ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -74 [உதவி இயக்குனர்கள் ]  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
31/07/2020 2:02 am  

அன்பர்களே

இத்தொடரினுள் பல  தகவல்களை நான் அறிந்த வகையி ல் எழுதி வருகிறேன். ஸ்ரீதர் என்ற பெயருக்கு வலு சேர்த்த பலரின்  திறமைகளையும் வகைப்படுத்தும் போது , ஒரு பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டி யுள்ளது. ஆம் , எவற்றை மட்டுப்படுத்துவது என்ற எல்லைகளை வகுப்பதே பெரும் சுமையாகத்தெரிகிறது. ஆனால் ஒரு சிலரை நமது வசதிக்காக விட்டுவிடுவது பின்னாளில் நிச்சயம் நமக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தும் என  தெளிவாக தெரிகிறது. ஆகவே தொடர் வளர்ந்தாலும், இயன்றவரை தகவல்க ளை பதிவிடுவது என்பதே நேர்மையான அணுகுமுறை என்பதால் அன்பர்கள் பொறுமைகாத்து ,  இனி வரும் பதிவுகளை எப்போதும் போல கூர்ந்து கவனிக்க வேண்டுகிறேன்.  இந்தப்பதிப்பில் திரு ஸ்ரீதர் அவர்களின் உதவியாளர்கள்  தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்

பி..மாதவன் 

திரு ஸ்ரீதரின் உதவியாளர்களில் திரு. பி..மாதவன் முதன்மையானவர். அவர் அந்நாளய இயக்குனர் திரு டி .ஆர் .ரகுநாத் அவர்களிடம் உதவி இயக்குனராக திரையுலகில் அறியப்பட்டவர்.பின்னர். திரு ஸ்ரீதரிடம் [சித்ராலயாவின் ஆரம்பகால படங்களில்] இணை இயக்குனராக பணியாற்றி நன்கு அறியப்பட்டார் ஆனார் பின்னர் அவரும் தனித்து பயணித்து பல வெற்றிப்படங்களை தந்தார். பின்னர் எம் ஜி.ஆர் திரைப்படநகரத்தின் நிர்வாக இயக்குனர்மற்றும் மாநில திரைப்பட வளர்ச்சி குழுமத்திலும் நிர்வாக இயக்குனர் பதவிகளில்  பணியாற்றினார். மேலும் தேசிய திரைப்பட தேர்வு நிறுவனத்தில் [chairman of the National Film Awards].தலைமைப்பணியையும் ஏற்று செயல் பட்டார். 

திரு .என் சி. சக்கரவர்த்தி

நீண்ட கால சித்ராலயா உறுப்பினர்களில்  கண்டிப்பாக மறக்கமுடியாதவர்.ஆம் ஸ்ரீதரின் துணை இயக்குனர்களில் பழமையானவர். பின்னாளில் 'உத்திரவின்றி உள்ளே வா" உள்ளிட்ட 4, 5 படங்களை இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

சி வி ராஜேந்திரன்                                                                                                                                                      திரை உலகப்பிரபலங்கள் இவரை  "ராஜீ ' என்றே அன்பாக அழைப்பார்களாம்.

திருஸ்ரீதரின், இளைய சகோதரர் என்றே அறியப்பட்டவர். [உண்மையில் திரு. ஸ்ரீதரின் ,மாமன் மகன்].கிட்டத்தட்ட ஸ்ரீதர் என்ற ஆளுமையின் உதவியாளராகவே அறியப்பட்டாலும் , பின்னாளில் இணை இயக்குனர் என்று சித்ராலயா நிறுவனத்தின் அங்கீகாரத்திற்குப்பாத்திரமானவர் .1968-69 கால கட்டத்தில் 'கலாட்டா கல்யாணம், அனுபவம் புதுமை , நில் கவனி காதலி போன்ற வெற்றிப்படங்களை இயக்கியதுடன் , எண்ணற்ற வண்ணப்படங்களை இயக்கிய பெருமையையும் , நடிகர் திலகத்தின் 28 படங்களை வெற்றிகரமாக இயக்கிய பெருமையையும் ஒருசேரபெற்றவர். எனினும் தொடர்ந்து சித்ராலயா நிறுவனத்தின் ஆக்கங்களிலும் தொடர்ந்து பயணித்தார். தமிழக அரசின் கலைமாமணி விருதுபெற்றவர் மற்றும் பிற நிமயனங்களையும் தமிழக அரசு இவருக்கு வழங்கியது. நான் அறிந்தவரையில் ஈகோ எனும் அகம்பாவம் அறவே இல்லாதவர். ரொமான்டிக் காமெடி மற்றும் ரொமான்டிக் திரில்லர் வகை படங்களை தொய்வில்லாமல் எடுத்துச்செல்லும் வித்தகர். 

மா.பாஸ்கர்

ஸ்ரீதரின் துணை இயக்குநர்கள்   வரிசையில் நன்கு அறியப்பட்டவர். , நெஞ்சிருக்கும் வரை ,கொடிமலர், ஊட்டி வரை உறவு, அவளுக்கென்று ஒரு மனம் , சிவந்தமண் ,உத்தரவின்றி உள்ளே வா போன்ற தமிழ்   படங்களிலும் , சில ஹிந்தி படங்களிலும் பணியாற்றி உள்ளார்.பின்னர் எஸ் பி  முத்துராமன் அவர்களுடன் இனைந்து பணியாற்றியவர். திரைப்பட தணிக்கை துறையில் உறுப்பினர் ஆக தேர்வு செய்யப்பட்டார். சென்னை தொலைகாட்சி நிலையத்தில் [DDK ]  புற சிறப்பு உறுப்பினராக பதவி வகித்தார்.உலகப்புகழ் பெற்ற 20th century Fox நிறுவனத்தினரின் தயாரிப்பில் ஒரு  ஆங்கில மொழிப்படத்தின் II Unit இயக்குனராக தேர்வு செய்யப்பெற்று தமிழகத்திற்கு சிறப்பு சேர்த்தார். இது போன்ற பலர் ஸ்ரீதருடன் பணியாற்றி பின்னர் தத்தம் பாணியில் பயணித்து தமிழ் திரைப்பட உலகில் முத்திரை பதித்ததுடன் , தங்கள் ஆசானுக்கு புகழ் சேர்த்தனர். இந்த வரிசையில் நாம் திரு கோபு அவர்களை சேர்க்க முடியாது; ஏனெனில் ஸ்ரீதர் - கோபு இணை திரைத்தொடர்ட்புகளையும் தண்டி எல்லை இல்லாமல் நீண்டு பயணித்த ஒரு அற்புதம். எனவே கோபு அவர்களுக்கு ஒரூ தனித்த பதிவை தருவது நியாயம் மட்டுமல்ல தர்மமும் கூட. எனவே,  இந்தப்பதிவில்           நான் திரு. கோபு அவர்களை பற்றி பேசவில்லை  என் பதை அன்பர்களுக்கு பணிவோடு தெரிவித்துக்கொள்ளுகிறேன்.  மேலும் வளரும் அன்பன்  ராமன்  மதுரை


Quote
Share: