ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -73  

  RSS

K.Raman
(@k-raman)
Estimable Member
Joined: 1 year ago
Posts: 133
31/07/2020 2:00 am  

அன்பர்களே

ஒருசில  சிறந்த ஒளிப்பதிவுக்கலைஞர்களின் பெயர்களை சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இந்தப்பதிவில் திரு ஸ்ரீதருடன் பணியாற்றிய கலைஞர்கள் ஒளிப்பதிவில் வெளிப்படுத்திய சில மேன்மைகளைக் காண்போம் .

அ .வின்சென்ட் :   மிகவும் சிறந்த காமிரா கோணங்களும் ஒளி அமைப்பு திறமைகளும் இவருக்கு சிறு வயது முதலே மனதில் வேரூன்றி இருந்ததோ என்று நினைக்கும் படி அவரது இளமைக்கால செயல்பாடுகள் உணர்த்துகின்றன. அவரது தந்தையார் [திரு .அலோஷியஸ்] ஒரு புகைப்படக்கலைஞர் ; ஒரு போட்டோ ஸ்டூடியோ வைத்திருந்தார். ஒரு சமயம் வின்சென்ட் [தகப்பனார் வெளியே சென்றிருந்த நிலையில் ] ஸ்டுடியோவில் இருக்க , அந்த மாவட்ட கலெக்டர் , தனது மகளுடன் வந்து அந்த பெண் ஒரு நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதனால்அவசரமாக  சில படங்கள் எடுத்துதரவேண்டும் என்று கேட்க, சற்றே தயங்கிய வின்சென்ட் தந்தையார் இல்லை நான் வேண்டுமானால் சில கோணங்களில் படம் எடுத்துதருகிறேன், பிடித்திருந்தால் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று சொல்லி UNCONVENTIONAL LIGHTING மற்றும் கோணங்களில் படம் பிடித்து சிறப்பாக பிரிண்ட் செய்து கொடுக்க ,அவரது படங்கள் ஏற்படுத்திய தாக்கம் அப்போதே அவ்வூரில் பிரபலம் என்று சில பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். தவிரவும் படத்தின் "IMAGE PROCESSING” என்னும் DARKROOM தொழில் நுட்பம் குறித்த ஆழ்ந்த ஆர்வம் இருந்ததை நாம் உணரும் வகையில், அவர் தனது படச்சுருள் எவ்வாறு PROCESS செய்யப்படவேண்டும் என்ற அளவுகோல் நிர்ணயிக்கும் அளவிற்கு திறன் படைத்தவர் என்று முன்னரே தெரிவித்திருந்ததை நினைவூட்டுகிறேன். பின்னர் calicut இல் இருந்து சென்னை வந்தவர் ,ஜெமினிநிறுவனத்தில் கமல் கோஷ் குழுவில் இணைந்தார்.அவரிடம் பல லைட்டிங் நுணுக்கங்கங்களைப்பயின்று, பின்னர் வீனஸ் குழுவில் இணைந்தார். பிறகு ஸ்ரீதருடன் சித்ராலயா படக்குழுவின் தலைமை ஒளிப்பதிவாளர் ஆனார். ஸ்ரீதரின் படங்களில் ஒளிப்பதிவு சிறப்பாக இருக்கும் மற்றும் visual presentation புதுமையாகவும் இருக்கும் என்ற முத்திரை பதித்ததில் வின்சென்ட்-சுந்தரம் ஆற்றிய பங்கு மகத்தானது. வின்சென்ட் சுந்தரம் பணியாற்றிய  கருப்பு வெள்ளை படங்கள்  பலவற்றில் சீரான ஒளிப்பதிவையும் அவற்றை நான் எழுதித்தான் பிறர் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நிலை இல்லை என்பதாலும், " காதலிக்க நேரமில்லை' படத்தின் ஒளிப்பதிவை நினைவு கொள்வோம் என்று கூறி அடுத்த தகவலுக்குச்செல்வோம். வெண்ணிறஆடை மற்றும் கலைக்கோவில் படங்களில் வின்சென்ட்-சுந்தரம் பணியாற்றவில்லை மாறாக அவர்கள் சித்ராலயாவில் இருந்து பிரிந்து 'FREELANCER' களாக பயணித்தனர்.

என். பாலகிருஷ்ணன் : கலைக்கோயில் படத்தில் ஸ்ரீதருடன் இணைந்தார். அதற்கு முன் ஜெமினி நிறுவனத்தில் .திரு எல்லப்பா வுடன் நீண்டகாலம் பயணித்தவர். மேலும் அவருடன் ஹிந்தி மற்றும் தமிழ்ப்படங்களை ஒளிப்பதிவு செய்து அனுபவம் பெற்றவர்.  கலைக்கோயில் மற்றும்  நெஞ்சிருக்கும் வரை  இரண்டிலும் பின்னர் "அலைகள்" படத்திலும்  கருப்பு வெள்ளையில் சிறப்பாக ஒளிப்பதிவு செய்திருந்தார். மூன்றுமே  பாடல் பதிவில் [ஒளி மற்றும் ஒலி ] படத்திற்கு வலு சேர்த்தன. பின்னர் வண்ணத்தில் ஊட்டி வரை உறவு, சிவந்தமண் இரண்டிலும் சிறப்பான ஒளிப்பதிவு பரவலாக பாராட்டு பெற்றதை நாம் அனைவரும் அறிவோம்.                                                                                                                                                               யு .ராஜகோபால் : அவளுக்கென்று ஓர் மனம் படத்திற்காக சித்ராலயா நிறுவனத்தில்  ராஜகோபால் நீண்ட  காலம் திரு மார்கஸ் பார்ட்லே  உடன் பணியாற்றியவர்: மேலும்  திரை உலகில் நன்கு  அறியப்பட்டவர். அ .ஓ .ம படத்தில் பாடல் காட்சிகளில் கேமரா வின்  பணி சிறப்பாக இருந்ததை நாம்  அறிவோம்.

இவ்வனைத்திலும் அமைந்த சிறப்பு என்னவெனில் அனைவரின் திறமைகளும்  போற்றுதலுக்குரியது.       ஆனால் என்னுடைய  தனிப்பட்ட கருத்து யாதெனில் ஸ்ரீதர்- வின்சென்ட் -சுந்தரம் கூட்டு மிக சிறப்பானது. அதற்கு வெகு அருகில் வரக்கூடியது ஸ்ரீதர்- என்.பாலகிருஷ்ணன் இவர்களின் ஆக்கங்கங்கள். நான் எவரையும் குறைத்து மதிப்பிடுவதாக அன்பர்கள் கருதவோ வருந்தவோ வேண்டாம். நான் சொல்ல  விழைவது -எனது  பார்வையில் ஸ்ரீதர் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் இடையே மலர்ந்த ஆழமான புரிதல் பற்றியது. இதனால் தான் இயக்குனர்-ஒளிப்பதிவாளர் இயைந்து  திரைப்படத்தினை மிகுந்த உயரத்திற்கு எடுத்துச்செல்லும் ஊக்கமும் திறமையையும் உள்ளடக்கிய ஒரு இரு/அல்லது மும்மன ஆளுமை என்றே நான்  நம்புகிறேன்.                                                                                                              

மேலும் வளரும்                                 அன்பன்                           ராமன்   மதுரை         


Quote
Share: