ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications
Clear all

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்-71  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 2 years ago
Posts: 210
31/07/2020 1:54 am  

அன்பர்களே                              அ  .வின்சென்ட்

சென்ற பதிவில் இயக்குனர்-ஒளிப்பதிவாளர்[கள்] ஆழமான புரிதலுடன் இயங்குவது மிகவும் தேவை. இதனால் ஆஸ்தான ஒளிப்பதிவுக்கலைஞர்கள் ஏற்பட்டனர்  என்றே எண்ண வேண்டியுள்ளது, பின்னாளில் சிறந்த பயிற்சி நிலையங்களில் பயின்று THEORY அண்ட் PRACTICE இரண்டையும் உணர்ந்த கலைஞர்கள் உருவானதால் அவர்களால் முறையாக பயணிக்க முடிந்தது. ஆனால் நாம் சந்திக்கும் 1960-75 காலம் வெறும் அனுபவ மூலதனத்தில் செயல் பட்ட தொழில் நுட்பக்கலைஞர்கள்.

இதற்கு ஒரு சிறிய உதாரணம் அன்றைய வண்ண படங்களில் நாயகியர் முகங்களில் எவ்வளவு முகப்பூச்சு இருந்தது என  நாம் கவனித்தால் விளங்கும். நாயகியரின் இயற்கை வண்ணத்தை மெல்லிய பூச்சில் மாற்றிஅமைத்தால் போதும் என்ற வண்ணப்பதிவு [colour recording] குறித்த முன் அனுபவம் இல்லாமை என்பதை உணர்த்தும் எடுத்துக்காட்டாக அன்பர்கள் முன் வைக்கிறேன். 

 அந்த நிலையில் கூட வின்சென்ட்- சுந்தரம் , மார்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவு செய்த படங்களின் ஒளிஅமைப்பு  மற்றும் முகப்பூச்சு சீராக செய்யப்பட்டிருந்ததை நினைவு கூறுங்கள். [ இவை முறையே காதலிக்க நேரமில்லை, மற்றும்  செம்மீன் [ பின்னர் , சாந்தி நிலையம் ]. முன்னதில் திரு ரவிச்சந்திரனின் இணையாக தோன்றிய பெண் பாத்திரத்திற்கு எவ்வளவு கவனமாக make -up செய்யப்பட்டிருந்தது . வின்சென்ட்- சுந்தரம் அவ்வப்போது நூல்களை படித்து தொழிலுக்கு தேவையான செயல் முறைகளை அறிந்து வைத்திருந்தனர் என்பதன் வெளிப்பாடாக இதனை குறிப்பிடுகிறேன். இதனால் தான் இந்த ஒளிப்பதிவாளர்கள் தென்னகத்தின் பெருமைகள் ஆயினர். .ஒரு சிலர் மேக்-அப் கலைஞனின் திறமையை ஏன் ஒளிப்பதிவாளருக்கு  உரித்தாக்குகிறாய் என்று கேட்கக்கூடும்.  முறையான மேக்-அப் இல்லையெனில் படப்பிடிப்புக்கு உகந்ததல்ல என்று நிராகரிக்கும் உரிமையும் AUTHORITY எனும் அதிகாரமும்  எந்த ஒளிப்பதிவாளருக்கும்  உண்டு ; இவ்விஷயத்தில் வேறு எவரும் குறுக்கிட மாட்டார்கள். எனவே ஒளிப்பதிவாளர் நிர்ணயிக்கும் அளவுகோல்களை உணர்ந்து தான் ஒப்பனைக்கலைஞர்கள் பணியாற்றுவர். திரு வின்சென்ட் ஒரு அருமையான SCENIC PAINTER என்பதால் அவர் மாறுபட்ட பல புதிய அணுகுமுறைகளை செயல் படுத்தினார். அவற்றில் சிலவற்றை இப்போது விளக்க முற்படுகிறேன்.

1 ஒரே நடிகர் இரு வேடங்கள் ஏற்கும் காட்சிகளில் கேமரா லென்ஸ் 2 பாதிகளாக தனியே மறைத்து ஒரு பாதியில் பதிந்த பின் மீண்டும் பிலிமில் மறு  பாதியில் வேறு உடையில் தோன்றுதல்  'இரட்டை வேடம் ' புனைந்ததாக திரையில் தோன்றும் ; ஆனால் இரு பகுதிகளுக்கு இடையில் மெல்லிய நிழல் கீற்று இருந்து கொண்டே இருக்கும்.  இதில் இருந்து மீள வின்சென்ட் ஒரு புதிய உத்தியாக ஒளியை இருபகுதிகளிலும் துல்லியமாக கட்டுப்படுத்தி [இடையில் கோடு இல்லாமல் ] இரட்டை வேடக்காட்சிகளை பதிவு செய்து அனைவரையும் வியக்க வைத்தார் "உத்தம புத்திரன் " படத்தில் . இதற்கு அவர் "lighting mask " என்று பெயர் சொல்வார்.

2 கருப்பு வெள்ளை படங்களுக்கு படப்பிடிப்பின் பின்னணியில் பொதுவாக காவி நிறம்  பயன்படு த்துவர் . இதை மாற்றி வேறு வண்ணங்களை திறமையாக பயன் பாட்டுக்கு கொண்டு வந்து காட்சிகளில் ஒரு தெளிவான தன்மை யினை மேலோங்கச்செய்தார்.

3 Diffuser எனும் உத்தி காட்சியின் மையப்பகுதி நீங்கலாக மற்றவைகளை மங்க வைத்தல் எனும் பணியை நிறைவேற்றுதல் . இதற்கு வெவ்வேறு அளவுகளில் மங்கல் தன்மை உள்ள சமதள கண்ணாடிகளை உபயோகித்து வந்த காலத்தில் வின்சென்ட் ஒற்றை கண்ணாடியில் அனைத்து diffusion களையும் vaseline உபயோகித்து அதே விளைவுகளை திரையில் காட்சிப்படுத்துபவர், ஒரே கண்ணாடி போதும் எதற்கு பல கண்ணாடிகளை தூக்கிக்கொண்டு அலைய வேண்டும் என்பார்.

4 முன் களம் , மைய களம்  மற்றும் பின் புலம் அனைத்தும் ஒரே  focus ல் வரச்செய்யும் வித்தைதனை நன்றாக அறிந்தவர். சான்றாக எங்க வீட்டு பிள்ளை படத்தில் "பெண் போனால்" பாடல் காட்சியில் நீண்ட நெடிய அமைப்பில் பிருந்தாவன் அணைக்கட்டு இரவில்  ஒளிரும் வண்ண விளக்கொளியில் கடைமுனை வரை தெளிவாக பதிவு செய்திருப்பது இப்போதும் கூட வியப்பைத்தருவது.

5 அவர் பிலிம் களின் செயல் திறன்களை நன்கு அறிந்தவர் . எனவே தேவையான லைட் value அமைத்து பதிவேற்றிய படச்சுருளை இந்த gamma range க்குள் அமையும் படி process செய்யவேண்டும் என்று LABORATORY TECHNICIAN களுக்கு சொல்லி விடுவாராம். அவரின் தேர்வு GAMMA 6.5 -- 6.8 அளவில் அமைய வேண்டும் . அதற்கேற்றபடி பிலிம்தன்மைக்கேற்ப ஒளிஅமைப்பை செய்துகொண்டு GAMMA அளவை சொல்லி process செய்ய சொல்வாராம். இதனால் laboratory பணியாளர்கள் மிக கவனமாக வின்சென்ட் கருத்துகளை நிறைவேற்றி விடுவார்கள் என்று வின்சென்ட் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.   இவை உணர்த்துவது என்ன வென்றால் , தொடர்ந்து தொழில் முறை நுணுக்கங்களை மேம்படுத்தாமல் எந்த துறையிலும் முன்னேற்றம் அடைய முடியாது. என்பது தான்.

இனி  பிறவற்றை பின்பு  காண்போம்.              அன்பன்  ராமன்   மதுரை


Quote
Share: