேவிகா பாத்திரம் மெல்ல மெல்ல காதல் வலையில் விழுவதான சித்தரிப்பு. பாதி காதலில் வீழ்ந்த நிலையில்பெண், நாயகன் ஜெமினியை முற்றிலும் கன்னியின்- கண் [ணி] வெடியில் வீழ்த்திய வித்தகம் காட்டும் தேவிகாவின் நடிப்பை எழுதி விளக்க முடியாது.[ மெல்ல மெல்ல அரும்பும் காதலைப்பார்க்க மீண்டும் 1960 களுக்குள் செல்ல வேண்டியுள்ளது. இது போன்ற நளினங்கள் இன்றைய படங்களில் மருந்துக்குக்கூட அமைக்கப்படுவதில்லை]. பலதரப்பட்ட உணர்வுகளின் தேவைகளுக்கான பாடல்கள் இயல்பாக அமைக்கப்பட்டிருந்தது இப்படத்தின் தனிச்சிறப்பு , இதை கவனமாக நிறைவேற்றிய சகாப்த நாயகர்கள் என்றென்றும் போற்றுதலுக்குரியவர்கள்.. இன்னபிற சகாப்த சிறப்புகள் வரும் பதிவுகளில்.
அன்பன் ராமன் மதுரை .
Dear Prof
Its true ,CVS really brought life to the songs ,The tradition continued with CVR and also Chakravarthy .
Similarly KD-MM combination forced him to think differently too with their contribution .
There was a hectic healthy competition between creative and executive sides , KD MSV singers on one side and CVS Vincent/Sundaram =Actors on other side .
I feel the golden songs are thus came into being with each side motivating the other side to come up differently for each occasion , so we were benefited because of their competition to prove better than the others .
I have not mentioned any choreographer because i do not see there were any .Forgive me if i am wrong
best Regards
vk
Dear Mr V K, I need to furnish a detailed response. Well , there has never been a dearth of Choreographers in Tamil filmdom. Remember - Uthamaputhiran ; 'yaaradee nee Mohini' dance by Sivaaji Ganesan -Helen and troupe. Hiraalaal was the choreographer. LATER WE HAVE HEARD NAMES- CHINNI SAMPATH, THANGAPPAN,PASUMARTHI KRISHNAMOORTHY, and a host of others. All their compositions were unobtrusive and hid themselves behind the grandeur of lyric and orchestration. Recall the songs 'enna paarvai, anubavam pudhumai, viswanathan velai venum, nenjaththai alli, malarendra mugam' -- all from kaadhalikka neramillai and composed by K.Thangappan. also Thangappan was another "aasthaanam" for CVS THEY DID NOT SET VULGAR HIP MOVEMENTS NOR ANY SUGGESTIVE FOREARM SWEEPS to make a song impactful . Yes, they had the fodder of graceful lyric and robust orchestration to lean on . They had to oblige the lyric and convey its content through articulate elegance instead of nasty juxtaposed hip swings of genders. No wonder we derive freedom to feel the absence of choreographers.
Thanks for the opportunity . K.Raman Madurai
Dear Prof
I did not mean to say TFM lacked choreographers ,but raised my doubt on CVS films .You mentioned Thangappan master for KN .
But i feel its CVS/Vincent's imaginations in CVS movies .I may be wrong .
best Regards
vk
Dear Mr V K,
I cannot for a moment imagine that you made any wrong statement. ALSO YOU KNOW that I hold a mammoth placard for CVS , VINCENT -SUNDARAM team. Even conceding that these people made their presence felt, we [ rather I] need to be truthful to recognize the weight of choreography in a song sequence. In ooty varai uravu, the dance movements though very minimum were prescribed by Sridhar himself , as the they had to picturise the song in that locale [ choreographer was away]. You accord "larger than life" image to CVS , VINCENT -SUNDARAM even for song sequences- more in appreciation. My sentiment is choreographers of those times did not seek publicity by unnecessary body movements from screen artistes. Nothing more. Regards K.Raman Madurai.
Dear Mr V K,
I cannot for a moment imagine that you made any wrong statement. ALSO YOU KNOW that I hold a mammoth placard for CVS , VINCENT -SUNDARAM team. Even conceding that these people made their presence felt, we [ rather I] need to be truthful to recognize the weight of choreography in a song sequence. In ooty varai uravu, for 'poo maalaiyil oru malligai song,the dance movements though very minimum were prescribed by Sridhar himself , as the they had to picturise the song in that locale [ choreographer was away]. You accord "larger than life" image to CVS , VINCENT -SUNDARAM even for song sequences- more in appreciation. My sentiment is choreographers of those times did not seek publicity by unnecessary body movements from screen artistes. Nothing more. Regards K.Raman Madurai.