ஸ்ரீதர் ஒரு சகாப்தம...
 
Notifications

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் -14  

  RSS

K.Raman
(@k-raman)
Member Moderator
Joined: 1 year ago
Posts: 106
17/05/2019 4:00 am  

அன்பர்களே

                                                          'நெஞ்சில் ஓர் ஆலயம்'

                    இயக்குனர்  ஸ்ரீதர்

இதுகாறும் பல தகவல் களை அலசிய இப்பகுதியில் வேறு பல அம்சங்களை  விவாதிக்க ஏதுவாக மீண்டும் நெஞ்சில் ஓர் ஆலயம் என்ற தலைப்பு பொருந்தும் என நினைக்கிறேன்.

ஸ்ரீதர் ஒரு சகாப்தம் என நான் பல இடங்களிலும் பேசி, எழுதி, விவாதித்து வந்ததனால் சிலர்  என்னை விமர்சித்ததும் உண்டு. எனது பார்வை கண் மூடித்தனமானது அல்ல.  எவ்வாறு அந்நாட்களில் மெல்லிசை மன்னர் மாறுபட்ட உத்திகளினால் அனைவரையும் கட்டிப்போட்டாரோ அதே போல ஸ்ரீதர் ஒரு "MAGNIFICENT NARRATOR ' என்பது நான் உணர்ந்த அனுபவம்..அதனால் தான் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்க முடிந்தது.

திரையில்,கதையை ஒரு காட்சிப்பதிவாக [அதாவது நாடக பாணி இல்லாமல் ஒரு 'VISUAL PORTRAYAL ' என்பதாக' ] தமிழியில் பெரும் மாற்றங்களை உரிய முறையில் செயல் படுத்தியவர். எனவே அவர் "தனது தயாரிப்பில் ஆரம்ப காலங்களில் மிகுந்த தன்னம்பிக்கையோடு ஏராளமான புது முகங்களை பயன்படுத்தினார். சொல்லப்போனால் அவரது அறிமுகங்களில் ஒரு சிலர் நீங்கலாக ஏனையோரை அவர் தவிர்த்து வந்தார். எப்போதும் புதுமுகங்கள் கிடைத்தால் அருமையாக பண்படுத்தும் மற்றும் பயன் படுத்தும் வித்தை அறிந்தவர். . 'அவளுக்கு என்று ஒரு மனம்' என்பதைப்போலவே அவருக்கு என்று ஒரு மனம் என தாராளமாக குறிப்பிடலாம். 

இப்படத்தில் நாம் கணக்கில் கொள்ள வேண்டியன

என்பன  இது ஒரு மகத்தான EXPERIMENT - ஏன்  

  • ஒரே செட்டில் படம்
  •  
  • 18 நாட்கள் படப்பிடிப்பு , இதர பணிகள் 3 நாட்கள் என்ற துல்லியமான

 திட்டம்

3  பெரும்பாலும் புது முகங்களே

 4  ஒரு இறுக்கமான கதைக்களம் -அநேகர் மரண வாயிலில் நின்று கொண்டுஇருக்கிறோம் என்பதை அறிந்துவிட்ட மன நிலையில் [ இது வசனங்களில் வெளிப்படுவதை காணலாம் ]

5  இந்த 18 நாள்  விதிக்குள் பாடல் காட்சிகள் உண்டு

6  ஒரு புறம் படப்பிடிப்புடன் குழந்தை நட்சத்திர தேடல் 

7  இந்த படம் பற்றிய விளம்பரம் ஏதும் வந்ததாக நினைவு இல்லை.

8  ஆரவாரமில்லாமல் வரும் படங்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைத்திருக்கலாம்

9 முதன் முதலாக சித்ராலயா நிறுவனத்தில் மெல்லிசை மன்னர்களின் இசையில் இப்படம்

10  நடிகர் பட்டாளம் -தேவிகா , முத்துராமன், நாகேஷ் மற்றும் கல்யாணகுமார் ஆகியோருக்கு நீங்காத முகவரியும் வாய்ப்புகளும் பெற்றுத்தந்த படம் .

இவை அனைத்திற்கும் காரணி  ஸ்ரீதர்

இவரை பற்றிய பிற கருத்துகளை எனது அடுத்த பதிப்பில் பேச உள்ளேன் .

அன்பன்   நன்றியுடன்   ராமன்                                                           

 


Quote
Share: