ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -43  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 127
23/03/2020 10:45 am  

திரு. ஸ்ரீதரை ஒரு சகாப்தம் என்று பேசுவதற்கு 'பல' அம்சங்கள் உண்டு . இன்றைய நமது பார்வை அவரது அன்றைய சில வசன அமைப்புகள்.  மெல்ல மெல்ல , இலக்கண அமைப்புகளில் இருந்து விலகி , அன்றாட உரையாடல் முறைக்கு வசனங்களை கரை சேர்த்த பெருமை ஸ்ரீதருக்கு உண்டு.. இதற்கு சான்று தேட விழைவோர் 1965-66 மற்றும் அதை ஒட்டிய திரு கே.எஸ் கோபாலகிருஷ்ணனின் வசன அமைப்புகளை பார்த்தால்  தமிழ்த்திரை பயணித்த நடைமுறைகள் புலப்படும்.  நமது தேவை ஒப்பீடுகள் அல்ல. 

எனவே நேரடியாக ஸ்ரீதர் பற்றி அலசுவோம்.                                                                          அன்பர் வி.கே , ஸ்ரீதர் கூட இலக்கண வசனங்கள் எழுதியிருக்கிறார் என்று சொல்வதுண்டு ; மறுக்கவில்லை : ஆனால் எப்படி மெல்லிசை மன்னர்கள் கர்னாடக இசையின் அமைப்பில் இருந்து பாடல் வடிவங்களை மெல்லிசை அமைப்பிற்குள் அழைத்து வந்தனரோ -அதே போல வசனங்ககளின் இயல்பான பாங்கினை ஸ்ரீதர் தனது பொறுப்பில் அமைந்த படங்களில் அழகாக படர விட்டார் என்பதே எனது பார்வை..

சரி. நெஞ்சம் மறப்பதில்லை படம் பற்றி சில தகவல்களை பார்ப்போம். முற்றிலும் மாறுபட்ட கதை, பூர்வ ஜென்ம நினைவில் சிக்கிக்கொண்ட இளைஞன் நண்பனின் கிராமத்திற்கு விடுமுறையில் வந்த போது , பாழடைந்த பங்களா , அதற்கு சுற்றியுள்ள வனம் போன்ற பகுதிகளை கண்டவன் , பூர்வ ஜென்மத்து நினைவுகளின் சரித்திர பதிவுகளாக பார்த்தது மட்டுமல்ல, நண்பனின் தங்கையின் உருவத்தில் தனது அந்நாளைய காதலியையும் பார்த்து மிகுந்த குழப்பமடைகிறான்.

இப்படத்தில் முக்கியமான எதுவும் இரு முறை காட்சிப்படுத்தப் படும் -ஒன்று முந்தைய பிறவி, இரண்டாவது இன்றைய பிறவி. முற்பிறவி வசனங்கள் இலக்கண சுத்தமாக , இப்பிறவி வசனங்கள் யதார்த்த நடையில். முதலி ல் தமிழில் திரைப்படத்தில் 'காமெடி ட்ராக் '.என்ற அமைப்பு இந்த படத்தில் தோன்றி இருக்கக்கூடும் என்ற உணர்வு மேலிடுகிறது. நகைச்சுவையை  -பேசும் முறையில் கூட அமைக்க முடியும் என்ற நுணுக்கம் இப்படத்தில் அரங்கேறியுள்ளது .    இந்த படத்தின் சிறப்பே , மிகக்குறைந்த வசனங்களும், தெளிவான காட்சிஅமைப்புகளும் தான். ஆமாம், காட்சிகளில் திகில் ஏற்படும் , வசனத்தில் அச்சுறுத்தும் சொற்கள் இல்லை. இப்படத்தின் இரு வசனங்கள் படத்தின் மைய கருத்தை சுமப்பன எனில் மிகை அல்ல. 1. தனது காதலியை தந்தை சுட்டு வீழ்த்தியதை கண்ட மகன் [இளையஜமீன்] , "நீங்கள் காதலர்களை சுடலாம் -ஆனால் காதலை சுடமுடியாது என்று சூளுறைப்பது ; 2 . தந்தை [ஜமீன்தார் -எம்.என் நம்பியார் ] எவ்வளவு பிறவி எடுத்தாலும் அவளை [தேவிகா ] அழிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் செய்வது. இந்த இரு வசனங்களும் கதையின் ஆணி வேர். இதன் தொடர்ச்சியாக கிளைமாக்ஸ் காட்சியில் தேவிகாவை கண்ணுற்ற நம்பியார் கொலை வெறியுடன் அலையும் கிழவனாக , அவளை  சுட எத்தனிக்க , முன்னோக்கி வரும் தேவிகாவை நேருக்கு நேர் சுடுவதற்காக பின்னோக்கி நகர்ந்து சென்று புதைகுழியில் சிக்கி  நம்பியார்அழிவதாக அமைக்கப்பட்டுள்ளது.

நாகேஷ் -மனோரமா உரையாடல்கள் மிகவும் வினோதமானவை. ஒவ்வொரு சொல்லும் "ங்கிறே ன் "  என்று முடியும் .

நாகேஷ்= வா"ங்கிறே ன்"   மனோரமா= ஏன்"கிறேன்"

நாகேஷ்= உக்காரு 'ங்கிறேன்"  பார்த்தால் மிக சாதாரணமாகத்தோன்றும் இவை பேசப்படும் முறையில் சிரிப்பை வரவழைக்கும். இது போல,  படம் முழுவதும் எளிமையான உரையாடல்கள் அமைந்துள்ளன. தன் காலத்திற்கு முந்திய எண்ண ஓட்டங்களால் , புதிய கோணங்களில் கதையை நகர்த்தும் வித்தையை சிறப்பாக செயல் படுத்தியவர்.

இதோ மேலும் சில வசன அமைப்புகள்.  " எனக்கு ஒரு நல்ல அம்மாவை கொடுத்த ஆண்டவன் , அந்த அம்மாவுக்கு ஒரு நல்ல பிள்ளையை கொடுக்காம விட்டுட்டார்." [சிவாஜி ஒரு பொறுப்பற்ற   மனிதனாக பேசும் வசனம் "  புனர் ஜென்மம் " படத்தில் . நம்ப ஊருக்கு ரயில் ல போனா மாமனார் இன்ஜின் லேயே போய்  இறங்கி டுறாரு” படம் "மாதர் குல மாணிக்கம்"   

நோயாளி மனோரமா வை ஒரு தலையாய் நாகேஷ் காதலிக்க , ஆனால் இறுதியில் சிகிச்சை முடிந்து அவளை வீட்டிற்கு முறைப்பையன் மாணிக்கம் அழைத்து போகிறார். அப்போது மனம் உடைந்த நாகேஷ் அவர்களை வாழ்த்தி அனுப்பும் கட்டம். "மாணிக்கம் [ராம ராவ்]]   விடை பெறு ம் போது  , நாகேஷ் "மாணிக்கம் உனக்கு மனசுலயும் மண்டைலையும் ஒண்ணும் இல்லைனு எனக்கு தெரியும் , போய் வா ' என்பார் . படம் 'நெஞ்சில் ஓர் ஆலயம்" 

காதலிக்க நேரமில்லை படத்தில் சச்சு, நாகேஷை மணந்துகொள்ள முடிவு செய்துவிட அவளது தகப்பன் உனக்கு சம்மதம் தானே என்று கேட்க, சச்சு "நான் என்ன சொல்ல போறேன் " என்றதும் நாகேஷ் வேகமாக இடைமறித்து

"ஏதாவது சொல்லிடப்போற" என்று பதறுவது ஒரு முத்திரைக்காட்சி.

இது போன்ற காட்சிகளை ஸ்ரீதர் படத்தில் ஆங்காங்கே காணலாம்.  மேலும் தகவல்களுடன் பின்னர் சந்திப்போம் .

அன்பன்  ராமன்   மதுரை.  


Kothai liked
Quote
Share: