ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் - 81  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
08/09/2020 6:57 am  

அன்பர்களே

திரு என் எஸ் கிருஷ்ணன் ஆலோசனை மற்றும் ஆசியுடன் துவங்கிய வி-ரா இணைப்பு தங்களின் இசைப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி வந்ததுடன் , பலவகையிலும் தங்கள் ஆளுமைதனை செம்மையாக பதிவிட்டுக்கொண்டு முன்னேற்றம் கண்டனர். அந்தக்கால கட்டம் தமிழ்த்திரை யின் இடைக்காலம் - transition பகுதியாகவே அமைந்தது. அதாவது நாட்டுப்பற்று, அடிமைத்தளை எதிர்ப்பு, ராஜாராணி , ஜமீன் சாகசங்கள் , ஆங்கிலேய எதிர்ப்பு போன்ற களங்களிருந்து , சமூக அமைப்புகளை முன்னிறுத்தும் கதைகளை நோக்கி நகரத்துவங்கிய சூழலில் பயணித்தன. எனவே பண்டைய புனித அடையாளங்களாகிய இலக்கண மரபு வசனங்களும் , எளிமையான ஆடை அமைப்புகளும் , பாடல்களும் நிறைந்த ஓர் அமைப்புகளாக திரைப்படங்கள் வடிவெடுத்து வேறு  வகை ரசனை களுக்கு உரமிட்டன . மாறிவரும் யதார்த்தங்களை வலிமையாக பற்றிக்கொண்ட வசன ஆக்கங்கள், இயக்கங்கள், இசைஇயக்குனர் போன்றோர் பெரும் வரவேற்பைப்பெறத்துவங்கினர்.  இந்தவகையில் ஒரு புறம் ஸ்ரீதர்,கே எஸ் கோபாலகிருஷ்ணன், ஆரூர் தாஸ் போன்றோரின் சமூகக்கதைகள் தமிழ் சினிமாவை வேறு களத்திற்கு  கொண்டு சென்றன. அந்த நிலையில் கூட இயக்கமும் , குணச்சித்திர வேடங்களும், முன்னணி நாயகியர் பலரும் தெலுங்கு மொழியினர் வசமே இருந்தது. இசைத்துறையில் கூட பாடகர்களும் இசையமைப்பாளர் பலரும்  தெலுங்கு மொழியினராகவே இருந்தனர். இதற்கு ஒரு முக்கிய காரணம் - பெரும் தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களிடம் இருந்ததும், தெலுங்கு உள்ளிட்ட பிற தென்னிந்திய படங்கள் சென்னையில் தயாரிக்கப்பட்டு வந்ததும் ஆகும் .

இத்துணை போட்டிகள் நிறைந்த சூழலில் தான் வி -ரா தங்களை நிரூபித்து பெரும் ஆளுமைகளுடன் போட்டியிட்டு தொழில் ரீதியிலான திறமைகளை குறைவில்லாமல் வழங்கி , நான் அடிக்கடி கோடிட்டு க்காட்டும் , ஆஸ்தான கட்டமைப்புகளை முற்றிலும் தகர்த்தனர். இதன் காரணமாக சுதந்திரமாக ப் பணிபுரியும் திறமைகளுக்கு திரை உலகம் வழி விட வேண்டியதாயிற்று. .இதே போக்கு திரைத்தயாரிப்பின் பிற திறமைகளான ஒளிப்பதிவு , நிழற்படம் , விளம்பரம் , கலை இயக்கம் என விரிவடைந்து ஆரோக்கியமான புத்தாக்கங்களுக்கு வழி கோலியது . ஆரம்பகாலத்தில் சில தயாரிப்பாளர்கள் மட்டுமே வி ரா வுக்கு வாய்ப்பளித்தனர். ஆனால் ஒருகட்டத்தில் வி ரா இல்லாமல் தமிழில் படம் தயாரிப்பது வர்த்தக ரீதியாகஅவ்வளவு   எளிதல்ல என்ற நிலை தோன்றியது. பலர் அதற்கு முன்னரே சுதாரித்துக்கொண்டனர் என்பது அவர்களின் தொழில் குறித்த மதிப்பீடுகளுக்குச்  சான்று எனக்கொள்ளலாம் . ஆனால் இந்த நிலை ஒரு சில படங்களிலேயே வாய்த்துவிட்டதா எனில் இல்லை என்றே சொல்ல வேண்டும். அன்றைய கால கட்டத்தில் தயாரிப்பாளர்கக்ள் எதையும் பல முறை யோசித்து சீர் தூக்கி பின்னர் தான் முடிவெடுப்பர். அவர்களை மன  மாற்றம் செய்வது எளிதன்று.மேலும் ஒவ்வொரு கலைஞரையும் ஒரு கட்டுக்குள் வைத்து , உரிய ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகளை மாத்திரம் ஏற்பாடு செய்து தருவர். இதனால்ம், முதலாளி என்பவர் உண்மையிலேயே மரியாதைக்குரியவராக இருந்தார். இத்துணை அமைப்பு சார் நியதிகளுக்கும் ஈடு கொடுத்துதான்     வி - ரா தங்களை நிலைப்படுத்திக்கொண்டதுடன், இசையில் மெல்ல புதுமைகளையும் புகுத்த மெல்ல அடிஎடுத்து வைத்தனர்.  இதனை 1950 களில் வெளிவந்த வி-ரா வின் படப்பாடல்களில் காணலாம். ஆம் சுத்த ராக அடிப்படையில் பாடல் வரிகளும் , இசையில் ஒரு சில புதிய கருவிகள்       [குறிப்பாக போங்கோ -bongo ] பயன் படுத்திய முன்னோடிகள் இவர்களே என்பதை நன்கு உணரலாம்.. இவ்வாறாக இவர்கள் இசை சாம்ராஜ்ஜியத்தை நிறுவிக்கொண்டிருந்த சூழலில் கவிஞர் கண்ணதாசன் சில படங்களை தயாரித்து அவற்றில் வி ராவின் இசைக்கோலங்கள் வெளிப்பட வடிகால் அமைத்தார் என்ற அளவிலும் கவிஞர் இவர்களில் திரை உலக வாழ்வில் மிகுந்த சிறப்பான இடம் பிடித்தார். அதே சமயம் வி ரா வும் தங்கள் மீது எந்த தயாரிப்பாளரும் வைத்த நம்பிக்கை  சிதையாமல் காப்பாற்றி அற்புதமாக கரை சேர்ந்து வெற்றிக்கொடி நாட்டி , பிற ஜாம்பவான்களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய சூழலை உருவாக்கினர்.                                   மேலும் வளரும்         அன்பன்   ராமன்      மதுரை.


Quote
M.R.Vijayakrishnan
(@v-k)
Member Admin
Joined: 2 years ago
Posts: 103
09/09/2020 2:48 am  

Dear Prof
மெல்லிசை மன்னர் ஒரு இசைக் கடல் என்பதில் அவரின் இசையை அறிந்தவர்கள் அனைவரும் ஒப்புக் கொள்ளும் உண்மையே.
உங்களின் கட்டுரை மெல்லிசை மன்னரை நோக்கி திரும்பி உள்ளது. இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்கள் வரும் என நம்புகிறேன்
நன்றி

best Regards
vk


ReplyQuote
Share: