ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 84  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
12/09/2020 11:27 am  

மெல்லிசை   பிடித்ததா அன்றி பீடித்ததா ?

மேலே எழுப்பப்பட்டிருக்கும் வினா, வினா அல்ல, அதுவே விடை என்பதே அந்நாளைய 16 வயதுக்கூட்டத்தினர் ஏகோபித்த மன நிலை என்றே குறிப்பிடலாம். அந்த நாட்கள்  மிகவும் இறுக்கமானவை. இன்றுபோல் அந்நாளில் 16 வயது டிக்கெட்டுகள் எந்த களத்திலும் , சினிமா குறித்தோ அவற்றின் பாடல்கள் குறித்தோ வெளிப்படையாக விவாதிக்க  முடியாது.   மேலும் விவாதிக்கும் அளவிற்கு  பலதரப்பட்ட பாடல் பண்புகள் குறித்த பரந்த கண்ணோட்டமும் , இசை குறித்த எந்த தகவலையும் எளிதில் பெறமுடியாது.

ஆயினும் மெல்லிசை மன்னர் என்று பின்னாளில் பட்டம் பெற்ற விஸ்வநாதன் -ராமமூர்த்தி  தான் அந்நாளைய கனவு  நாயகன். என்னடா வி-ரா வை கனவு நாயகன் என்று ஒற்றைப்படையில் குறிப்பிடுகிறாயே என்கிறீர்களா? ஆம் அந்நாளில் வி ரா என்பவர் ஒரே நபர் என்று எண்ணிய பலர் உண்டு . ஏனெனில் அநேக இசை அமைப்பாளர்கள் தனி மனிதர்கள் என்பதாலும் பத்திரிகையில் பட விமரிசனங்களில் கூட வி-ரா வின் புகைப்படம் வந்ததில்லை. இது போதாதா எங்களின் அதீத கற்பனையை அவிழ்த்துவிட?

பின்னாளில்  திடீரென , வி-ரா சிறிய ஸ்டாம்ப் அளவில் புகைப்படம் ஆனந்த விகடனில் [கிட்டத்தட்ட இருட்டில் எடுத்தது போல ஆனால் கோட் -சூட் அணிந்தவர்களாக.] இப்படி தான் நமது நாயகன் ஒருவர் அல்ல இருவர் என்று தெளிவுபட்டது . சரி அதற்கும் நமது தொடருக்கும் என சம்பந்தம் என்கிறீர்களா ? ஆம் மனத்திரையில் ஒரு மகத்தான சாதனையாளரை நினைந்து பின்னோக்கிப்போகும்போது எல்லையில்லா உணர்வுசார்ந்த தகவல்களைப்புறந்தள்ளிவிட்டு சம்பிரதாயமாக எழுதிக்குவிட்டுப்போக இயலாது.அதிலும் குறிப்பாக   , திரைப்பாடல்கள் தொடர்பானவை முற்றிலும் நம் வாழ்வுடன் எளிதில் ஒன்றிவிடும் பண்புடையன. எனவே தான் அந்த கால கட்டத்தில் நமது தொடர்புகள் நிச்சயம் நமது இளமைக்கால நினைவுகளை மீட்டெடுப்பன. எனவே இதுபோன்ற எளிய விலகல்களை அன்பர்கள்  பொறுத்தருள வேண்டுகிறேன். 'பதி பக்தி, புதையல், பாகப்பிரிவினை'  என்று வரிசையாக இசையில் முத்திரை பதித்த வி-ரா , பாவ மன்னிப்பு' படத்தில் மிகுந்த உயரத்தை எட்டியதுடன் பி.பி ஸ்ரீனிவாஸ் என்ற மென்குரலையும்,புகழேணியின் உச்சியில்  அமர்த்தினர்.  

பாவமன்னிப்பு ஏற்படுத்திய தாக்கம் அனைவரும் அறிந்ததே. எனவே ஸ்ரீதர் போன்ற   ஒரு இசை ரசிகர் நிச்சயம் ஈர்க்கப்பட்டிருப்பார் . எனவே நெஞ்சில் ஓர் ஆலயம் வி-ரா வை சித்ராலயா நிறுவனத்திற்கு அழைத்துவந்தது என்றே சொல்லலாம். அனைத்து பாடல்களும் சோகச்சுமை நிறைந்தவை [ ஒரு வகையில் 'முத்தான முத்தல்லவோ' பாடலும் கூட வரவிருக்கும் சோகத்திற்கு அஸ்திவாரம் தான்]. 

பாடல் காட்சிகள் தான் சோகம் எனினும் பாடல்கள்  அனைத்தும் சுகம் . ஒவோன்றும் ஒரு தனி ராகம் , ரகம் மற்றும் இசை வீச்சில் மகத்தான கட்டமைப்பு என்று 1962 ல் ஒரு இசைப்புரட்சி.பாடல்கள் ஒரு படத்தை வலுவாக தாங்கிப்பிடிக்கும் என்பதற்கு நெஞ்சில் ஓர் ஆலயம் ஒரு சாட்சி. கசக்கி பிழிந்து வேலை வாங்குபவர் என்று ஸ்ரீதர்     [ மற்றும் எம் ஜி ஆர் ] பற்றி எம் எஸ் வி கருத்து தெரிவித்திருக்கிறார். ஆனாலும் தீஞ்சுவை ரசத்தை அளவின்றி வழங்கி திரை இசையி ல் ஒடுக்க மற்றும் ஒதுக்க  முடியாத ஒரு மாபெரும் ஆளுமையாக விஸ்வநாதன் , விஸ்வரூபம் எடுத்தார்  என்பது 1962 லேயே நிதர்சனம். பிறகென்ன - ஸ்ரீதர் படங்களில் விஸ்வநாதன் என்பது எழுதப்படாத சட்டம் என்ற நிலை உருவானது. இந்த பந்தம் சித்ராலயா என்ற அமைப்பைத்தாண்டி ஸ்ரீ- விசு இடையே தொடர்ந்தது . அவையும் கூட மறக்கவொண்ணா  பாடல்களை தவறாது வழங்கி தொடர்ந்து சரித்திரம் படைத்தன.

மேலும் தொடர்வோம்.     அன்பன்  ராமன்,    மதுரை 


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 103
12/09/2020 5:45 pm  

Dear Prof
அந்தக் கால VR ரசிகர்களைப் பற்றி உங்கள் மூலம் அறிய மிகவும் மகிழ்ச்சி
நீங்கள் கூறியபடி அப்பொழுது சினிமா சினிமா சங்கீதம் சினிமா காரன் அனைத்துமே மறுக்கப்பட்ட சலுகைகளாகவே இருந்து வந்துள்ளது .
அப்படியிருந்தும் உங்களைப் போன்ற அந்தக்கால இளைஞர்கள் வி ரா மேல் வைத்திருந்த அன்பு வியக்கத்தத்தக்கது
1950 களின் இறுதியிலேயே ஒரு இசை அமைப்பாளர்களுக்கு மன்றம் அமைந்த விந்தை வி ரா விற்கே உரித்தானது
நீங்கள் வி ரா வைப் பற்றி எழுதுகையில் அன்றைய ரசிகத்தன்மை விமர்சனங்கள் பற்றியும் எழுதப்பட்டால்
பிற்கால மெல்லிசை மன்னர்கள் எப்படி குறிக்கோளை நோக்கி நடந்தார்கள் என்பது எங்களைப்போன்றோர் அறிய ஏதுவாய் இருக்கும்
PBS ஏற்கனவே பாடியிருந்தும் .புகழ் ஏணியில் ஏற பாவ மன்னிப்பு உதவியது
ஸ்ரீதர் உறவு ஏற்பட அவர் கம்பெனியின் முந்தைய இசை அமைப்பாளரும் ஒரு காரணமே
நன்றி

best Regards
vk


ReplyQuote
Share: