ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -85  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
14/09/2020 11:51 am  

அன்பர்களே,

 நமது தொடர் சுறுசுறுப்பு குன்றியதாக தோன்றினாலும் விறுவிறுப்பு நிறைந்ததாக அமைய வேண்டும் . அப்படி பார்க்கும் போது பல தரப்பட்ட தகவல்களை அவ்வப்போது இழையவிடுவது நல்ல சுவை ஊட்டும் என்று கருதுகிறேன். எனது முந்தைய பதிவின் [ 84 ] -பதிலிருப்பாக , அன்பர் வி. கே  ஒரு கோரிக்கை வைத்துள்ளார் . அதில் முக்கியமாக அந்தக்கால விமரிசனங்களை பற்றியும் வினா எழுப்பி உள்ளார். நிச்சயம் அவை குறித்த எனது நினைவுகளை பதிவிடுகிறேன்.

ஒன்று எனது பார்வையில் பளிச்சிடுகிறது.

அன்றும் இன்றும் என்றும் M S V  என்ற இடி முழக்கங்கள் காட்சி ஊடகங்களில் அடிக்கடி வெளிப்பட்டாலும் , அச்சு ஊடகங்களைப்பொறுத்தவரை அன்றும் இன்றும் M S V  என்ற ஆளுமை என்ற ஒன்று இவர்கள் கண்களில் படாத மாதிரி  கடந்து போய்  விடுவதை க் காணலாம் . இப்போதும் கூட ஒரு தமிழ் நாளிதழில் அன்றாடம் 75-80 காலத்திய அல்லது சற்று பிந்தைய கால படங்கள் குறித்த விமரிசனங்கள் வெளியாகின்றன. அவை தற்போதைய பார்வை என்பது தெளிவாக உள்ளது. ஆனால், அவற்றில்  M S V  இசையமைத்த படங்கள் இடம் பெறும் போது எந்த பாடலையும் போற்றுவதோ, பாராட்டுவதோ கிடையாது. இதனால் இசைக்கோ , M S V க்கோ பாதிப்பு இல்லை. ஒன்று தெரிகிறது . சொந்த சுவைகள் விமரிசனங்களை ஆக்கிரமிக்கின்றன ; மேலும் ஆழ்ந்த பார்வை கொண்டு ஆய்வு செய்யப்படவேண்டிய  தகவல்கள் ,மேலோட்டமாக கடந்து செல்லப்படுவது யதார்த்தம். இது உணர்த்துவது என்ன எனில் தரமான விமரிசகர்கள் களத்தில் தென்படவில்லை என்பதே. தரமற்றவர்களைப்பற்றி ஏன் எழுதிக்கொண்டிருக்கிறாய் என்போருக்கு : இதை நாம் தெளிவாக உணர்ந்து கொண்டால் , எவற்றைப்புறம் தள்ளவேண்டும் என்ற தெளிவு பிறக்கக்கூடும் என்ற ஒரு அற்ப ஆசையில் தான் .

சரி நமது பணிக்கு வருவோம் .

நெஞ்சில் ஓர் ஆலயம் ஈட்டிய வெற்றிக்குப்பின்னர் , படத்தை வெளியிட விரும்பாத விநியோகஸ்தர்கள், நிச்சயம் வீட்டிற்குள்ளாகவாவது அசடு  வழிந்திருப்பார்கள். ஆனால் தயாரிப்பாளர்கள் , ஸ்ரீதரை நோக்கி படையெடுத்தார்கள். அப்படி அடுத்தடுத்து வெளியான  இரண்டு முத்திரைப்படங்கள் “போலீஸ் காரன் மகள்” ,  மற்றும் “சுமைதாங்கி" . இரண்டும் கருப்பு வெள்ளையில் வெளிவந்த சீரிய கதை அம்சம் கொண்ட தரமான படங்கள். வின்சென்ட் சுந்தரம், -விஸ்வநாதன் ராமமூர்த்தி இணைகள் படத்திற்கு வலு சேர் த்தன. ஒரு பொதுப்பார்வை வைத்தால் , எனது முடிவு --சுமைதாங்கியில்  இயக்குனரும் , போலீஸ்காரன் மகளில் நடிப்பும் முன்னிலை வகித்தன என்பதே .ஆம் போலீஸ்காரன் மகளில், போலீஸ் வேடத்தில் சஹஸ்ரநாமம் ஆழ்ந்த முத்திரையை பதித்திருந்தார். அவருக்கிணையாக , விஜயகுமாரியும் முத்துராமனும் [ தங்கை , அண்ணன் பாத்திரங்களில் ] சிறப்பாக சோபித்தனர். ஒளிப்பதிவு வித்தைகளும் , விந்தைகளும் அதிகம் இடம் பெறாத ஒரு ஸ்ரீதர் படம் “போலீஸ்காரன் மகள்” தான் என்றே சொல்லி விடலாம். அதாவது இதுபோன்ற தேவைகள் இல்லாமலே படத்தை ஸ்ரீதர் அழகாக இயக்கி இருந்தார். அந்த ஆழ்ந்த கதைக்கு வலுவான நடிப்பும் , பாடல்களும் பிரதானம் என்பதை இயக்குனர் சிறப்பாக நிறுவியிருந்தார்.  ஓரிரு பாடல்கள் நீங்கலாக , ஏனைய சோகம் இழையோடும் அற்புதங்கள். [ இந்த மன்றத்தில் ஓடி வரும், கண்ணிலே நீர் எதற்கு - இரண்டும் வெவ்வேறு வகை துயரங்கள் ]. ‘ஆண்டொன்றுபோனால்’ பாலாஜி ஒரு PLAY BOY என ரசிகர்களுக்கு [ஆம் ரசிகர்களுக்கு மட்டும்] உணர்த்திய அந்தக்காலத்திய SWIMMING POOL பாடல். அந்தப்பாடலில் வரும் இடை இசை MSV எந்தக்காலத்திலோ தமிழ்ப்பட பாடல்களை வேறு களத்திற்கு உயர்த்தியவர் என்பதை பட்டவர்த்தனமாக அறிவிப்பதைக்காணலாம். இது மட்டுமா 'பொன்னென்பேன் , சிறு பூவென்பேன் ' என்ற தேவகான ப்பாடல்  இதே படத்தில் தான். இதை MSV இடம் விளக்கிய ஸ்ரீதர் , இந்தப்பாடல் தம்பூரா மீட்டுவதைப்போல மென்மையாக இருக்கவேண்டும் என்றாராம். 

எதைக்கேட்டாலும் இதோ என்று தரக்கூடிய ராட்ஷசன் அல்லவா MSV. அற்புதமாக வடிவமைத்திருந்தார் இந்தப்பாடலை. இப்படி எல்லாப்பாடல்களுக்கும், MSV, எஸ். ஜானகியை [பெண்குரலுக்கு] பயன் படுத்தியதை இங்கே அழுத்தமாக பதிவிடுகிறேன் . ஒரே படத்தின் அனைத்து பாடல்களையும், ஜானகியின் குரலிலேயே பதிவிடவேண்டும் என்று   [அதுவும் 1962 ல் ] தேர்வு செய்த முன்னோடி MSV தான் .

 "சுமை தாங்கி " படத்தில் நடிப்பு இல்லையா? என்று சிலர்  வினவக்கூடும். நிச்சயம் இருந்தது. கூடவே இயக்கமும் முன்னிலை வகித்ததை காட்சி அமைப்புகளில் காணலாம். இப்படத்தின் சுமைதாங்கிக்கால்கள் ஜெமினி கணேசனும் , இயக்குனர் ஸ்ரீதரும் தான்.                                                                                      

சரி இதைப்பற்றிய வேறு சிறப்பான முத்திரைகள் சில இதோ.

ஜெமினி , தேவிகாவை காதலிப்பதற்காகவே TUITION வகுப்புக்கு செல்வதாக கதை அமைப்பு. இருக்குமிடத்தில் இருந்தே [ வாத்தியாருக்கு தெரியாமல் ] ஜெமினி, தேவிகாவிற்கு  கண்ணால் காதல் வலை வீசுவார். முதலில்பிடி படாத தேவிகா மெல்ல காதல் வயப்படுவதாக நடித்திருப்பதை பார்த்துதான் ரசிக்க வேண்டும் சொல்லால் விளக்க முடியாது. அதுவும் " ராதா ராதா" பாடலுக்கு . சில வினாடிகள் முன் - ஐயோ இருவரும் கண்ணால் பேசிக்கொள்வதை , அற்புதமான   ஒரு SOCIAL DISTANCING  LOVE  என்று தான் சொல்ல முடியும். இந்தக்காட்சியில் தேவிகா முகபாவங்களை வெகு சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படத்தின் கல்யாண காட்சியில்  [ சித்ராலயா] கோபு , கோவை செழியன் மற்றும் சித்ராலயா குழுவினர் சிலர் அவர்தம் இளமைத்தோற்றங்களில் உலவுவதைக்காணலாம்..

பாடல்கள் மீண்டும் மெல்லிசை மன்னர்களின் கோட்டை என்பதை நிறுவிய படம். ராதா ராதா , ஓ ஓ ஓ  மாம்பழத்து  வண்டு  இரண்டும் ரம்மியம். மனிதன் என்பவன் , மற்றும் மயக்கமா கலக்கமா இரண்டும் மனித மனங்களை  எப்போதும் ஊக்கம் கொள்ளச்செய்வன. படத்தின் போக்கும் இறுதிக்காட்சியும் அக்காலத்திய புதுமைகள் மட்டும் அல்ல ஸ்ரீதர் மாற்றுக்கோணங்களில் சிந்திக்கிறார் என்று பலரையும் பேச வைத்த புதுமைகள். இவ்வாறாக ஸ்ரீதரும் மெல்லிசை மன்னரும் படத்துக்குப்படம் புதிய உயரங்களை எட்டி என் போன்ற ரசிகர்களை அடிமைப்படுத்திவிட்டனர் என்று உணர்கிறேன்.

மேலும் வளரும்                                  அன்பன் ராமன்  மதுரை .


Quote
Share: