ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -76 கோபு  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
06/08/2020 12:20 pm  

அன்பர்களே

தொடர்ந்து  திரு . கோபு அவர்கள் பற்றிய வேறு சில தகவல்கள். அவர் ஏதோ நகைச்சுவை பாத்திரங்களுக்கு வசனம் எழுதுபவர் என்று அவரின் வியாபகத்தை ,சுருக்கி விட முடியாது . ஆம் அவரின் ஆக்கங்கங்கள் திடைப்படங்களாக வெளி வந்து மேலும் அவருக்கு புகழ் சேர்த்தன. அவற்றின் துவக்கம் தான் "கலாட்டா கல்யாணம்" சிறிய நாடகமாக எழுதப்பெற்று , பின்னர் விரிவாக்கப்பட்ட திரைப்படமாக 1968 ல் திரு சி.வி ராஜேந்திரன் இயக்கத்தில் வெளிவந்து சக்கைபோடு போட்ட படம். ஆக திரை உலகில் கோபு கதாசிரியராகவும் புகழ் பெற்றார். எனினும் சித்ராலயா நிறுவனத்தில் தொடர்ந்தார்.  க. கல்யாணம் படத்தில் தான் சிவாஜி -ஜெயலலிதா ஜோடியாக நடிக்க ஆரம்பித்தனர். மீண்டும் ஒரு முறை ஜே தன்னை நிரூபித்தார். ஏகப்பட்ட நடிகர்கள் -அவர்களுக்கு ஜோடியாக மனோரமா , சச்சு ஜோதிலட்சுமி என்ற பட்டாளம். கிட்டத்தட்ட அனைவருமே ஏதோ ஒரு வகையில் நகைச்சுவை வேடம் ஏற்றனர் . முதல் படத்தில் இத்துணை கலைஞர்களை பயன்படுத்திய கோபு -சி வி ஆர் பாராட்டுக்குரியவர்கள். திரு ஸ்ரீதருடன் எவ்வளவு   நெருக்கமாக செயல் பட்டாரோ அதே அவ்வளவு ஈடுபாட்டுடன் திரு சி விஆ   ர்   உ டனும் பணிபுரிந்தார் . மேலும் திரு கோபுவின் பல ஆக்கங்களும் திரு சி வி ஆர் இயக்க த்தில்  வெளிவந்தன. நில் கவனி காதலி , வீட்டுக்கு வீடு,  அனுபவம் புதுமை, சுமதி என் சுந்தரி போன்ற கோபு வின் ஆக்கங்களை இயக்கியவர் திரு சி வி ஆர்  அவர்கள்.    இந்தப்பயணத்தின் ஊடே கோபு அவர்களே இயக்குனராக பரிணமித்தது காசே தான்  கடவுளடா, அத்தையா மாமியா போன்ற படங்கள் வாயிலாக. இன்றளவும் ஸ்ரீதரின் நினைவோடு உலா வருபவர். பழகுவதற்கு மிக இனிமையானவர். சினிமாத்தனம் இல்லாத சினிமாக்காரர் . நமது தள அன்பர்கள் எனது கூற்றை நேரடியாக உணர்ந்தவர்கள். இவை அனைத்தையும் தாண்டி எம் எஸ் வி அவர்கள் மீது நீங்காத  அன்பும் மதிப்பும் கொண்டவர் திரு கோபு அவர்கள்.. இனி நாம் பேச இருக்கும் ஆளுமை குறித்து அன்பர்கள் அநேகமாக முடிவு செய்திருப்பார்கள் என்றே எண்ணுகிறேன்.  மீண்டும் விரைவில் தொடர்வோம் ,  அன்பன்  ராமன்   மதுரை  


Quote
Share: