ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம்- 38  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 104
08/03/2020 3:47 am  

அன்பர்களே

அவளுக்கென்று ஓர் மனம் குறித்த நமது அலசல் தொடர்கிறது  இந்த பகுதியில் நடிப்பு குறித்த சில தகவல்கள் / நினைகூறல் :  ஜெமினி மற்றும் காஞ்சனா இருவருக்கும் உணர்ச்சிமயமான பங்களிப்பிற்கு வாய்ப்பில்லை . எனினும் இருவரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளனர்

காஞ்சனா :   ஏழ்மை சூழலில் கல்லூரி மாணவியாக துவக்கம். பெண்களை பிடித்து பின்னர் பீடிக்கும் கயவன் முத்துராமன் -இருவரும் ஒரே தெருவில். பெண்களை குறி வைத்து வீழ்த்தும் வார்த்தை ஜாலம் மிக்கவன். காஞ்சனாவை கடிதம் கொடுத்து வளைக்கிறான். ஆனால் அவன் பிற பெண்களையும் ஆளுமை செய்கிறான் என்று உணர்ந்த காஞ்சனா அவனிடமிருந்து விலகி விட , அவ்விடத்திற்கு பாரதியை அவன் பிடித்துவிட , பின்னர் நிகழ்வுகள் தான் படம் மழைக்கு பார்க்கில் ஒதுங்கிய காஞ்சனா ,திடீர் இடி ஓசையில் மிரண்டு அங்கே இருந்த ஜெமினியை பற்றிக்கொள்ள , ஜெமினிக்கு தீ பற்றிக்கொள்ள , ஜெமினி, காஞ்சனா மோகத்தில் . ஒரே வினாடியில் சுதாரித்துக்கொண்ட காஞ்சனா , மிகுந்த குற்ற உணர்வுடன் வெட்கம் பிடுங்கித்தின்னும் முக பாவத்துடன் ஓடி மறையும் இடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். திருமணத்திற்கு முன் பாரதியின் தோழியாக ஜெமினி உள்பட மூவரும் உணவகம் செல்ல , மெனு கார்டை பார்த்து மிரண்டு 'எனக்கு இதெல்லாம் தெரியாது 'என மிரட்சியுடன் கெஞ்சும் தோரணையில் காட்டிய முக பாவம் காஞ்சனாவின் தேர்ந்த நடிப்புக்கு அடையாளம். தனது திருமணத்தை காண முத்துராமன் வருவதை கண்டதும் , கோபமும் வெறுப்பும் ஒரு வினாடி முகத்தில் படரவிட்டு பண்பட்ட நடிப்பை காட்டியுள்ளார்.

பிற்பகுதியில் பாரதியை அவளின் குடும்பமே வெறுத்து , அவளை வெளியேற்ற முற்படும் காட்சியில் , காஞ்சனா தனது மாமனாரிடம் பாரதியை மன்னிக்கும் படி வேண்ட பாரதி காப்பற்றப்படும் இடத்திலும் காஞ்சனா மிக இயல்பான நடிப்பை வெளியிட்டுள்ளார்.                                                                                                                ஜெமினிக்கும் அதிகமான சுமை இல்லாத பாத்திரம். பொருத்தமாகவே செய்திருந்தார். ஆனால் இந்த  படத்தில் பாரதி அனைவரையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார் நடிப்பில் .ஆம் இவ்வளவு ஆழமான உணர் வுகளை வெளிப்படுத்தும் latent talent பாரதியிடம் இருப்பதை ஸ்ரீதர் எவ்வாறு கணித்தார் என்பது ஒரு சிறப்பான ஆய்வுக்களம் . ஒரு வேளை  அவர் ஏதாவது கன்னட படத்தில் இது போன்ற ஒரு நடிப்பை 1965  களிலேயே பார்த்திருக்கக்கூடும். இந்த எனது எண்ணத்தை சரியான நேரத்தில் விளக்குவேன்.  நெடிதுயர்ந்த ஒல்லியான உருவம், வசீகர முகம் , எந்த உடை அணிந்தாலும் பொருத்தமான தோற்றம் என்று அக்காலத்திய ஹிந்தி நடிகைகளுக்கு இணையான உடல் அமைப்பு. இத்தைகையோர் பெரும்பாலும் காதல் காட்சிகளுக்கு மெருகூட்டுவது என்ற அளவிலேயே உலா  வந்த காலத்தில் இப்படி ஒரு கனமான  பாத்திரத்தை  மிக எளிமையாக /நேர்த்தியாக ஊதி தள்ளிவிட்டுள்ளார். தமிழ் உச்சரிப்பிலும் நேர்த்தியான பாவம் . ஒரு மகோன்னத நடிகையை கோலிவுட் பயன் படுத்திக்கொள்ளவில்லை. எப்போதும் தனிமைப்படுத்த பட்டுள்ளோம் என்று நினைத்து ஒரு நட்பை தேட அது அவளின் அமைதிக்கும் கற்புக்கும் ஒரு நிரந்தர துயரமாய் நீடித்துவிடுமோ என்ற கவலையில் வாழ்பவர். தனக்கென தனிமையை தேடும் அளவுக்கு கசப்பான கொடூரன் நண் பன் என்ற போர்வையில்.  .அதிலும் அவளை குடும்ப மானம் என்ற பெரிய அச்சத்தை காட்டி இப்போதே வா என்று எந்த நேரத்திலும் துன்புறுத்தும் வில்லன் முத்துராமன். கற்புக்கு விடைகொடுக்க வேண்டிவருமோ என்று இக்கட்டான நிலையில் கரம் கூப்பி கதறும் பாரதியை எந்த காமுகனும் தீண்டாமல் விட்டுவிடும் அளவிற்கு சோகமான கையறு நிலையின் சித்தரிப்பை [சாவித்ரி க்குப்பின் ] பாரதியிடம் கண்டு வியந்தேன். உடல் மொழி, வெளியில் குமரி , உள்ளே குமுறி இளமையிலேயே சோக பிம்பமாக ; இவை மின்னலெனமாறும் முகபாவங்களால் வெளிப்பட பாரதிதான் இவ்வேடத்திற்கு முற்றிலும் பொருத்தமானவர் என்று வலுவாக நிரூபித்திருக்கின்ற பாராட்டுக்குரியவர்கள் ஸ்ரீதரும், பாரதியும். நான் முதல் வெளியீட்டில் படம் பார்த்த போது டைட்டிலில் , பாரதியின் பெயர் முதலிலும் காஞ்சனாவின் பெயர் பிறகும் இடம் பெற்றதை ஏன் என்று குழம்பியதுண்டு. ஆனால் படத்தின் பாத்திர அமைப்புகளை கருத்தில்கொண்டால் , நியாயம் புலப்படும்கத்தியின்றி ரத்தமின்றி என்ற அடுக்குத்தொடர் - அஹிம்சா வழி போராட்டங்களுக்கு பொருந்தும் என்றே கருதும் நம்மிடையே , ஹிம்சை செய்யும் வில்லனாக முத்துராமனும் கத்தியின்றி ரத்தமின்றி நெஞ்சில் ஈரமுமின்றி ஒரு இளம் பெண்ணை ஆட்டிப்படைக்கும் அபாய மனிதனாக படம் முழுவதும் ஆக்கிரமித்து , படிப்படியாக தன்  பிடியை இறுக்கி ,பருந்தின் கையில் சிக்கிய கிளியாக -பாரதியை கொல்லாமல் , கொல்வதும், பின்னர் கொள்ள முயலுவதுமாக அலையும் எரிமலை. முத்துராமன் மென்மையான பாத்திரங்களை திறம்பட கையாண்டு ஒரு நம்பகமான நடிகராக வேரூன்றிய காலத்தில் இப்படி ஒரு கொடூர மனம்  கொண்ட வில்லனாக , பாத்திரத்தை வெறுக்கும் அளவிற்கு ஆழமான நடிப்பை நிறுவி ஒரு புதிய பரிமாணத்தை எட்டினார். சொல்லப்போனால் . தமிழ் திரை வில்லனுக்கான புஸ்திமீசை , முகத்தில் கத்தியின் வெட்டுத்தழும்பு , மிளகு போன்ற ஒரு மரு என்ற அங்க அடையாளங்கள் இல்லாமல் , இயல்பான மனித உருவில் பிறரை துன்புறுத்தி , ஏமாற்றி , சுகபோக வாழ்வுக்கு திட்டமிடும் "scheming man ". இதுபோன்ற யதார்த்த வில்லத்தனம் தமிழில் அபூர்வம். முதல் சந்திப்பில் பண்பட்ட ,மனிதனாக  தோன்றி,எதிராளியை வீழ்த்தி, பின்னர் ரத்தம் உறிஞ்சும் கொடிய நோய் போன்ற பாத்திரம். அதில் ஆண்  பெண்  வேறுபாடின்றி , எதை அபகரிக்கமுடியுமோ அதை       பற்றிவிடுவதே அவன் வாழ்வின் நோக்கம். இன்றைய சினிமாக்களில் கும்பலாக ஒருவனை அரிவாளால் வெட்டி வெளியேற்றும் ரத்தத்தை விட , பாரதியிடம் முத்துராமன் வில்லனாக கத்தியின்றி உறிஞ்சிய குருதி ஏராளம். இந்த வகை பாத்திரப்படைப்பை நல்கிய ஸ்ரீதர் ஒரு மாறுபட்ட சிந்தனையாளர் தான்.

மேலும் தகவல்களுடன் பின்னர் சந்திப்போம் .       அன்புடன் ராமன்    மதுரை


Quote
Share: