ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -75 " சித்ராலயா கோபு "  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 2 years ago
Posts: 143
01/08/2020 11:16 am  

அன்பர்களே

நமது நாட்டில் தற்போது உலவி வரும் 'கொரோனா' நமது முந்தைய பதிவுகளில் பலவற்றை கபளீகரம் செயது விட்டது போல் திடீரென ஓர் நாள் நமது தளம் முடங்கிவிட்டது. தள மேலாளர்கள் கடும் முயற்சிக்குப்பின் 'கொரோனா ' வின் கோரப்பிடியிலுருந்து நமது பதிவுகளை மீட்டெடுத்தனர். ஆயினும் கொரோனா பாதிப்பில் இருந்தவர்கள் மீண்டும் இயல்பு நிலையை அடைய சில காலம் தேவை. எனவே இதை நாம் பொறுமையுடன் கடந்து பெருமையை கைக்கொள்வோம். ஆகவே புதிய பதிவுகள் வெளியிடுவதில் உள்ள இடர்ப்பாடுகளை அன்பர்கள் பொருத்தருள்வார்கள் என்றே  வெகுவாக நம்புகிறோம்..  

இன்றைய நமது பதிவின் நாயகன் திரு.கோபு என அறியப்படும் , சித்ராலயா கோபு என அழைக்கப்டும் திரு T .A .சடகோபன்  [திரு ஸ்ரீதர் அவர்களின் வலக்கரம் ] அவர்களே.         திரு ஸ்ரீதர் என்ற திரையுலக ஜாம்பவான் குறித்த எந்தப்பதிவும் , திரு கோபு அவர்களை த்தொடாமல் முற்றுப்பெறாது. (ஆகா, இவன் தொடரை முடிக்கப்போகிறான் என்று யாரும் குதூகலிக்க வேண்டாம். நான் உங்களை அவ்வளவு எளிதில் விடுவதாக இல்லை. ஏனெனில் பேசுவதற்கு இன்னும் நிறைய உள்ளது; மேலும் திரு எம் எஸ் வி பற்றிய  நமது பார்வை இன்னும் வெளிப்படவே இல்லை.) 

திரு கோபு அவர்களும் திரு. ஸ்ரீதர் அவர்களும் பள்ளித்தோழர்கள் [ஐந்தாம் வகுப்பு முதல்] இந்த செங்கல்பட்டு இரட்டையர் தமிழ் சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் , தொடர்ந்து பேசப்படுகிறது என்பது மட்டும் அல்ல அவர்களின் செயல்பாடுகள் திரைப்படத்தை கட்டமைப்பதில் ஒரு பெரும் கெளரவ  எல்லை கொண்டது. இன்றைய சினிமாத்தனங்களின் சுவடுகளைக்கூட இவர்களின் ஆக்கங்களில் காண முடியாது.திரு ஸ்ரீதர் ஒரு இயக்குனர் என்பதால் பெயர் பட்டியலில் அவரை நாம் தெளிவாக கண்டதுண்டு; அனால் திரு கோபு அவர்களின் பெயர் தெளிவாக இடம் பெற்ற ஸ்ரீதர் படங்கள் பல.

இவர்கள் சில படங்களில் வினாடிகள் தோன்றி                [ அக்காலத்திய Alfred Hitchcok போல ] மறைவதை நாங்கள் கண்டுபிடித்து விட்டிருந்ததால், என்போன்ற அன்றைய கல்லூரி மாணவர்கள் இவர்களை நன்றாக பார்த்து விட வேண்டும் என்று சினிமா தியேட்டரில் முன்னோக்கி சென்று பார்த்துக்கொண்டே இருந்ததை [சந்திர மண்டலத்துக்கு ராக்கெட்டை ஏவிய விஞ்ஞானிகளைப்போல] நினைத்தால் சிரிப்பு வருகிறது.  அவ்வளவு ஈர்ப்பு எங்களுக்கு -ஸ்ரீதர் மற்றும் கோபு மீது . இதெல்லாம் எந்தக்காலத்தில்? -1960- 63 கால கட்டத்தில்.  ஆம் பலரும் நடிகர்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த சூழலில் எங்கள் நண்பர்கள் [சுமார் 3, 4 பேர் ] இந்த ஸ்ரீதர்- கோபு ஆக்கக்குழுவை நன்கு அறிந்து கொள்ள  மிகவும் முயற்சிசெய்ய வேண்டி இருந்தது. ஆனால் நாங்கள் தயங்கவோ துவளவோ இல்லை; ஏனெனில் இவர்கள் மாறுபட்ட அமைப்புகளில்  படத்தின் போக்கை நிறுவுகிறார்கள் என்பது 'கல்யாண பரிசு " முதலே எங்களது எண்ணத்தில் ஆழ்ந்து வேரூன்றி விட்டிருந்தது. நான் பல சந்தர்ப்பங்களிலும் தெளிவுபடுத்தி இருப்பதைப்போல , எங்கள் நட்பு வட்டம் சிறியது ஆனால் ஆழ்ந்து திரைப்படங்களை ப்பார்க்கும் பயிற்சியை ஸ்ரீதர் படங்களிலிருந்தே வலுவாகப்பெற்று விட்டோம். ஆனால் எப்போதும் போல அந்த 4 நண்பர்கள் பல ஊர்களில் பிரிந்து போய்விட , நான் தனிமைப்பட்டேன். எனினும் எனது பார்வையில் திரைப்படக் கண்ணோட்டம் மாறவே இல்லை. 

இவ்வளவு ஆழமான எனது நிலைப்பாட்டிற்கு நான் ஸ்ரீதர்- கோபு ஆளுமைகளுக்கு  நன்றி சொல்லவேண்டும்.  ஏன் ? நான் என் நினைவுக்கெட்டிய காலத்தில்  மொத்தம் சுமார் 5, 6 படங்கள் பார்த்திருந்த நிலையில் கல்யாண பரிசு படத்தை பார்த்தேன் . நான் முன்னரே சுட்டியிருந்தபடி டைரக்ட் பண்றான் னா  என்ன  என்ற குடைச்சலும் , ஆற்றாமையும் மேலிட நண்பன் கனகசபை இடம் தஞ்சம் புகுந்தேன் எனினும் க. பரிசு கதைப்போக்கு மற்றும் காமெடி அமைப்புகள் வேறு ஒரு லெவெலில் இருந்ததாக உணர்ந்தேன்,; அந்த வயதில் விளக்கம் கேட்டிருந்தால் தெரியாது . நிச்சயமாக ஒரு புதுப்பாதையில் படம் பயணப்பட்டதை அறியமுடிந்தது. நண்பன் கனக சபையின் விளக்கம் திரைப்படம் பற்றிய என் கண்ணோட்டத்தை விரிவாக்கி இருந்தது.

அதன் பின்னர் பல படங்களை பார்க்க நேர்ந்தாலும் ஸ்ரீதர் -கோபு  இணை வழங்கிய கதையில் நகைச்சுவை  ஒரு உயர் பரிமாணம் கொண்டதாக என்னை ஈர்த்தது. திரு கோபு நகைச்சுவை என்பதற்கு அடையாளங்கள் உண்டு.. 1 காமெடி மிக யதார்த்தமானது . வலிந்து உருவாக்கப்பட்டதாக தோன்றாது..  2 நகைச்சுவை வசனம் எந்த கதா பாத்திரம் வாயிலாகவும் வெளிப்படும் .3. SPONTANEOUS எனப்படும் பளீர் வகையை சார்ந்தது. 4. ஒரு சொல்லை சற்றே மாற்றி திடீர் காமெடி ஆக்குவது. [ சிவகாமியை கேட்டால் சிவசாமியை , எனக்குத்தெரியாது என்று பதில் சொல்வது ] 5 எவர் உடல் அமைப்பையும்  விமரிசிக்காத மேம்பட்ட அணுகுமுறை  6. முன்னர் வந்த சொல்லை மீண்டும்  சொல்லி சிரிப்பை தூண்டுவது [ நான் அடிச்சிட்டு போடற செருப்பை எடுத்து நீ அடிச்சுக்கோ ]

இத்துணை உத்திகளையும் சரியான    இடம் பார்த்து அமைத்து படத்திற்கு சிறப்பு சேர்க்கும் வித்தகர் கோபு  ஸ்ரீதரின் ஆயுள் காலம் வரை அன்பு குறையாமல் நட்பின் இலக்கணமாய் ஸ்ரீதரோடு பயணித்தவர். அவர் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் உடையவன் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு [இவர்களைப்பற்றி எழுத] அமையும் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை.                    மேலும் தொடருவோம் .    

அன்புடன்     ராமன்   மதுரை


Quote
Share: