ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்-46  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 127
09/04/2020 11:42 am  

Mysore என்னை பல விதங்களில் மேம்படுத்தியது , எனது அற்ப சொற்ப ஆங்கில அறிவு, மேடை விவாதம், திறனாய்தல் என்ற பல பரிமாணங்களுடன் , திரைப்பட பார்வை நுணுக்கம் பெற்றமை அனைத்துக்கும் களம் , காலம் இரண்டும் எனக்கு வாய்த்தது Mysore நகரில் தான். அன்றைய கன்னடர்கள் பிறருடன் வெளிப்படையான தன்மையுடன் பழகுவர். பிற மொழிகளை தயக்கமின்றி ஏற்பர். பின்னாளில் இவை சிதைவுற்றமைக்கு பல காரணங்கள் -குறிப்பாக மொழிப்போர் ஒரு பெரும் விளைவை ஏற்படுத்தியது. அது போகட்டும். அந்த காலகட்டத்தில் நெஞ்சில் ஓர் ஆலயம், போலீஸ் காரன் மகள் , சுமைதாங்கி , காதலிக்க நேரமில்லை , கலைக்கோயில் , வெண்ணிற ஆடை என்ற பட்டியல் ஸ்ரீதருக்கானவை.  அதே ஊரில் ஏனைய படங்கள் வெளியான வற்றில் குறிப்பிடத்தக்கன -பாவ மன்னிப்பு, பாலும் பழமும், பெரியஇடத்துப்பெண் , பணம் படைத்தவன், புதிய பறவை, படகோட்டி, ஆண்டவன் கட்டளை , எங்கவீட்டுப்பிள்ளை , கர்ணன், திருவிளையாடல் என  நீண்ட  பட்டியல்.

பாவமன்னிப்பு காலத்தால் முந்தையது, ஆயினும் அப்படப்பாடல்கள் திரை இசையில் வேறு ஓர் திசை நோக்கி பயணித்ததை கன்னடர்களும் வெகுவாக சிலாகித்தனர். கன்னட மொழியில் பாட்டு புத்தகத்தை வாங்கி வைத்துக்கொண்டு, என் போன்ற நண் பர்களிடம், வார்த்தைக்கு அர்த்தம் கேட்டு குறித்துக்கொண்டு , கவிஅரசரையும், வி, ரா வையும் பெரும் ஆச்சரியத்துடன் விவாதிப்பதை பார்த்து, அவர்களின் வாழ்வில் அக்காலத்தில் தமிழ் சினிமா ஒரு இன்றியமையாத தேவை ஆகி விட்டிருந்தது என புரிந்து கொண்டேன்  . ஒரு சில கன்னடப்படங்களும் , புராண/  ராஜ- ராணி வகை கதைகள் , எனவே தமிழ்ப்பட மார்க்கெட் கர்நாடகத்தில் நன்கு வியாபித்திருந்ததை உணர முடிந்தது.

இந்த நிலை அநேக தமிழ்  படங்களுக்கு  நீடித்தது . இந்த  சூழலில் ஸ்ரீதர் பெரும் தாக்கத்தை தொடர்ந்து ஏற்படுத்திவந்தார். இவற்றை எனது கல்லூரி நாட்களில் அறிந்து ஸ்ரீதரின் பெரும் ரசிகன் ஆனேன்.  எனக்கு விஸ்வநாதனின் அருமை பெருமைகளை உணர்த்தியவர் நம்ம நண்பன் கனகசபை அதுவும் பள்ளி இறுதி வகுப்பில். அது ஒர் மாறுபட்ட அனுபவம் .சற்று நகைச்சுவையானதும் கூட.

ஆம் காலை 11.00 மணி வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது பள்ளியில் ஆசிரியர் ஒரு புறம் மாணவர்கள் வேறு புறம் என்று சள சள என்று சப்தம். திடீரென்று வகுப்பு கப்சிப் . பக்கத்தில் ஒரு கல்யாண வீட்டில் இருந்து 'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்' பாடல் சீரான தாள க்கட்டுடன் , சுசீலாவின் குதூகலக்குரலில். ஆசிரியருக்கு ஒரே மகிழ்ச்சி  மாணவர்களை அடக்கி வைத்து பாடம் நடத்தி விட்டதாக ஒரு கற்பனையில்.அவர் பேசிக்கொண்டே இருந்தார். பாடல் முடிந்ததும் மீண்டும் சலசலப்பு - ஒரே இரைச்சல்.. என்னடா ஆச்சு உங்களுக்கு , திடீரென்று கூச்சல் போடுகிறீர்களே  என்று அவர் கத்த எங்களுக்கு ஒரே உள் சிரிப்பு; அவ்வளவு வெகுளி அவர். ஒருவழியாக அந்த வகுப்பு முடிந்து அடுத்த வகுப்பும் ஆயிற்று - உண வு இடை வேளை - கனகசபை ஒரே பாய்ச்சலில் ஓடி வந்தான். என்னடா பாட்டை கேட்டாயா அந்த எந்தப்படம்? -பாடியது யார் . யார் ம்யூசிக் என்று கேள்வி மேல் கேள்வி. நான் மலங்க மலங்க விழித்துக்கொண்டு தெரியல என்றேன்.  அவன்: பின்ன மண்டைய ஆட்டி ஆட்டி ரசித்தாயே -ப் பூ அவ்வளவு தானா என்று ஏளனமாக முறைத்துவிட்டு  , அவன் "பாக பிரிவினை -சுசீலா என்றான்; அடுத்து அர்ச்சனை -முண்டம் இது விஸ்வநாதன் ராமமூர்த்தி என்றான். நேரம் காலம் தெரியாமல் நான் -அப்படீன்னா என  முடிக்குமுன்  அவன் "லூசு   வி -ரா  ம் யூஸிக்டா என்றான். [ அதற்கு முன் சினிமாவைப்பற்றி ஏகமாய் சிலாகித்தவன் அன்று தான் முதலில் இசை பற்றி பாலபாடம் துவங்கினான் இனி என் குடுமி அவன்  கையி ல்.இதை வைத்து அவன் என்னிடம் சயன்ஸ் , கியாக்ராபி என்று கொல்ல ப்போகிறான் -என்று முடிவுக்கு வந்தேன். அதே போல நடந்தது அடுத்த சில நாட்களில் ]. இது தெரியாம என்னடா பாட்டுக்கேட்கிற ? என்று கோபாவேசமாய் பார்த்தான். இதெல்லாம் எப்பிடிடா தெரியும் என்று நான் சமாளிக்க படத்தில பேர் லாம் போடுவான்பாரு அதுல இருக்கும் என்றான். நான் தான் படமே பாக்கலியே என்றேன் . அவன்  ம்ம் அப்படி வா. பாக்காட்டி என்ன விஸ்வநாதன் ராமமூர்த்தி பா ட்டு சும்மா செதுக்கி வெச்ச  சிலை மாதிரி பளிச்ன்னு தெரியும் டா லூசு என்று மீண்டும் 'லூசு' பட்டம் வழங்கினான்.  எனக்கு அவ்வளவு தெரியாதுடா என்றேன். அதற்கு அவன்  'எல்லா பாட்டும் கேளு, வி-ரா பாட்டு தனியா இருக்கும்; தாளம் சும்மா கனல் தெறிக்கும் என்று தனது மிருதங்க ரசனையை அங்கே பதிவிட்டான். அடிக்கடி பாட்டை பத்தி கேப்பென் -சரியா சொல்லணும் ஆமாம் என்று ஆசிரிய தோரணையில் என்னை எச்சரித்தான். அடுத்த நாள் மதியம் அவனே "தங்கத்திலே" பாடலை வாயால் பாடி டேபிளில் தாளம் போட்டு "தாள நடையை கவனி" எவ்வளவு நல்ல வாசிப்பு -அடுத்த தடவை அந்த பாட்டை தாளத்தை கவனித்து கேளு -அப்ப புரியும் விஸ்வநாதன்    -ராமமூர்த்தி பாட்டு னா என்ன என்று ஒரு ஆழமான தேர்ச்சியுடன் பேசி என்னை எம் எஸ் வி -டி  கே ஆர் பற்றிய புதிய தேடலு க்கு  வழி காட்டினான். இப்படியாக பள்ளி கல்வி ஈடேற அதன் பின்னர் கனகசபையை நான் பார்க்கவே இல்லை. அவர் எங்கிருந்தாகிலும் வாழ்க என்று அவ்வப்போது நன்றியுடன் நினைவு கூர்கிறேன்   Regards      K.Raman  Madurai


Quote
Share: